| திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,Ba.Rajah.{புகைப்படங்கள்], |
| போஸ்னியா நாட்டில் இரும்பு
பாலத்தை திருடி சென்றவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது பிராக்கோ. விளைநிலங்கள்
சூழ்ந்த இப்பகுதியில் ஆற்றை கடக்க இரும்பு பாலம் ஒன்று இருந்தது. 80ஆம் ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த வாரம் காணாமல் போனது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். வழக்கமாக கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகளை திருடும் நபர் ஒருவர் மீது பொலிசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 29 வயதுடைய அந்த திருடனின் வீட்டுக்கு வெளியே திருடப்பட்ட பாலம் இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த திருடனை பொலிசார் கைது செய்தனர். கழிவு நீர் கால்வாய் மூடிகளை திருடி வந்த திருடன் பெரிய தொகையை சம்பாதிக்கும் நோக்கில், இரும்பு பாலத்தையே பெயர்த்து எடுத்து சென்றதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
திங்கள், 22 அக்டோபர், 2012
போஸ்னியாவில் இரும்பு பாலம் திருட்டு: மக்கள் அதிர்ச்சி
திங்கள், அக்டோபர் 22, 2012
செய்திகள்
சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தியர் தீக்குளிப்பு
திங்கள், அக்டோபர் 22, 2012
செய்திகள்
| திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| சீனாவின் ஆக்கிரமிப்பை
கண்டித்து திபெத்தை சேர்ந்த நபர் தீக்குளித்து உயிரிழந்தார்.
சீனாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கான்ஸீ மாகாணத்தை சேர்ந்த லாமோ கியாப்(வயது
27) என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா திபெத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்று கூறியபடியே தீ வைத்து கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த நபரொருவர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை சுமார் 60 திபெத்தியர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். திபெத் விடுதலை இயக்கத்தை சேர்ந்த இயக்குனர் பிரிக்டென் கூறுகையில், சீனாவின் நடவடிக்கையை சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வு காண வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார் |
பிரிட்டன் முன்னாள் பிரதமரின் கார் ஏலம்
திங்கள், அக்டோபர் 22, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
| திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[புகைப்படங்கள்], |
| பிரிட்டனின் முன்னாள் பிரதமர்
வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய லேண்ட் ரோவர் கார் ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில்
விற்பனையானது.
சர்ச்சிலின் 80ஆவது பிறந்தநாளின் போது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இக்கார்
அவருக்கு பரிசளிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜ்ஷயரில் இக்கார் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இங்கு ஏலம் விடப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்கால வாகனங்களில் சர்ச்சில் பயன்படுத்திய கார் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
| முகப்பு |
குவைத்தில் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்
திங்கள், அக்டோபர் 22, 2012
செய்திகள்
| திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
| குவைத்தில் எதிர்வரும்
டிசம்பர் மாதம் 1ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
குவைத்தில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 50 இடங்களுக்கான
உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமான ஊழல் புகார்களை கூறி வந்தனர். இது தொடர்பாக பிரதமர் நசீர் முகமது பதவி விலகினார். இருப்பினும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல மாதங்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை. நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி, தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. இதையடுத்து 7ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரபு நாடுகளிலேயே குவைத் நாடாளுமன்றம் தான் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றமாக உள்ளது. குவைத் அரச குடும்பத்தினர் அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் செய்து வருகின்றனர். மேலும் ஈராக்கிலிருந்து வாபஸ் பெற்ற அமெரிக்க இராணுவம், ஈரானை ஒடுக்க குவைத்தை தன் படைத்தளமாகப் பயன்படுத்தி வருகிறது. துபாய், தோகா போன்றவை பொருளாதாரத்தில் முன்னேறியவையாக உள்ளன. ஆனால் குவைத் இன்னும் முன்னேற்றமடையாமல் உள்ளதாக எதிர்க்கட்சியினர் கண்டித்து உள்ளனர் |
ஈரானுடன் பேச்சுவார்த்தையா? அமெரிக்கா மறுப்பு
திங்கள், அக்டோபர் 22, 2012
செய்திகள்
| திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| அணு ஆயுத
திட்டம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா
அறிவித்துள்ளது.
ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற்கத்திய
நாடுகள் குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும்
விதித்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும், ஈரானும் கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் தொடங்கிய போது முதலில் நடத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரை பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தரப்பும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் நகல்கள், அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய சிறிய குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளதுடன், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் டாமி வீட்டர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையல்ல. எனினும் ஈரானின் அணு ஆயுதத் திடடம் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா நிர்வாகம் தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார் |
அழகு நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி
திங்கள், அக்டோபர் 22, 2012
காணொளி
| திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[காணொளி,புகைப்படங்கள்,] |
| அமெரிக்காவில் பிரபல அழகு
நிலையம் ஒன்றில் மர்ம மனிதன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர்
பலியாகினர், 7 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் புரூக்பீல்டு
ஸ்கொயர் என்ற ஷாப்பிங் மால் உள்ளது. இந்த மாலுக்கு புகுந்த மர்ம மனிதன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாயினர், 7 பேர் காயமுற்றனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் அந்த இடத்திலேயே இருப்பதாக தகவல் கிடைத்ததும், விரைந்த வந்த பொலிசார் சுற்றி வளைத்தனர். இருப்பினும் அந்நபர் தப்பி சென்று விட்டார். 6 அடி உயரமுள்ள கருப்பின இளைஞர் ஒருவரின் செயலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே மில்வாக்கி நகரில் உள்ள குருத்வாராவில் பக்தர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். திரையரங்கிலும் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இரவு நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. |
| முகப்பு |
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
சசிகுமார் இயக்கத்தில் நடிக்க முடிவா?: சூர்யா பேட்டி
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்
சசிகுமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகுமார் ஏற்கனவே சுப்பிரமணியபுரம் ஹிட் படத்தை இயக்கி பிரபலமானார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
தற்போது சூர்யாவுக்காக கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து சூர்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சசிகுமாரும், நானும் சந்தித்து பேசினோம். கதை பற்றியும் விவாதித்தோம். ஆனால் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தால் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சூர்யாவுக்காக கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து சூர்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சசிகுமாரும், நானும் சந்தித்து பேசினோம். கதை பற்றியும் விவாதித்தோம். ஆனால் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தால் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை காலங்களில் மக்களை கவர
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்
புத்தம் புதுப்படங்களை அள்ளிய சன் டிவிவிடுமுறை தினங்களில் ஒளிபரப்புவதற்காக நான் ஈ, மிரட்டல், கலகலப்பு, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
விடுமுறை தினம் வந்தாலே போதும் சிறப்பு நிகழ்ச்சிகளையும், நடிகைகளின் பேட்டி, சிறப்பு திறப்படங்கள் போன்றவைகளை ஒளிபரப்பி விளம்பரங்கள் மூலம் கல்லா கட்டிவிடுவார்கள். இதில் புத்தம் புதுப்படங்களை யார் ஒளிபரப்புவது என்ற போட்டி வேறு ஏற்படும்.
ஒரே நடிகர் நடித்த படத்தை இரண்டு மூன்று சேனல்களில் போட்டு மக்களை குழப்புவார்கள். இனி தொடர்ந்து பண்டிகை விடுமுறைக் காலம் வர உள்ளதால் சன் டிவி அதற்கேற்ப ரசிகர்களை கவரும் வகையில் இப்பொழுது இருந்தே நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கிவிட்டனராம்.
ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல் என விடுமுறைக் காலங்கள் தொடர்ந்து வர உள்ளன. அதற்கேற்ப புத்தம் புதுப்படங்களின் சேட்டிலைட் உரிமையை சத்தமில்லாமல் கைப்பற்றியுள்ளது.
கலகலப்பு, நான் ஈ, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், மிரட்டல், சுந்தரபாண்டியன், பாகன், பிட்ஸா போன்ற பிரபல படங்கள் சன் டிவி வசம் உள்ளதால் வரிசையாக விடுமுறை தினங்களில் அவற்றை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது சன் டிவி. இதன் மூலம் அதிக அளவில் விளம்பரங்களை பெற முடியும் என்றும் எதிர்பார்க்கின்றனர் சன்டிவி நிர்வாகத்தினர்.
விடுமுறை தினம் வந்தாலே போதும் சிறப்பு நிகழ்ச்சிகளையும், நடிகைகளின் பேட்டி, சிறப்பு திறப்படங்கள் போன்றவைகளை ஒளிபரப்பி விளம்பரங்கள் மூலம் கல்லா கட்டிவிடுவார்கள். இதில் புத்தம் புதுப்படங்களை யார் ஒளிபரப்புவது என்ற போட்டி வேறு ஏற்படும்.
ஒரே நடிகர் நடித்த படத்தை இரண்டு மூன்று சேனல்களில் போட்டு மக்களை குழப்புவார்கள். இனி தொடர்ந்து பண்டிகை விடுமுறைக் காலம் வர உள்ளதால் சன் டிவி அதற்கேற்ப ரசிகர்களை கவரும் வகையில் இப்பொழுது இருந்தே நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கிவிட்டனராம்.
ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல் என விடுமுறைக் காலங்கள் தொடர்ந்து வர உள்ளன. அதற்கேற்ப புத்தம் புதுப்படங்களின் சேட்டிலைட் உரிமையை சத்தமில்லாமல் கைப்பற்றியுள்ளது.
கலகலப்பு, நான் ஈ, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், மிரட்டல், சுந்தரபாண்டியன், பாகன், பிட்ஸா போன்ற பிரபல படங்கள் சன் டிவி வசம் உள்ளதால் வரிசையாக விடுமுறை தினங்களில் அவற்றை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது சன் டிவி. இதன் மூலம் அதிக அளவில் விளம்பரங்களை பெற முடியும் என்றும் எதிர்பார்க்கின்றனர் சன்டிவி நிர்வாகத்தினர்.
யாழ்ப்பாணத்து தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவம்!
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர்.
அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.
யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின் மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின் கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேலேழுந்துள்ளன.
வடக்கில் உள்ள முன்னாள் போராளிகளோ சரி, போரின் போது அவயவங்களை இழந்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்த முடியாத பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் படையினரால் மேலும் மேலும் தங்களுக்குள்ளே ஒரு உளவியல் போராட்டத்தினையே நடாத்திக் கொண்டு வருகின்றனர். நிம்மதியான வாழ்க்கை கிடைக்காதா என்ற ஏக்கம் பெண்களிற்கு மட்டுமல்ல. தற்போது ஆண்கள் பலரிடமும் கேள்விகளாக தொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் காரணம், தமிழ்ப் பெண்களை தற்போது குறிவைத்துள்ள இராணுவத்தினரைப் பற்றிய சிந்தனைகள் தான். வெளியில் சொல்ல முடியாமலும், சொல்வதானால் பழிக்கு ஆளாக வேண்டிவரும் என்ற பயத்தினாலும் பல பெண்கள் பல பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை சகித்துக் கொண்டுதான் போகவேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சமூகக் கட்டமைப்புக்கள் வலுவிழந்து வருகின்றமையை உணரக் கூடியதாக உள்ளது. அதாவது திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலங்களிலெல்லாம் கட்டுப்பாடுகள் மீறமுடியாதவைகளாக இருந்தன. மீறினால் நேரடியாகவே மறைமுகமாகவே தண்டனைகள் வலுவாக இருந்தன. ஆனால் இன்று ஆறாத ரணங்களோடு வாழ்க்கையினைக் கொண்டு நடத்தும் தமிழ்ச் சமூகத்தை சிங்கள மேலாதிக்க அரசாங்கம் எவ்விதத்திலெல்லாம் அடிமைப்படுத்த முடியுமோ அதையெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்கிறது.
தமிழர்களின் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்த சாதாரண மக்கள், அரசியல் ரீதியாக வழி நடத்திய தமிழ்த் தலைவர்களின் காலத்திலும், தமிழர்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் காலத்திலும், தங்களுடைய கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், மரபுகள் வழக்காறுகள் ஆகியவற்றை மிகவும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் மட்டுமின்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களும் அவ்வாறே வாழ்ந்தனர். ஆனால் ஆயுத ரீதியாக எப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ, அன்றிலிருந்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகள், உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றை விரட்டியடிக்க சமூக சீரழிவு எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் வன்புணர்வுக்குள்ளாக்கியும், பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை மேற்கொண்டும் இராணுவத்தினர் தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர். பிணம் தின்னும் கழுகுகளைப் போலவே அவர்கள் செயற்பட்டனர் என்பதில் சந்தேகம் இல்லை. இது முடிந்துவிட்ட பின், மீண்டும் இளம் பெண்களை குறிவைத்திருப்பது வேதனைக்குரியது. ( இதற்கு சில பெண்கள் உடன்படுகின்றமை அதைவிட வெட்கக்கேடு)
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகமான பாடசாலைச் சிறுமிகளை தங்களது வலையில் சிக்க வைக்கும் இராணுவத்தினர் வயது வித்தியாசமின்றி திருமணம் செய்யவும் துடிக்கின்றனர். ஒரு புறம் காதல் லீலைகள் நடந்தேற, மறுபுறம் திருமணம் முடிப்பதில் தீவிர முயற்சிகள். அவ்வாறு திருமணம் செய்வதற்காக பொய் சான்றிதழ்களை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இரவு பகலாக நடமாடும் தமிழர்களின் பகுதிகளின் நடமாடும் படையினர் அங்குள்ள பெண்களைப் பார்க்கும் பார்வை கழுகைவிட மோசமானதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் காரணம், யாராலும் தங்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற சிந்தனைகள் மேலோங்கி இருப்பதுதான்.
