பிலிப்பைன்ஸ் நாட்டில் பல எரிமலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றான மயோன் எரிமலை அலபய் மாகாணத்தில் உள்ளது.
தலைநகர் மணிலாவில் இருந்து 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை இன்று திடீரென வெடித்து புகையையும் சாம்பலையும் வெளியேற்றியது. அப்போது 500 மீட்டர் உயரம் வரை அடர்த்தியான சாம்பல் வெளியேறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அந்த நேரத்தில் எரிமலையை சுற்றிப்பார்க்க சென்ற 3 சுற்றுலா பயணிகள் இறந்து விட்டதாகவும், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை வெடித்த நேரத்தில் அவர்கள் அந்த மலைச் சரிவில் நின்றதாக கூறப்படுகிறது. மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு சென்றவர்கள் குறித்து தகவல் சேகரிக்கும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
மயோன் எரிமலை சரியான கூம்பு வடிவ தோற்றத்தை கொண்டுள்ளதால் அந்த எரிமலையை காண சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் வருகிறார்கள்.
மிக ஆக்ரோசமான இந்த எரிமலை இது வரை 48 முறை வெடித்து சிதறியுள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் மூத்த புவியியலாளர் இது நீராவியால் ஏற்பட்ட சிறிய வெடிப்பு மட்டுமே, இதனால் மக்கள் வெளியேறத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்
0 comments:
கருத்துரையிடுக