ஈரான் அணு ஆயுதங்களை குவித்து வருவதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது. ஈரானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரான் தனது புதியவகை விமானம் ஒன்றை இன்று காட்சிக்கு வைத்தது. 30 மணி நேரம் வானில் வலம் வரக்கூடிய இந்த மிகப்பெரிய ஆளில்லா விமானம் விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும். அது இஸ்ரேல் வரை சென்று தாக்க வல்லமையுடையதாகும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் விஞ்ஞானிகள் வடிவமைத்து தயாரித்துள்ள இந்த பொட்ராஸ் ஆளில்லா விமானம் 25,000 அடி உயரத்தில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வல்லமை படைத்ததாகும் என்று கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிராக பல்வேறு தடைகள் இருந்தும், எமது விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள இந்த ஆளில்லா விமானம் ஈரான் ராணுவத்திற்கு அதிக பலம் அதிகரிக்கும் என்றும் ஈரான் கூறியுள்ளது.
முன்னதாக ஈரான் தயாரித்த ஷாஹத்- 129 என்ற ஆளில்லா விமானம் 24 மணி நேரம் வரை பயனித்து அதே 2000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதாகும்.
0 comments:
கருத்துரையிடுக