siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 19 நவம்பர், 2013

றொரண்டோ மேயரின் அதிகாரம் பறிப்பு



    கனடாவில் றொரண்டோ நகர மேயரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் றொரண்டோ நகர மேயர் ராப் போர்டின் சில அதிகாரங்கள்
பறிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக,
1. அலுவலக பட்ஜெட் குறைக்கப்பட்டு மீதமுள்ளவைகள் 2013ல் உள்ள காலாண்டுக்கு மாற்றப்பட்டு, ஜனவரி 1ம் திகதி 2014 முதல் உதவி மேயரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படுகின்றது.
2. மேயரின் உதவியாளர் வேலைமாற்றம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.

3. முதலில் பேசும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
4. அவையின் நிர்வாக குழுத்தலைவர் என்ற பதவி பறிக்கப்பட்டுள்ளதுடன், தலைவர்களை நியமிக்கவும், நீக்கவும் இருந்த அதிகாரம் பிடுங்கப்பட்டுள்ளது.
5. துணை மேயரை நியமிக்க அல்லது பதவியிலிருந்து நீக்க இருந்த அதிகாரமும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சாதாரண அங்கத்தினரை போன்று செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மேயர், கூடவே இருந்து குழிப்பறிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திடீரென என்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு கவுன்சிலர்கள் செய்த சதிச்செயல் என்றும் விமர்சித்துள்ளார்.
 

0 comments:

கருத்துரையிடுக