siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

ஆனையிறவிலும் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு! 10 ஏக்கரில் கடற்படை முகாம்

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,ஆனையிறவில் பொது மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியைத் திடீரென ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினர் இரவோடு இரவாக அந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என அறிவித்திருக்கின்றனர். அத்துடன் அங்கு கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதிலும் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர்.
ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பான பகுதியில் உள்ள மக்களின் காணிகளே கடற்படையினரால் நேற்று முன்நாள் திடீரென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து விட்டுக் காத்திருந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த நிலம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் 90 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன என்று பிரதேச செயலகப் பதிவுகள் கூறுகின்றன.
தற்போது அந்தக் குடும்பங்கள் உமையாள்புரம், பரந்தன், முரசுமோட்டை, ஊரியான் ஆகிய இடங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றன. அந்தக் குடும்பங்களின் சொந்தக் காணிகள் மட்டுமே அங்குள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்குள் அரச காணிகள் ஏதுமில்லை. இந்தப் பகுதியில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கடந்த மார்ச் மாதம் நிலப் பகுதி பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மீள்குடியமர்வுக்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகம் அறிவிப்பு விடுத்திருந்தது. அதனை நம்பி மக்களும் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு மீள்குடியமர்வுக்காகக் காத்திருந்தனர்.
குடிதண்ணீரைப் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பிரச்சினை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை காரணமாகவே அங்கு மீள்குடியமர்வு தாமதமாகி வந்தது.
இந்தக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்கு ஆனையிறவு உப்பு நிறுவனத்தையே நம்பி இருந்தன. அந்த நிறுவனம் இன்னும் தொழிற்படாத நிலையில் அதன் பணி ஆரம்பத்துக்காக அவர்கள் காத்திருந்தனர்.
அதேவேளை குடிதண்ணீர்த் தேவையை நிறைவு செவதற்கான நடவடிக்கைகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்நாள் அந்தப் பகுதியைத் திடீரென "புல்டோசர்'கள் சகிதம் துப்புரவு செய்த கடற்படையினர், "இது கடற்படைக்குச் சொந்தமான நிலம்'' என்ற அறிவித்தல் பலகையை நாட்டியுள்ளனர்.
நேற்றைய தினம் அந்த நிலப் பகுதியைச் சுற்றி முட்கம்பி வேலியிடும் பணியில் நூற்றுக்கணக்கான படையினர் ஈடுபட்டிருந்தனர் என்றும், கடற்படை முகாமுக்கான தற்காலிக வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் தமது காணிகளுக்குச் சென்று அவற்றை அறிக்கை செய்து வேலியிடும் பணிகளில் ஈடுபட்டுவந்த காணிகளுக்குச் சொந்தக்காரர்களான மக்கள் கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் அதிர்ந்துபோயுள்ளனர்.
தமது காணிகளை எப்படியாவது மீட்டுத் தரும்படி கேட்டு அவர்கள் அரச அதிகாரிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே யாழ். குடாநாட்டிலும் வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் படையினர் மக்களின் காணிகளை அபகரித்துள்ளனர்.
இதனைக் கண்டித்தும் எதிர்த்தும் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தன.
இந்த நிலையில் தற்போது புதிய ஆக்கிரமிப்பாக ஆனையிறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

யாழ்ப்பாணத்தின் படைக்குறைப்பில் திருப்தியில்லை: அமெரிக்க அதிகாரிகளிடம் யாழ். ஆயர் எடுத்துரைப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், படைக்குறைப்பில் திருப்தியில்லையென யாழ். ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலய இரண்டாம் நிலை அதிகாரியான வில்லியம்ஸ் கைன் ஸ்ரைனிடமே ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு தெடர்பாக ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககையில்,
மீளக்குடியமர்வுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியமர்வில் அதிகளவான குறைபாடுகள் உண்டு. மக்களுக்கு தேவையான வீடு, மலசல கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக செய்யப்படவில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை. வடமாகாண தேர்தலை அரசாங்கம் இன்னமும் நடாத்தவில்லை.
ஒருவேளை வடமாகாணத்திற்கான தேர்தலை அரசாங்கம் நடாத்தினால் மக்கள் தம்முடன் இல்லையென்பதை உலகம் அறிந்து விடும் என அச்சம் கொள்கின்றது.
அபிவிருத்திப் பணிகள் உரியாவாறு மக்களைச் சென்றடைவதில்லை. இதனாலேயே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடைவெளி காணப்படுகின்றது. அங்காங்கே பொது மக்களது காணிகளை ஆக்கிரமித்து படைமுகாம் அமைக்கப்படுகின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளபோதும் அரசாங்கம் அவற்றை அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு அமுல்படுத்தினால் அது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

