சவுதி அரேபியாவை சேர்ந்த 2 சிறுவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் வீட்டின் அருகே உள்ள திறந்த வெளியில் உருளைக்கிழங்கு சமைத்துக் கொண்டிருந்தனர்.
அடுப்பு சரியாக எரியாததால் சிறுவர்களில் ஒருவனான பயாஸ் முகம்மது தனது வீட்டில் இருந்து பெட்ரோலை கொண்டு வந்து அடுப்பில் ஊற்ற முயன்றான்.
தவறுதலாக உடன் இருந்த நண்பனின் மீது பெட்ரோல் கொட்டி விட்டது. அவ்வேளையில், அவன் எரியும் அடுப்பை நோக்கி நெருங்கி வந்ததால் சிறுவனின் உடலில் தீப்பற்றி பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சில நாட்களுக்கு பின்னர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பினான். இந்த விபத்தினால் அவனுக்கு பெரிய அளவில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும், தனது மகனின் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற பயாஸ் முகம்மதுவிடம் இழப்பீடு கேட்டு காயமடைந்த சிறுவனின் தாயார் ரியாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பயாஸ் முகம்மதுவுக்கு 9 லட்சம் சவுதி ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 909 ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பைப் பற்றி அறிந்த அவனது தந்தை 11 வயது சிறுவனுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது ஏற்புடையது அல்ல. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக