சீன விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது; சோவியத், அமெரிக்காவுக்கு அடுத்து சீனா சாதனை
சீனாவின் விண்கலமொன்று இன்று சனிக்கிழமை வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது. Chang'e 3 என இவ்விண்கலத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சந்திரனில் விண்கலமொன்றை வெற்றிகரமாக தரையிறங்கிய மூன்றாவது நாடாகியுள்ளது சீனா. இதற்குமுன் சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய நாடுகள் மாத்திரமே இத்தகைய விண்கலங்களை சந்திரனில் இறக்கியுள்ளன.
அத்துடன் 1976 ஆம் ஆண்டு சோவியத் விண்கலமொன்று சந்திரனில் தரையிறக்கப்பட்ட பின்னர் சந்திரனில் விண்கலமொன்று தரையிறக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இவ்விண்கலத்தில் உள்ள யுட்டு எனப் பெயரிடப்பட்ட ரோபோ வாகனமொன்று சந்திரனின் தரையில் பல மாதங்கள் திரிந்து ஆய்வுகளில் ஈடுபடவுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக