பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.அமெரிக்காவை சேர்ந்த, ஆல்வின் ரோத், லாய்டு ஷெப்லே ஆகியோருக்கு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், ரசாயனம், மருத்துவம் ஆகிய துறைகளில், சாதனை படைப்பவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம், மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம் ஆகிய துறையை சார்ந்த நிபுணர்களுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான பரிசு, ஐரோப்பிய யூனியனுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஆல்வின் ரோத், லாய்டு ஷெப்லே ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை கழகத்தின், பொருளாதார பேராசிரியராக இருப்பவர் ஆல்வின் ரோத். கலிபோர்னியா பல்கலை கழக பேராசிரியர் ஷெப்லே. "நிலையான வினியோகம் மற்றும் சந்தை விற்பனை நடைமுறை' குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியை பாராட்டி, இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 16 அக்டோபர், 2012
தலிபான்களால் சுடப்பட்ட மாணவி சிகிச்சைக்காக
செவ்வாய், அக்டோபர் 16, 2012
செய்திகள்
Tuesday 16 October 2012 By.Rajah..லண்டன் பயணம்
தலிபான்களால் சுடப்பட்ட, பள்ளி மாணவிக்கு, லண்டனில் சிகிச்சையளிக்கப்படுகிறது. பாகிஸ்தானின், பழங்குடிகள் அதிகம் வசிக்கும், ஸ்வாட் மாவட்டத்தின், மிங்கோரா நகரை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய், 14. அமைதி குறித்து, பல்வேறு பேச்சுப் போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் மலாலா.
பள்ளி மாணவியான மலாலா, கடந்த வாரம், பேருந்தில் வீட்டுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள், மலாலாவை இரண்டு முறை சுட்டனர். இதில், தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அறுவை சிகிச்சை மூலம், இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. இருப்பினும் மலாலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேல்சிகிச்சைக்காக, மலாலா, நேற்று லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட் அளித்த ஏர் ஆம்புலன்ஸ் மூலம், மலாலா, லண்டன் சென்றார். அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது, பாதுகாப்பு காரணங்களையொட்டி, ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
உடல்நல சிகிச்சைக்காக சீனா சென்ற கம்போடிய
செவ்வாய், அக்டோபர் 16, 2012
செய்திகள்
கம்போடிய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான நரோத்தம் சிகானுக் (90) சீனாவில் காலமானார்.
திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக, கம்போடிய அரசு தெரிவித்துள்ளது.
சிகானுக் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக, சீனாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
மக்களின் அன்பையும், பெருமதிப்பையும் பெற்ற முன்னாள் மன்னர் நரோத்தம் சிகானுக்கின் உடலை கம்போடியாவுக்குக் கொண்டு வர, அவரின் மகனும் தற்போதைய மன்னருமான நரோத்தம் சிகாமணி சீனா விரைந்துள்ளார் என்று கம்போடிய துணைப் பிரதமர் நிக்புன்ச்சேய் தெரிவித்துள்ளார்.
1922ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பிறந்த நரோத்தம் சிகானுக், 1941 முதல் 1955ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1993 முதல் அக்டோபர் 2004ஆம் ஆண்டு வரையும் மன்னராகப் பொறுப்பு வகித்தார்.

