siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 மே, 2013

வேலைக்குச் செல்லும் கனடா வாழ்//


கடந்த 2008ஆம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார சரிவு இன்னும் முற்றிலும் சரியாகாத நிலையில், இங்கிலாந்து நாட்டிலும் அதன் பாதிப்புகள் இருக்கவே செய்கின்றன.
கனடா லைப் குரூப் இன்சுரன்ஸ் நிறுவனம், பெரும்பான்மையான இங்கிலாந்து மக்களை வடிக்கையாளர்களாகக் கொண்ட ஒரு காப்புறுதி நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் சமீபத்தில் எடுத்த ஆய்வின்படி, பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் சளி, ஜுரம் போன்ற சிறுசிறு பிரச்சினைகளுக்கு விடுப்பு எடுப்பதைத் தவிர்க்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
விடுப்பின் போது சேர்ந்துவிடும் அதிகப்படியான பணிச்சுமை ஒருபுறம் என்றால், தம்முடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் தங்களைப் பற்றி தவறாக நினைக்கக்கூடும் என்ற எண்ணமும் இவர்களை விடுப்பு எடுப்பதிலிருந்து தடுக்கின்றது.
மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் ஜுரம் இருந்த போதிலும், வேலைப்பளுவைக் குறைப்பதற்காக பணிக்குச் செல்லலாம் என்றும், 93 சதவிகிதம் பேர் விடுப்பு எடுப்பதற்கு சளி ஒரு பெரிய காரணமல்ல என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆண்கள் சராசரியாக 3.5 நாட்களும், பெண்கள் 4.4 நாட்களும் விடுப்பு எடுக்கின்றனர்.
ஒருநாள் விடுப்பு எடுப்பது குறித்து கூட யோசிக்க வேண்டியுள்ளது என்று பணிபுரிபவர்கள் கூறுவது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது என்று பால் அவிஸ் என்ற காப்புறுதி அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.
விடுப்பு எடுப்பதால் வேலைப்பணி கூடும் என்பதைத் தவிர, தங்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற எண்ணமே விடுப்பு எடுக்காததின் முக்கிய காரணமாக அவர்களால் குறிப்பிடப்படுகின்றது.
இதனால்தான், 2007ஆம் ஆண்டில் ஐந்து சதவிகிதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம், தற்போது எட்டு சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கின்றது என்று கனடா லைப் காப்புறுதி நிறுவனம் தெரிவிக்கின்றது
 

0 comments:

கருத்துரையிடுக