siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 15 செப்டம்பர், 2012

கடந்த எட்டு மாதங்களில் 25,000 வாகன விபத்துகள்

.By.Rajah.இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 25,000 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அவ்விபத்துகளால் 1500 பேர் பலியாகியுள்ளதுடன், 11,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதற்கு சாரதிகளின் ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவையெனவும் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துதல், கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்லல், சாரதிகளிடையேயான போடித்தன்மை, நித்திரை கலக்கத்தில் வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இவ்வாறு விபத்துகள் அதிகரிக்கக் காரணமாய் அமைந்துள்ளன.

வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளமை கவலைக்குரிய விடயமே.

வாகனவிபத்துகள் அதிகரிப்பதற்கு சாரதிகள் மாத்திரம் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. பாதசாரிகளின் கவனயீனமும் ஒரு காரணமாய் அமைந்துள்ளது.

எனவே வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அத்தோடு சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அதேபோன்று பாதசாரிகளும் பாதைகளைக் கடக்கும் போதும் வாகனங்களில் பயணிக்கும் போதும் ஏனைய பல சந்தர்ப்பங்களிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதன் மூலம் வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்தலாம்

ரத்மலானை விமானநிலையம் 'கொழும்பு சிட்டி" என பெயர் மாற்றம்



By.Rajah.ரத்மலானையில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பெயர் 'கொழும்பு சிட்டி" விமானநிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குறித்த விமானநிலையமானது இன்று முதல் கொழும்பு சிட்டி விமான நிலையம் என அழைக்கப்படும் என விமானநிலைய முகாமையாளர் சரத் டி சில்வா தெரிவித்தார்

கணவர் சைகையால் உணவு கேட்பது மிக

By.Rajah
வேதனையாக உள்ளதால் பிணையில் விடுவிக்குமாறு கோருகிறார் சதீஸின் மனைவிசரியாகக் கவனித்து முறையாக சிகிச்சையளித்தால் கணவரை காப்பாற்றலாம். ௭னது கணவரை பிணையில் விடுவியுங்கள். நாங்கள் காப்பாற்றுகின்றோம் ௭ன்று தமிழ் அரசியல் கைதியான சதீஸின் மனைவியான சதீஸ் கவிதா கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றார்.

கணவரால் பேச முடியவில்லை. சரியாக கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. ௭ல்லாம் சைகையால் தான் தெரிவிக்கின்றார். அவரை முறையாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு மகசீன் சிறைச்சாலையின் வைத்தியசாலை உகந்த இடமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் கொண்டு செல்லும் சாப்பாட்டை கொடுப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. பழங்களையும் சூப்பையும் மாத்திரமே கொடுக்குமாறு வலியுறுத்துகின்றனர். ஆனால் கணவர் சைகையால் சாப்பாடு வேண்டுமென கேட்கின்றார். மிகவும் வேதனையாக இருக்கிறது. நான் பராமரித்துக் கொண்டால் அவருக்கு உணவு ஊட்டி விடுவேன்.

கடந்த நான்கு வருடமாக சிறைச்சாலையில் இரு ந்த கணவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். கடந்த மாதம் காலிக்கு கொண்டு சென் றதன் பின்னரே இவ்வாறான நிலைமை க்கு உள்ளாகியுள்ளார். காதில் பின்புறமாக தையல்கள் போடப்பட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் வீழ்ந்து காயமடைந்ததாகவும் பின்னர் காலி வைத்தியசாலையில் இருந்த போது கட்டிலில் இருந்து தவறி வீழ்ந்து இந்த நிலைக்கு உள் ளானதாகவும் சொல்கின்றார்கள்.

ஆனால் ௭ன்னால் அதனை நம்பக்கூடியதாக இல்லை. கட்டிலில் இருந்து வீழ்ந்த ஒரு வருக்கு ௭ப் படி காதின் பின்புறத்தில் காய ங்கள் ஏற்பட்டிருக்கும் ௭ன்ற சந்தேகம் ௭ம க்கு உள்ளது. ௭ப்படியோ அதைப்பற்றி பேசி இப்போது வேலையில்லை. தற்போது அவர் இருக்கின்ற நிலையிலிருந்து அவரை காப்பாற்ற வேண்டும் ௭ன்றார்

சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒட்டோ ஸ்டிச் மரணம்

சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.சுவிட்சர்லாந்தில் 1988 மற்றும் 1994ம் ஆண்டில் அந்நாட்டிற்கு.ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த ஒட்டோ ஸ்டிச் காலமாகி உள்ளார். ஒட்டோ ஸ்டிச் சுவிஸ் அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினராகவும் நிதி அமைச்சராக 1983- 1995ம் ஆண்டு வரை இவர் பணியாற்றியுள்ளார்.
சுவிஸின் மத்திய இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான இவரது சாதனைகளில் முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்திலும், உலக வங்கியிலும் சுவிட்சர்லாந்து உறுப்பினராக 1992 இல் பதிவு செய்யப்பட்டு VAT எனப்படும் வரிச்சலுகையைப் பெற முடிந்ததைக் கூறலாம்.
இன்னொரு சாதனையாக எரிபொருள் மீதான வரி அதிகரிப்பில் சுவிட்சர்லாந்து வலிந்து ஈடுகட்ட முடிந்தமையையும் கூறலாம்.
நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியராகவும் அரசியல் ஞானியாகவும் விளங்கிய இவர், தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தது 1963 இல் டொனார்ச் நகர ஆளுநராகத் தெரிவு செய்யப் பட்டதிலிருந்து ஆகும்.
சுவிஸ் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் இவரைப் பற்றிக் கூறுகையில் ஒட்டோ ஸ்டிச் சற்று பிடிவாத குணம் மிக்க முரட்டுத்தனமானவர் என்ற போதும் மெல்லிய இதயம் உடையவர் என்று கூறியுள்ளார்

எண்ணெய் தாங்கி வாகனத்துடன் பேருந்து மோதி பயங்கர விபத்து: 56 பேர் பலி

சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்து, எண்ணெய் தாங்கி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியானதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். கான்ஸி மாகாணத்திலிலுள்ள அப்பான்ட் மாவட்டத்தில் காபூல்- கந்தஹாருக்கான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் பேருந்தும் எண்ணெய் தாங்கி வாகனமும் தீப்பற்றி எரிந்துள்ளன.
இதில் பேருந்தில் 56 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகனங்களிலிருந்து எரிந்து கருகிய சடலங்களை மீட்கும் பணியில் ஆப்கான் பொலிஸாரும் படைவீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
பலரது சடலங்கள் அடையாளங்காண முடியாத வகையில் எரிந்து கருகியுள்ளதாக மாகாண பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் ஸரவார் ஸாஹித் தெரிவித்தார்

நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான காணியை அபகரித்து முகாம் அமைக்க இராணுவம் முயற்சி!

 
 
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.யாழ். திருநெல்வேலிப் பகுதியில் புதிய படைமுகாம் ஒன்றினை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.
இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற நிர்வாக சபையின் கூட்டத்தின்போதும் ஆராயப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கலாசாலை வீதியில் பாற்பண்ணைக்கு முன்பக்கத்திலுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 5.5 பரப்புக் காணியினையே இராணுவத்தினர் இவ்வாறு உரிமை கோரியுள்ளனர்.
குறித்த காணியானது நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான போதிலும் அதனை தம்மிடம் வழங்குமாறு ஊரெழு படைமுகாம் இராணுவத்தினர் கேட்டுள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் கேட்கும் குறித்த காணியினை எக்காரணம் கொண்டும் வழங்க முடியாதென்று நேற்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியினை 2012-ம் ஆண்டு ஆரம்பம் முதலே ஊரெழு படைமுகாம் இராணுவ அதிகாரிகள் உரிமை கோரியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் இராணுவத்தினர்க்கு குறித்த காணியினை தாரை வார்த்துக் கொடுக்க முடியாது எனவும் ஆனி மாதம் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு கடந்த யூன் மாதம் 7-ம் திகதி அன்று யாழ்.அரச அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னர் தற்போது 3 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் மீண்டும் குறித்த காணியினை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.
இராணுவத்தினரின் உச்சக்கட்ட செயற்பாடுகளாக சென்ற வாரம் 6 இராணுவத்தினர் குறித்த காணிக்குச் சென்று அயல் பகுதி வீட்டுக்காரர்களிடம் விசாரித்தும் உள்ளனர்.
இதன்பின்னர் நல்லூர் பிரதேச சபை அவசரமாக நிர்வாக சபைக் கூட்டமொன்றினை நேற்றுக்கூட்டி அதில் குறித்த காணி தொடர்பான பிரேரணை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
இதில் தற்போது விளையாட்டு மைதானமாக பாவிக்கப்பட்டு வரும் குறித்த காணியை இராணுவத்தினருக்கு வழங்க முடியாது என்றும் அவ்வாறு வழங்க வேண்டும் என ஒரு கட்டம் ஏற்பட்டால் மக்களினை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் யாழ்.அரச அதிபரிடமும் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் அறிக்கை சமர்ப்பிப்பது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் குறித்த காணியில் சிறுவர் பூங்கா ஒன்றினை அமைப்பது என்றும் இதன் முதற் கட்ட வேலையாக குறித்த காணியில் குழாய்க் கிணறு ஒன்றினை அமைத்து பூங்கன்று நாட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இராணுவம் கோருவதற்காக மக்களுடைய சொத்தை எக்காரணம் கொண்டும் யாருக்கும் எதனையும் வழங்க மாட்டோம் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில்கூட கோப்பாயில் 550 பரப்புக் காணியினை இராணுவம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

