சமீபத்தில் பிலிப்பைன்சை தாக்கிய ஹையான் புயலுக்கு, நாடே உருக்குலைந்து விட்டது.
தக்லோபான் நகரில் மின்சார அடியோடு துண்டிக்கப்பட்டதால் இரவில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிடது. இதனால் 3 ஜெனரேட்டர்களை இயக்கி நேற்று தெருவிளக்குகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் கார்லோஸ் கூறுகையில், தற்போது 4 கிலோ மீட்டர் தூரம் மின்சாரம் கொடுத்துள்ளோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நகர் முழுவதும் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புயல் பாதித்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உலக வங்கி ரூ.3 ஆயிரம் கோடி(500 மில்லியன் டாலர்) நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது
0 comments:
கருத்துரையிடுக