அதாவது, தமிழ்ப் பெண்ணைத் திருமணம் முடித்துவிட்டு, வேறொரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்யலாம். இல்லையேல் வேறு பெண்களை காதலிக்கலாம். (எத்தனை பெண்களென்றாலும்) காரணம், திருமணம் முடித்தது தமிழ்ப் பெண்ணை. அவளாலோ இல்லை, அவள் சார்பாகவோ யாரும் கேட்க முடியாது. கேட்கவும் வேறு நபர்கள் முன்வர மாட்டார்கள். சிங்கள அரசின் பார்வையில் தமிழினம் ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனம் என கருதப்படுவதனால்.
அது மட்டுமல்ல, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்த சிங்கள அரசு, தமிழ் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்காக இவ்வாறு சிங்கள இராணுவம் திட்டமிட்டு தமிழ்ப் பெண்களை திருமணம் முடித்து, தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களப் பரம்பலை உருவாக்கலாம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தங்களது தொழில் நிமித்தம் யாழ். மாவட்டத்தில் ஏனைய படைகள் இருப்பதனால், அவ் இராணுவத்தினர் நீண்ட காலங்களாக தம் குடும்பங்களைப் பிரிந்து தங்கி வாழ்வதனால் அவர்களின் இச்சைக்காக தமிழ்ப் பெண்களை நாடுவதனால் திருமணம் செய்யும் ஆசை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரிப்பதோடு, யாழில் கலாசார சீரழிவுகளும் கூடவே இள வயது கர்ப்பங்களும் அதிகரிக்கின்றன.
இதனால் வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எந்த நேரமும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பாலியல் துஸ்பிரயோகம், விபச்சார நிர்ப்பந்தம், இளவயதுக் கர்ப்பம் போன்ற சம்பவங்களால் பாதிப்புற்ற பெண்கள், நீதி கேட்கவோ, அல்லது சட்ட பரிகாரம் தேடிக்கொள்ளவோ, சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ முடியாத சூழ்நிலை போன்ற கொடுமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றமையே உண்மை.
இவ்வருடம் ஜனவரி மாதம் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் முன்னாள் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. இதுவே யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது திருமண ஆசைக்கான தூண்டுகோலாகவும் இருந்திருக்கலாம்.
இவ்வாறு எமது பண்பாட்டுக் கோலங்கள் சிதைக்கப்பட்டு, தாயகத்தின் மக்கள் தொகைச் சமநிலையை மாற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல என்பதனை உறுதி செய்துவிடும் என்பதே நிதர்சனம்
சிரியாவின் உள்நாட்டு போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்:
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்
| ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| அமெரிக்கா, துருக்கி வேண்டுகோள்முஸ்லிம்களின்
பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருப்பதால், சிரியாவில் நடந்து வரும் போரை
தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா சிரியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக நடந்து வரும் உள்நாட்டு
போரில், இதுவரை 30 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிரியாவில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை காலம் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த விழாவில் அனைத்து முஸ்லிம் மக்களும் பங்கேற்க வசதியாக சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் சிரியாவை வலியுறுத்தி உள்ளன. இதுகுறித்து அமெரிக்க அதிகாரி விக்டோரியா நூலந்து கூறுகையில், சிரியாவில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த மத விழாவில் அனைத்து முஸ்லிம் மக்களும் எந்த வித பய உணர்வும் இல்லாமல் கலந்து கொள்ள வசதியாக தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதற்காக எங்களது ஆதரவாளர் பெர்காமி அங்கு விரைந்து உள்ளார். நாங்கள் சிரியாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். உங்களது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மக்கள் பண்டிகை கால கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாட வசதியாகவும், மனித நேயத்துடன் சிரியா நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம் என்றார். இந்நிலையில் சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு சிரியாவின் ஆதரவு நாடுகளான துருக்கி மற்றும் ஈரான் நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. துருக்கி வெளிவிவகாரத்துறை அமைச்சர் அகமத் தவுத்தோகுலு, மக்களின் விடுமுறை கொண்டாடத்தை சீர்குலைக்காத வகையில் சிரியாவில் 3 அல்லது 4 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






