சீனா தொடர்பில் இந்தியா, இலங்கைக்கு நேரடி கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,சீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்படுகின்றமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அண்மையில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, இது குறித்து நேரடியாக தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அட்டகத்தி திரைவிமர்சனம்

20.08.2012.
மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால் கிராமமும் இல்லை, நகரமும் இல்லை. இது கொஞ்சம் புதுமைதான். சென்னை புறநகர்தான் படத்தின் களம்.
படத்தின் கதாநாயகன் அட்டக்கத்தி தினேஷ். பிளஸ் 2 ஆங்கிலத்தில் மறுபடி மறுபடி பெயிலாகி டுட்டோரியல் காலேஜில் படிக்கிறார்.
எப்படியாவது தனக்கொரு காதலி வேண்டும் என்று பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் ‘ரூட்’ விடுகிறார். அதில் கதாநாயகியும் அடக்கம்.
கதாநாயகி நந்திதாவிடம் காதலை சொல்லப் போகிற நேரத்தில் அவர் அண்ணா என்று சொல்லி விடுகிறார். திரும்பவும் முயற்சித்து பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் அம்பு வீசி அங்கேயும் அவருக்கு “பல்ப்”.
இப்படி ஒவ்வொரு பெண்ணிடமும் தோல்வியை சந்திக்கும் தினேஷ், அவன் படிக்கும் காலேஜில் முன்பு அவனை அண்ணா என்று சொன்ன நந்திதாவும் சேர்கிறாள்.
அதன்பிறகு ஏற்படும் சந்தர்ப்பங்களில் நந்திதா தன்னை விரும்புகிறாளோ என்ற எண்ணம் தினேஷூக்கு ஏற்பட மறுபடியும் நந்திதா மீது காதல்.
இந்த காதல் கைகூடியதா? இல்லை ஒவ்வொரு பெண்ணாக கடந்ததா? என்பது மீதிக்கதை.
படத்தில் பிரேம் பை பிரேம் கலக்குவது கதாநாயகன் தினேஷ்தான். முதல் காதலில் தோல்வியடைந்ததும் சோகத்தை வரவழைக்க முயற்சித்து பார்ப்பது, லவ் லெட்டர் கொடுக்கப் போகும் நேரத்தில் முகத்தில் எந்த கலவரத்தையும் காட்டாமல் நதியாவா, திவ்யாவா என ‘சாய்ஸ்’ வைப்பது, ஒரு பெண்ணிடம் லவ் லெட்டர் கொடுக்க வந்து அடிவாங்கும் போது, என்ன அடி... இந்த பக்கமே வரக்கூடாது என புலம்புவது என ஒவ்வொரு காட்சியிலும் முகபாவங்களை அருமையாக காட்டியிருக்கிறார்.
வருகிற பெண்களில் ஸ்வேதாவுக்கே நடிக்க நிறைய வாய்ப்பு. அதை அவர் அழகாகவும் செய்திருக்கிறார். கிராமம், நகரம் கலந்த நடுத்தர குடும்பத்து முகம்.
படத்தில் அட்டக்கத்திக்கு அடுத்து கலக்குவது தினேஷின் அப்பா. இவரு பெரிய அட்டக்கத்தி. தினம் இரவு தண்ணி போட்டுட்டு வீர வசனம் பேசுவது, அடுத்த இரவு காட்சி வரும் முன்னே நமக்கு சிரிப்பை வரவழைத்து விடுகிறது.
சென்னையில் புறநகர் பகுதி குப்பைமேடுகளைகூட ரசிக்கும் படியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரமோத் வர்மா. பஸ்ஸில் புட்போர்டு அடிக்கும் காட்சிகளை படம் பிடித்த கோணங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைப்பவை.
படத்திற்கு இன்னொரு பலம் சந்தோஷின் இசை. ‘ஆடி போனா ஆவணி’ பாடல் ஆட வைக்கும் ரகத்தில் கலக்கல் என்றால் ‘ஆசை ஒரு புல்வெளி’ நொடியில் மனதில் நிற்கும் மெலோடி. பின்னணி இசையையும் அளவோடு, அழகாக பதிவு செய்திருக்கிறார்.
முதல் படத்திலேயே ஹீரோவுக்குனு இருக்கிற டெம்பிளேட்டுகளை உடைத்து படமாக்கியதற்காக இயக்குனர் ரஞ்சித்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
காதலைச் சொல்லப்போகும் நேரத்தில் மற்றொரு பெண்ணைப் பார்த்து நிலை தடுமாறுவது, பின் யோசிப்பது என்பது மாதிரியான சராசரி மனித இயல்புகளை கதாபாத்திரமாக்கி முழு படத்தையும் இயக்கியிருப்பது, அதற்கு கச்சிதமான திரைக்கதையமைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
நடிகர்: தினேஷ்.
நடிகை: நந்திதா.
இயக்குனர்: ரஞ்சித்.
இசை: சந்தோஷ் நாராயணன்.
ஒளிப்பதிவு: பி.கே.வர்மா.

