siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 24 அக்டோபர், 2012

முதல் மனிதன் குரங்கு இல்லையாம்..

  October 24, 2012.By.Rajah.அணில்! சொல்கிறது புதிய ஆய்வு நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல்,அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாசிலில் உள்ள உருவம் தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது.
இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது.
மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அணில் போன்ற உயிரினம் தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

தனது மரணத்தை முன்னரே பேட்டியின் மூலம் தெரிவித்த யாஷ் சோப்ரா

 

October 24, 2012.By.Rajah{காணொளி, .புகைப்படங்கள்}பாலிவுட்டில் “கிங்க் ஆப் ரொமான்ஸ்” என வர்ணிக்கப்படும் யாஷ் சோப்ரா, தன் மரணத்திற்கு முன்னதாக சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்தார்.
அண்மையில் தனது 80 வது பிறந்த தினத்தை நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து கொண்டாடினார் யாஷ் சோப்ரா.
அப்போது உங்களின் அடுத்த திட்டம் என்ன என்ற கேள்விக்கு தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் Jab Tak Hai Jaan எனது இறுதிப்படம் என கூறினார்.
இவர் இயக்கிய படங்கள் Kabhie Kabhie, Silsila, Chandni ,Dil to Pagal Hai போன்றவை உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்ற படங்களாகும்.
இந்தியா சினிமாவின் ஜாம்பவானாக இருந்த யாஷ் சோப்ரா, தனது திரைப்படங்களின் மூலமாக பல தலைமுறையினரை மகிழ்வித்துள்ளார் என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பேசிய உரையாடல் ஒன்று தற்போது நமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.




 

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்!!!

       
 
Wednesday24October2012 .By.Rajah.உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மைஇல்லைஎன்றுபயப்படுகிறார்கள் அதனைப்பற்றிஒருவிரிவானஅலசல். பெரும்பான்மையானஆண்கள்தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் !புதிய ஆய்வு!


     
Wednesday24October2012.By.Rajah.வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை.
சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.
வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.

ஈழத்து மக்களையும் மீனவர்களையும் சின்மயி அவமானபடுத்தினாரா???


Wednesday.24.October 2012.By.Rajah.டுவிட்டரில் தன்னைப்பற்றி அவதூறாக எழுதுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கடந்த தினங்களுக்கு முன்பு பாடகி சின்மயி புகார் கொடுத்திருந்தார்.
சின்மயி புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறையின் கணனி குற்றப் பிரிவினர் சரவணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்களைத் தொந்தரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குக்கள் பதிவாயிருக்கின்றன.
இந்நிலையில் நிஃப்ட் எனப்படும் சென்னை நாகரிக ஆடைகளுக்கான கல்லூரிப் பேராசிரியர் சரவணகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சின்மயி செய்தது என்ன?
சினிமா பின்னணி பாடகி சின்மயி டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இவர்கள் அவதூறாக எழுதியுள்ளனர்.
நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை என முத்து உதிர்த்திருக்கிறார் சின்மயி.
இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதுமட்டுமின்றி மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது? என்றும் சின்மயி கூறியிருந்தாராம்.
ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானைய குற்றம் சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
இவ்வளவு நாளாக அடக்கி வாசிக்கப்பட்ட இந்த ஜாதியினர் எப்பொழுது எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கிடையே இணையதளங்கள் வாயிலாக பாலியல் தொந்திரவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவர் கைதாவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

உயரத்தில் என்னோட சாதனைப் படைக்க யாராவது இருக்கீங்களா!!

         
Wednesday 24 October 2012 By.Rajah.
போலந்து நாட்டின்,ஜரோஷின் எனும் பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஆல்தோ ஷனி எனும் நாய்க்குட்டி உலகிலேயே உயரம் குறைந்த நாய்க்குட்டி என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளது.
இதன் உயரம் 2.36 அங்குலமாகக் காணப்படுவதுடன் நியைானது 100 கிராம்களாக உள்ளது. இதன்படி இந்த நாய்க் குட்டியானது தனது எஜமானியின் கைப்பேசியைக் காட்டிலும் உயரம், எடை என்பனவற்றில் குறைந்ததாக காணப்படுகின்றது.







கொழும்பின் பிரபல கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையில்

         
Tuesday 23 October 2012  By.Rajah.
கொழும்பின் பிரபல பாடசாலைகளான ரோயல் மற்றும் தேஸ்டன் கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு-7 ரீட் வீதி பகுதியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் நிலைமை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வர முயற்சித்துள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம் மாணவக்குழு மோதலால் சுற்றுவட்டாரத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் கருவாத்தோட்டம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் இம்மோதலில் ஆறு மாணவர்களும் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.





