siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மரணத்தை ஏற்படுத்தும் பக்கவாத நோயால் பிடெல் காஸ்ட்ரோ பாதிப்பு

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012.By.Rajah.
கியூபாவின் மாஜி ஜனாதிபதியும் புரட்சியாளருமான பிடெல் காஸ்ட்ரோ(வயது 86) பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தன்னை சுற்றியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுவதாகவும் பேச முடியாத நிலையில் காஸ்ட்ரோ உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகின்ற மருத்துவர் ஜோஸ் மார்க்குயினா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, காஸ்ட்ரோவை தற்போது தாக்கியிருக்கும் பக்கவாத நோய் நரம்பு மண்டலத்தை முழுவதும் செயலிழக்க செய்து இறப்பை ஏற்படுத்த வல்லதாகும் என்றார்.
இதற்கிடையில் கியூபாவிலும் அமெரிக்காவிலும் காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்றும் கோமா நிலைக்கு சென்று விட்டார் எனவும் சில பத்திரிக்கைகள் பல மாதங்களாக வெளியிட்டு வருகின்றன.
பிடெல் காஸ்ட்ரோ 1959- 2006 வரை கியூபாவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என முக்கிய தலைமைப்பதவிகளை வகித்து வந்தவர் ஆவார்.
2006ம் ஆண்டு இவர் பதவி விலகிய பின்னர், இன்று வரை இவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதியாக பதவியில் உள்ளார்.