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய ஜெயராம்

20.08.2012.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் மலையாள நடிகர் ஜெயராம் ஓணம் கொண்டாடினார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்துக்கு நேற்று சென்ற நடிகர் ஜெயராம் அங்கு சிகிச்சை பெற்று வரும் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினார்.
மேலும் புத்தாடைகளும் வழங்கி அவர்களுடன் கொஞ்சி விளையாடினார். சில குழந்தைகளுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புற்றுநோய் என்பது அணு அணுவாக மனித உயிர்களை சாகடிக்கும் கொடிய நோய் ஆகும். இதன் மூல காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிரபலங்கள் முதல் சிறு குழந்தைகள் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடை பிணங்களாக வாழ்வது பரிதாபத்துக்குரியதாகும்.
புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளேன். திருவனந்தபுரம் புற்றுநோய் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினேன்.
எந்த பாவமும் அறியாத அக்குழந்தைகளின் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்கின்றபோது கவலை நம்மை குடிக்கொள்கிறது என்று கூறினார்.
மேலும், ஜெயராம் “அன்புள்ள கமல்” படத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்க அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வேண்டும்: அமெரிக்க அதிகாரிகளிடம் பா.உ சிறீதரன்

திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012,
யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொண்டு நேற்று யாழ்.வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களும் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். நகரிலுள்ள விடுதியொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் இருதரப்பு அமெரிக்க அதிகரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
குறிப்பாக வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சிங்கள குடியேற்றங்கள், குறித்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தமது நிலைப்பாட்டை தமிழர்களுக்குத் தெளிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு விடயத்தில் முதலில் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தை சர்வதேசம் வழங்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது.
மேலும் இந்தச் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னரும் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் குறித்து எமது தரப்பிலிருந்து தெளிவான ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளோம்.
அதேபோல் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கள் இந்தநாட்டில் இனப்பிரச்சினைக்கு தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்குவதற்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய கடமையுள்ளதை சுட்டிக்காட்டினோம்.
அந்த வகையில் இந்தச் சந்திப்பு தமிழர் தரப்பு நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்திப்பாக அமைந்திருந்தது எனத் தெரிவித்தார்.
 

எங்கட ஊரைப் பார்க்க வேண்டும் போல உள்ளது” – Vijay Tv இல் கலங்கிய கண்களுடன் கனடா தமிழ்ப்பெண் சரிகா (வீடியோ இணைப்பு)

20.08.2012..

தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏடெல் சூப்பர் சிங்கர் – 3 நிகழ்ச்சியில் கனடா தமிழ்ப் பெண்ணும் பங்குபற்றி எல்லோர் மனதையும் கொள்ளைகொண்டுள்ளார்.
பல மாதங்களாக விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் பாட்டுப்போட்டியில் ஈழப்பெண் கனடாவில் இருந்து குடும்பமாக சென்று கலந்துகொண்டுள்ளார்.
அவர் தனது பாட்டு திறமையால் மட்டுமல்ல, ஊரையும் நினைவுகூர்ந்து, தமிழர்களின் இன்னல்களை கூறி, எல்லோர் மனதிலும் இடம்பிடித்துள்ளதோடு, ஈழப்பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார்.
சரிகா தனது திறமையால் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Video – Click To Watch
எங்கட ஊரைப் பார்க்க வேண்டும் போல உள்ளது