1300 திரையரங்குகளில் வெளிவரும் SKYFALL

Tuesday, 23 October 2012,.By.Rajah.ஹாலிவுட்டில் இதுவரை 22 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ள நிலையில் இப்போது 23வது படமாக SKYFALL வெளிவரவுள்ளது.
படத்தின் கதாநாயகனாக டேனியல் கிரேக் நடித்திருக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நாயகன் அளவுக்கு வில்லன் பாத்திரமும் பேசப்படும்படி சக்திமிக்கதாக இருக்கும்.
வில்லனாக நடித்துள்ளவர் ஜேவியர் பேர்டம். சிறுவயது முதலே நடிப்பு அனுபவம் கொண்டவர். படத்துக்காக தன் தலைமுடியை வெள்ளையாக மாற்றிக் கொண்டுள்ளார்.
ஜேம்ஸ் பாண்டிற்கு காதலியாக வலம் வருபவர் நயோமி, பெர்னிஸ் மர்லோஹி இருவருமே பெரிய நட்சத்திரங்கள் ஆவார்.
மேலும் ஹெலன் மெக்ரோரி, ஜீடி டென்ச் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் சாம் மெண்டஸ். இவர் இயக்கியுள்ள எழாவது படம் தான் SKYFALL.
இவர் அகாடாமி விருது உள்பட பல விருதுகள் பெற்ற படைப்பாளி. ஜேம்ஸ்பாண்டின் முதல் பதினாறு படங்கள் ஐந்து இயக்குநர்களால் இயக்கப்பட்டன.
கடந்த நவம்பர் 7, 2011ல் படப்பிடிப்பு தொடங்கியது. லண்டனில் ஆரம்பித்து கிரீன் வீச் ஓல்டு ராயல் நேவல் கல்லூரி, பாலங்கள் மருத்துவமனை, ஸ்டேடியம், தேசிய கேலரி என்று எடுக்கப்பட்டன.
துருக்கியின் இஸ்தான்புல்லில் பல இடங்களில் எடுக்கப்பட்டன. அங்கு மட்டும் மூன்று மாதங்கள் தங்கியிருந்தது படக்குழு.
சீனாவில் ஷாங்காய் நகரில் ஏர்போர்ட் போன்ற பல இடங்கள், ஜப்பானில் நாகசாகி கடற்கரை பகுதி, ஹாஷிமா தீவு, மனிதர் வசிக்காத சில பகுதிகளிலும் செட் போட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.
மொத்தம் 133 நாட்கள் படக்குழு காட்சிகளை பதிவு செய்துள்ளன. துருக்கியில் ஏராளமான இளைகர்களுக்குப் பயிற்சியளித்து ஒத்திகை பார்த்து காட்சிகளில் இடம்பெற செய்துள்ளார்கள்.
துருக்கியில் கமெரா காணாத பல பகுதிகளை படம்பிடித்து வந்துள்ளனர். அங்கு ஸ்பைஸ் பஜார், க்ராண்ட் பஜார் போன்ற வணிகவளாகங்கள் மூடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அதற்கான வியாபார இழப்பை தினமும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கியே படப்பிடிப்பு நடந்துள்ளது. எங்கேல்லாம் சேதங்கள் ஏற்பட்டதோ அவை புதிதாக அமைத்து தரப்பட்டது.
இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படமான SKYFALL உலக நாடுகளைப் போல இந்தியாவிலும் நவம்பர் 1ல் வெளியாகிறது.
உலக ரசிகர்களின் 150 மில்லியன் டொலர் கனவு விரைவில் உங்கள் திரையரங்குகளில் காட்சியாக விரிய இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளிவருகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது.
இந்தியாவில் மட்டும் 1300 திரையரங்குகளில் வெளி வருகிறது SKYFALL

அமாரவதி பட தயாரிப்பாளர்

 Tuesday, 23 October 2012, By.Rajah.சோழாபொன்னுரங்கம் மகள் திருமணம்
கொலிவுட்டில் நடிகர் அஜித்குமார் அறிமுகமான அமராவதி படத்தை தயாரித்தவர் சோழாபொன்னுரங்கம்.
இவர் சாதிசனம், தலைவாசல், காலாட்படை, ஒரு கல்லூரியின் கதை போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
இவரது மகள் மோகன சங்கவியும் லாடம், யாதுமாகி போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
மோகன சங்கவிக்கும், முரளி என்பவருக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் பாக்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் சிபிராஜ், எஸ்.வி சேகர் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் திருட்டு: கோபமடையும் பொதுமக்கள்

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,.By.Rajah.பெர்ன் மாநிலத்தில் உள்ள பீல் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இயந்திரப்படகுகளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் திருடு போயுள்ளன. இவற்றைத் திருடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும்படி மாநிலக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்திருட்டு அதிகாலையிலோ நடந்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
பீல் ஏரியின் கிழக்கு பக்கத்தில் டாஃபலென் படகுத்துறையின் அருகே இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. திருடு போன இந்தப் படகுகளின் இயந்திரங்கள் பல்லாயிரம் ஃபிராங்க் மதிப்புடையனவாகும்.
ஏரிப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர்களை பொதுமக்கள் எவரேனும் பார்த்திருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
இத்திருட்டு குறித்து பொதுமக்களை மிகுந்த கோபம் அடையச் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் எல்லைகளை எல்லாப்பக்கமும் திறந்துவிட்டதால் ஐரோப்பாவின் களவுக்களமாக இந்நாடு மாறிவிட்டது என்றனர். நாட்டின் உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது, என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்