siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 11 ஜூலை, 2013

பென்ஸ் கார்களுக்கு பிரான்சில் தடை

ஜேர்மனியின் புதியரக மெர்டிஸ் பென்ஸ் கார்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
கடந்த ஜனவரி ஒன்று முதல் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, புதியதாக உருவாக்கப்படும் கார்களில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத ஆர்1234 ஒய் எப் வகை குளிர்சாதனக் கருவிகளையே உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஜேர்மனியின் பென்ஸ் உற்பத்தி நிறுவனமான டெய்ம்லர் நிறுவனம், இந்த வகை குளிர்சாதனக் கருவிகளில் உள்ள வாயு எளிதில் தீப்பற்றிக் கொள்ளும், விபத்து நேரிட்டால் கார் வெடித்துச் சிதறிவிடும் வாய்ப்பும் உண்டு என்று தெரிவித்துள்ளது.
அதனால், இந்த நிறுவனம் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு நம்பகத்தன்மை கொண்ட பழைய வகையான ஆர் 134ஏ குளிர்சாதனக் கருவிகளையே தொடர்ந்து புதிய ரகங்களிலும் உபயோகப்படுத்துகின்றது.
இந்நிலையில் இந்த வகை கார்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
ஆனால் மற்ற எந்த ஐரோப்பிய நாடுகளும் தங்களின் புதிய ரக கார்களுக்குத் தடை விதிக்கவில்லை என்று டெய்ம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஐரோப்பிய யூனியனின் செயல்பிரிவான ஐரோப்பிய கமிஷன் சென்ற மாதம், ஜேர்மன் நிறுவனம் தொடர்ந்து பழைய ரக குளிர்சாதனக் கருவிகளையே தங்கள் வாகனங்களில் உபயோகிக்குமானால் பொருளாதாரத் தடை விதிக்கப்பபோவதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது
 

0 comments:

கருத்துரையிடுக