கொலையானதாக கூறப்பட்ட சிறுவன் காதலியுடன்
செவ்வாய், அக்டோபர் 16, 2012
செய்திகள்
Tuesday 16 October 2012 By.Rajah
ஆஜர் - பரபரப்பு : பீகாரில் "பந்த்' நடத்திய எதிர்க்கட்சிகளுக்கு மூக்குடைப்பு பீகாரில், மதுபானி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, அங்கு நேற்று நடந்த, "பந்த்'தின் போது, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர், ராம்விலாஸ் பஸ்வான் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில், இந்த, "பந்த்'திற்கு காரணமான, படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன், காதலியுடன், டில்லி கோர்ட்டில் ஆஜரானதால், பரபரப்பு ஏற்பட்டது.
வன்முறை : பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள, மதுபானி நகரைச் சேர்ந்த, சுபாஷ், 17, ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற, பள்ளிச் சிறுவன், கடந்த மாதம், மர்மமான முறையில், படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைக் கண்டித்து, அந்தப் பகுதியில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தின்போது வன்முறை நிகழ்ந்தது.
வன்முறையாளர்களைக் கலைக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இரண்டு பேர் இறந்தனர்.
இதைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகள், லாலு பிரசாத்தின், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை, நேற்று, "பீகார் பந்த்' நடத்தின. இதனால், தலைநகர் பாட்னாவில், போக்குவரத்து பாதிப்பு இல்லை; ஆனால், பிற பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது.
மாநிலத்தின், வடக்கு மாவட்டங்களான, கயா, மதுபானி, தர்பங்கா, ஆரா, ஜஹானாபாத் மற்றும் போஜ்பூர் போன்ற இடங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை; கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; பஸ் போக்குவரத்து, முற்றிலும் முடங்கியது.
சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன; பயணிகள் ரயில், பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட, லாலு பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான் கைது செய்யப்பட்டனர்.
அதேநேரத்தில், பீகாரில் நேற்று, எதிர்க்கட்சிகள் நடத்திய, "பந்த்'திற்கு காரணமான, படுகொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட சிறுவன் சுபாஷ், காதலி, மணீஷா, 16, ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) டில்லி கோர்ட்டில் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தினான்.
விசாரணை : தன்னை யாரும் கொலை செய்யவில்லை என்று கூறிய அவன், காதலியுடன் ஓடிப்போன தகவலையும் தெரிவித்தான். அந்தச் சிறுவனிடமும், அவனின் காதலியிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "எந்த விவகாரம் கையில் கிடைக்கும்; அதன் மூலம் பிரச்னையை ஏற்படுத்தி, மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்யலாம்' என்ற, எண்ணத்தில், நேற்று பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, "பந்த்' நடத்திய, எதிர்க்கட்சிகளுக்கு, சிறுவன் கோர்ட்டில் ஆஜரான விவகாரத்தால் மூக்குடைப்பு ஏற்பட்டது. சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும், அரசியல்வாதிகள் போராட தயங்க மாட்டார்கள் என்பது, நேற்றைய சம்பவம் மூலம், உறுதியாகியுள்ளது

திங்கள், 15 அக்டோபர், 2012
இலங்கைக்கு எதிரான அறிக்கை தொடர்பில்
திங்கள், அக்டோபர் 15, 2012
செய்திகள்
திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah.
இரகசிய கலந்துரையாடல்ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மாநாட்டில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.
இந்த மாநாட்டுக்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா செல்லவிருப்பதாக ஏற்கனவே சென்றிருந்தது.
இந்த நிலையில் குறித்த குழு ஐக்கிய நாடுகள் சபையில் முகம் கொடுக்கவுள்ள சவால்கள் தொடர்பில் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்த கலந்துரையாடியுள்ளது.
இதில் மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளின் 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பில் அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்
திங்கள், அக்டோபர் 15, 2012
புதினப்பலகை
திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah.
கண்டி ஆதார வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் இன்று அதிகாலை பெற்றெடுத்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளில், ஆண்கள் குழந்தைகள் மூவர் எனவும் பெண் குழந்தைகள் இருவரும் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 வயதான தாயார் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்

விளையாட்டால் வந்த விபரீதம்
திங்கள், அக்டோபர் 15, 2012
செய்திகள்
45 மாணவர்கள் வைத்தியசாலையில் ! இரத்தினபுரி பொத்குல் விகாரையைப் பார்வையிடுவதற்காகச் சென்ற மாணவர்கள் 45 பேர் குளவித் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளனர்.
கிக்கடுவை பிரதேச பௌத்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள் 45 பேரே குளவித் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் நேற்று குளவித் தாக்குதலிற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விகாரைப் பகுதியில் உள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூடு ஒன்றிற்கு மாணவர் ஒருவர் கல் எறிந்துள்ளார்.
இந்நிலையிலேயே குளவிகள் கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளது.
எப்படியிருப்பினும் குளவித் தாக்குதலிற்கு இலக்கான மாணவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்

