அமெரிக்காவில் புதிய பட்ஜெட்க்கு ஒப்புதல் கிடைகாமல் கடந்த அக்டோபர் மாதம் அரசு நிறுவங்கள் முடங்கி கிடந்தனர். பலர் வேலை வாய்பை இழக்கும் நிலை ஏற்பட்டது.
இது போன்று ஒரு நிலை அடுத்த 2 ஆண்டுகளில் ஏற்படாமல் இருக்க அமெரிக்க அதிபர் ஒபாமா 2014-2015ம் ஆண்டு பட்ஜெட் திட்டத்தில் கையொப்பம் இட்டார். இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
2014ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகார சட்ட முன்மொழிவில் ஓபாமா கையொப்பமிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு மற்றும் போர் செலவுகளுக்கு 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவை இந்த 2 நிதி ஆண்டு வரவு செலவு திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஓபாமாவும், இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். என்று தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக