siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 9 டிசம்பர், 2013

தொடரும் பதற்றம்: தேர்தலை நடத்த பிரதமர் இணக்கம்

  தாய்லாந்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு அடுத்த 60 தினங்களுக்கும் தேர்தலை நடத்துவதற்கு அந்நாட்டுப் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா இணக்கம் தெரிவித்துள்ளார்.
யிங்லக் ஷினவத்ரா கடந்த 2011ஆம் ஆண்டு தாய்லாந்து பிரதமராகப் பதவியேற்றார். அவரது ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சியினர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கடந்த இரு வார காலமாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைவத்து விட்டு அடுத்த 60 நாள்களில் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் யிங்லக் ஷினவத்ரா நேற்று அறிவித்தார்.

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
எனினும், இதை எதிர்க்கட்சிகள் ஏற்கா விட்டால் அரசியல் நெருக்கடி தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் எச்சரித்தார். மேலும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வதற்காக பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, மொத்தம் 500 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இருந்து தனது 153 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்துள்ளதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை ஆளுங்கட்சி நிறைவேற்றுவது தடைபடாது. எனினும், நாடாளுமன்றத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான அபிசித் வெஜ்ஜாஜிவா கூறுகையில்,

""நாங்கள் நாடாளுமன்றத்தில் எங்கள் கடமையை சிறப்பான முறையில் செய்தோம். இதற்கு மேல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்கள், நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்வது எங்களை வருத்தமடையச் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்பது மக்களுக்கு அதிகாரத்தைத் திருப்பியளிக்கும் ஒரு வழியாகும். ஆனால், அதைத் தொடர்ந்து நடத்தப்படும் தேர்தலில் மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு தீர்வு காணப்பட்டாக வேண்டும்'' என்றார்.
 

0 comments:

கருத்துரையிடுக