இலங்கையில் 15 வயது மகன் 26 வயதான பெண்
திங்கள், அக்டோபர் 15, 2012
செய்திகள்
ஒருவருடன் திருமணமா 15 வயது மகனை 26 வயதான பெண் ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுக்குமாறு சிறுவனின் பெற்றொர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த விசித்திரமான கோரிக்கை அத்துருகிரிய பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டது.
அத்துருகிரிய பிரதேசத்தில் வாழும் 15 வயதான தமது மகன், மாலம்பெ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனவே இவர்கள் இருவரையும் சட்ட ரீதியான இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.
குறித்த பெண் ஏற்கனவே விவாகமாகியுள்ளதாகவும், கணவர் குறித்த பெண்ணை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
15 வயது சிறுவனை மணம் முடிப்பதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நடவடிக்கை இலங்கை கலாச்சாரத்திற்கு பொருத்தமற்றது எனவும், சிறுவனை விடவும் வயது கூடிய பெண் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டாம் என அத்துருகிரிய சிறு முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.ஏ. கிறிஸ்டோபர் முறைப்பாடு செய்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

சோகத்தை மறக்க சினிமா தான் பெஸ்ட்: நயன்தாரா
திங்கள், அக்டோபர் 15, 2012
செய்திகள்
|
Monday, 15 October 2012, By.Rajah. சோகத்தை மறக்க சினிமாவும், எனது குடும்பமும் தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது
என்கிறார் நயன்தாரா சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்த பின்பும், இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து நயன்தாரா கூறுகையில், ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தபோது இப்படம் கிடைத்தது. அப்போது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அமைதி காத்தேன். இந்த படம் மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளித்தேன். அது எல்லாம் சீதை வேடத்தில் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதால் நடந்தது. தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண கதை படங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் வித்தியாசமான பெண், எந்த நிலையிலும் வெற்றி பெறுபவள் என சிலர் கூறலாம். ஆனால் நான் மற்றவர்களை போல் சாதாரணமானவள்தான். குளிர், மழை, வெயில் என எந்த சீசனிலும் உழைத்துக் கொண்டே இருப்பது எனக்கு பிடித்தது. சினிமாதான் எனக்கு எல்லாமே. எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள், இதயம் உடைந்த சம்பவங்கள் ஆகியவற்றிலிருந்து என்னை மீட்டது சினிமாதான். எனது சோகத்தை மறக்கச் செய்த மருந்து, எனது பணிதான். அதே போல் எனது குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருந்தது என்று தெரிவித்துள்ளார் |
விஜயநகரத்தில் திருக்குறளை பாடலாக்கிய இயக்குனர்
திங்கள், அக்டோபர் 15, 2012
செய்திகள்
| Monday, 15 October 2012, By.Rajah. |
| இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தன்வீர் இயக்கும் படம் விஜய நகரம். |
|
இது பற்றி அவர் கூறுகையில், கல்வியை வியாபாரமாக்ககூடாது. பணம் படைத்தவர்கள்
மட்டுமே மருத்துவர் படிப்பை படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் அனைத்து தரப்பினருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு கதை உருவாகி உள்ளது. சிவன் கதாநாயகனாகவும், ஹாசினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பானுசந்தர், ஆர்யன், சஷி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கானா பாடகர் மரணகானா விஜி பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தின் சிறப்பு அம்சமாக திருக்குறளில் இருந்து கல்வி பற்றிய 10 குறள் தெரிவு செய்து அது பாடலாக்கப்பட்டிருக்கிறது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)