ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
அவுஸ்திரேலியா அருகே தெற்கு
பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுக் கூட்டங்களில் இன்று காலை 4.31 மணிக்கு கடும்
நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.6 என பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. எனவே நிலநடுக்கம் சற்று சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். மேலும் தங்களது வீடுகளை விட்டுவெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். தெற்கு பசிபிக் கடலில் 22 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்நில நடுக்கத்தினால் கடலில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழுந்தன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை |
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
அவுஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: மக்கள் ஓட்டம்
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
செய்திகள்