ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
அமெரிக்கா, துருக்கி வேண்டுகோள்முஸ்லிம்களின்
பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருப்பதால், சிரியாவில் நடந்து வரும் போரை
தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா சிரியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக நடந்து வரும் உள்நாட்டு
போரில், இதுவரை 30 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிரியாவில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை காலம் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த விழாவில் அனைத்து முஸ்லிம் மக்களும் பங்கேற்க வசதியாக சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் சிரியாவை வலியுறுத்தி உள்ளன. இதுகுறித்து அமெரிக்க அதிகாரி விக்டோரியா நூலந்து கூறுகையில், சிரியாவில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த மத விழாவில் அனைத்து முஸ்லிம் மக்களும் எந்த வித பய உணர்வும் இல்லாமல் கலந்து கொள்ள வசதியாக தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதற்காக எங்களது ஆதரவாளர் பெர்காமி அங்கு விரைந்து உள்ளார். நாங்கள் சிரியாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். உங்களது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மக்கள் பண்டிகை கால கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாட வசதியாகவும், மனித நேயத்துடன் சிரியா நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம் என்றார். இந்நிலையில் சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு சிரியாவின் ஆதரவு நாடுகளான துருக்கி மற்றும் ஈரான் நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. துருக்கி வெளிவிவகாரத்துறை அமைச்சர் அகமத் தவுத்தோகுலு, மக்களின் விடுமுறை கொண்டாடத்தை சீர்குலைக்காத வகையில் சிரியாவில் 3 அல்லது 4 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். |
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
சிரியாவின் உள்நாட்டு போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்:
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்