பழைய நினய்வுகள் முன்பு பார்க்க தவறியவர்க்கு ஓர் அரிய வாய்ப்பு

எனக்கு விரைவில் திருமணம் | ஸ்ரேயா

20.08.2012.நடிகை ஸ்ரேயாவுக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது உண்மைதான் என ஒப்புக் கொண்டார். ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:-
நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அது அது அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்.
பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும்.
சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்து கொள்ளவேண்டும். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை. எனவேதான் பெற்றோர் பார்க்கிறார்கள்.
எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். சினிமாவை பற்றி நன்றாக புரிந்து தெளிவடைந்தவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. திருமணத்துக்கு முன்பு கணவராக வரப்போகிறவர் எப்படிப்பட்டவர் என்று முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவரது குணநலன், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு கழுத்தை நீட்ட வேண்டும். திருமணமானபின் எக்காரணத்தை கொண்டும் விவாகரத்து செய்யக்கூடாது. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்

20 கோடிக்கு ஐஸ்வர்யாவை விளம்பரத்திற்கு புக் செய்த கல்யாண் ஜுவல்லர்ஸ்!

20.08.2012.கல்யாண் ஜுவல்லர்ஸின் புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராய் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக அவர் பெறவிருக்கும் சம்பளம் ரூ. 20 கோடி ஆகும்.
கல்யாண் ஜுவல்லர்ஸின் பிராண்ட் அம்பாசிடராக வெகுகாலமாக இருப்பவர் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். அவரது ஒப்பந்தம் விரைவில் முடிகிறது. இதையடுத்து புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யாவை தேர்வு செய்துள்ளனர் கல்யாண் ஜுவல்லர்ஸ்.
சுஷ்மிதா சென் படங்களில் நடிக்கவில்லை. விளம்பரப் படங்களில் மட்டுமே வருகிறார். ஆனால் ஐஸோ படம், விளம்பரம் என்று வரும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரசவத்திற்கு பிறகு தற்போது மெதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தான் ஐஸுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்தத்திற்கு ஐஸுக்கு கிடைக்கும் சம்பளம் கொஞ்ச, நஞ்சமல்ல ரூ.20 கோடி ஆகும். வருடத்திற்கு ரூ.10 கோடி சம்பளம்

குஷ்புவின் அரிய கண்டுபிடிப்பு!

20.08.2012.ஐநாசபையின் அதிகார பூர்வ இளைஞர் அமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட நிலையில், தற்போது தனது தலைவர் கலைஞர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் அந்த கருத்தரங்கிற்கு நான் செல்லவில்லை என்று சொல்லியிருகிறார் குஷ்பூ. இத்தனை பெரிய நல்ல வாய்ப்பை உதறுகிற அளவுக்கு குஷ்பு அத்தனை பிஸியா என்று துலாவினால்,
கலைஞர் டிவிக்காக இவர் புதிதாக தொடங்கியிருக்கும் மெகா சீரியலுக்கு மூன்று மாதத்துக்கான 60 எபிசோட்களை விரைந்து கொடுக்கவே நைரோபிக்கு செல்வதை தவிர்த்து விட்டார் என்கிறார்கள்.
அம்மையார் ஒழுங்காக சீரியல் வேலையையும் கட்சி வேலையும் பார்த்தால் தப்பில்லை. ஆனால் தேவையில்லாமல் போகிற இடங்களில் ‘ தமிழருவி மணியன் ரேஞ்சுக்கு பேசி விடுவதல் செம கடுப்பில் இருக்கிறார்களாம் வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள். அப்படி என்னதான் பேசிவிட்டார் என்றால்,
“இன்றைய இளைய தலைமுறைகளிடம் தமிழ்மொழி உணர்வு குறைந்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார் நேற்று! தமிழ் மொழிக்காகவே தன் கட்சியை அர்பணித்திருப்பதாக சொல்லுகிற திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடைபெற்ற கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை குஷ்புவிற்கே அளித்திருந்தனர்.
மேடையில் தமிழ் உணர்வும், பகுத்தறிவும் பொங்கி வழிகிற அதன் தலைவர்களுக்கு முன், ‘பெரியார் கொள்கை’ என்று சொல்வதற்கு பதில் ‘பெரியார் கொள்ளை’ என்று பேசியவர்தான் நமது குஷ்பு!
தமிழ் சரியாக பேச வராத தன்னை, முக்கியமான தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, நடத்துனராக நியமித்து, அதில் தவறாக பேசிய பிறகும் தனக்கு கட்சியில் முக்கிய பதவியும் தந்த தன் கட்சியின் தமிழ் உணர்வை கிண்டல் செய்கிறாரோ என்னவோ?!
இப்படியே போனால் திமுகவில் கலைஞருக்கு அடுத்த இடத்தில் குஷ்பூ வந்தாலும் ஆச்சர்யமில்லை என்று காதைக் கடிக்கிறார்கள் திமுக வட்டாரத்தில்!