யாழ்.மாவிட்டபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரை காணவில்லை

 
 
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் சேர்ந்த மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ. மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ம் திகதி பத்மநாதன் சிவகரன் (வயது 15) என்ற மாணவன் வீட்டிலிருந்து புறப்பட்டு, இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மல்லாவி வைத்தியசாலையில் சிங்கள வைத்தியர்:

 
 
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012By.Rajah.மொழிப் பிரச்சினையால் அவதியுறும் நோயாளிகள்.முல்லைத்தீவு - மல்லாவி ஆதார வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர் இல்லாததால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுவருவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிங்கள மொழி பேசும் வைத்தியரே இங்கு சேவையில் உள்ளதால், இதனால் தமது நோய்களைச் சரியாகச் சொல்லி உரிய சிகிக்சையைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதியின்மையால் தூர இடங்களுக்கு நோயாளர்கள் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது, வன்னிப் பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக தடிமல், காய்ச்சல், சளி மற்றும் தோல்நோய்கள் போன்றவற்றால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அவதிப்படும் நோயுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் வேறு மருத்துவமனைகளுக்கே மாற்றப்படுக்கின்றனர்.
அண்மையில் வவுனிக்குளம், 4ஆம் கட்டை, அம்பாள்புரத்தை சேர்ந்த 7 வயதான தர்சிகா என்ற சிறுமி விஷ கடிக்கு இலக்காகி மல்லாவி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, அஙகிருந்து வவுனியாவுக்கு மாற்றப்பட்டு அங்கு சிறுமி சிகிச்சை பயனின்றி கடந்த மாதம் உயிரிழந்துள்ளார்.
விஷ கடிக்கு இந்த வைத்திய சாலையில் சிகிச்சை அளிக்கக்கூடிய போதிய வசதியின்மையாலையே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாண்டியன்குளம் பிரதேசத்தில் 15 கிராம சேவகர் பிரிவுகளையும், துணுக்காய் பிரதேசத்தில் 20 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டு 8 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த பெரும் பிரதேசத்துக்கு முக்கியமான வைத்தியசாலையாக மல்லாவி ஆதார வைத்தியசாலையே காணப்படுகின்றது.
எனவே தமது நிலையை கருத்தில் கொண்டு குறித்த வைத்தியசாலையை விரிவுபடுத்துவதுடன் தமிழ் வைத்தியர் ஒருவரையும் நியமித்துத் தருமாறும் அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அமெரிக்கா நாடாளுமன்ற பிரேரணையை தோற்கடிக்க இலங்கை முயற்சி

 
 
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இலங்கையின் மீது சர்வதேச விசாரணையைக்கோரும் பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கைக்கு ஆதரவான காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்டு இந்த பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் போர் இடம்பெற்ற வேளையில் போர்க்குற்றங்கள் புரியப்பட்டதாக கூறி, அதனை விசாரணை செய்ய சர்வதேச விசாரணையை கோரி, காங்கிரஸின் பிரதிநிதிகள் சிலர் கடந்த 7 ஆம் திகதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பிரேரணையை முன்வைத்தனர்.
அத்துடன் இந்தப் பிரேரணையில் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வு, சர்வதேச தலையீடு, மனிதாபிமான அமைப்புக்களை போர் நிறைவடைந்த இடங்களுக்கு அனுப்புதல், ஊடக சுதந்திரம் உட்பட்ட வலியுறுத்தல்களும் அடங்கியுள்ளன.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேரை திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா!

 
 சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.
 
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் "த இன்டி பென்ரன்' நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் இவர்களை பிரித்தானிய குடிவரவு முகவர் நிலையம் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக பெருந்தொகையினர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 50 தமிழர்களை திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் அந்த நாட்டு நீதிமன்றம் தலையிட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் ஆபத்து இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
கடந்த வருடத்தில் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீளவும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில் திருப்பி அனுப்பப்பட்ட போது தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்கு போதிய ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள 300 பேரில் பெருமளவானோர் மாணவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்டுத்தும் சாத்தியம் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது