siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 28 நவம்பர், 2013

முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி நீக்கம் - தேர்தலில் போட்டியிட தடை


வரி மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் அவர், நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முந்தைய விவாதத்தின்போது பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்கள் சிலர், அவரை நெல்சன் மண்டேலாவுக்கு இணையாகப் புகழ்ந்தாலும் அவரது நீக்கம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. பின்னர் தனது இல்லத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பெர்லுஸ்கோனி, இது ஜனநாயக துக்கநாள் என்று விமர்சித்ததுடன் தனது போராட்டம் ஓயாது என்றும் தெரிவித்தார்.
   
இந்த நீக்கத்தின்மூலம், 3 முறை பிரதமர் பதவியை வகித்துள்ள பெர்லுஸ்கோனி, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் அவர் உடனடியாகக் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இருப்பினும் கைதுக்கு வாய்ப்பில்லை என அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 

0 comments:

கருத்துரையிடுக