siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 23 அக்டோபர், 2012

1300 திரையரங்குகளில் வெளிவரும் SKYFALL

Tuesday, 23 October 2012,.By.Rajah.ஹாலிவுட்டில் இதுவரை 22 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ள நிலையில் இப்போது 23வது படமாக SKYFALL வெளிவரவுள்ளது.
படத்தின் கதாநாயகனாக டேனியல் கிரேக் நடித்திருக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நாயகன் அளவுக்கு வில்லன் பாத்திரமும் பேசப்படும்படி சக்திமிக்கதாக இருக்கும்.
வில்லனாக நடித்துள்ளவர் ஜேவியர் பேர்டம். சிறுவயது முதலே நடிப்பு அனுபவம் கொண்டவர். படத்துக்காக தன் தலைமுடியை வெள்ளையாக மாற்றிக் கொண்டுள்ளார்.
ஜேம்ஸ் பாண்டிற்கு காதலியாக வலம் வருபவர் நயோமி, பெர்னிஸ் மர்லோஹி இருவருமே பெரிய நட்சத்திரங்கள் ஆவார்.
மேலும் ஹெலன் மெக்ரோரி, ஜீடி டென்ச் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் சாம் மெண்டஸ். இவர் இயக்கியுள்ள எழாவது படம் தான் SKYFALL.
இவர் அகாடாமி விருது உள்பட பல விருதுகள் பெற்ற படைப்பாளி. ஜேம்ஸ்பாண்டின் முதல் பதினாறு படங்கள் ஐந்து இயக்குநர்களால் இயக்கப்பட்டன.
கடந்த நவம்பர் 7, 2011ல் படப்பிடிப்பு தொடங்கியது. லண்டனில் ஆரம்பித்து கிரீன் வீச் ஓல்டு ராயல் நேவல் கல்லூரி, பாலங்கள் மருத்துவமனை, ஸ்டேடியம், தேசிய கேலரி என்று எடுக்கப்பட்டன.
துருக்கியின் இஸ்தான்புல்லில் பல இடங்களில் எடுக்கப்பட்டன. அங்கு மட்டும் மூன்று மாதங்கள் தங்கியிருந்தது படக்குழு.
சீனாவில் ஷாங்காய் நகரில் ஏர்போர்ட் போன்ற பல இடங்கள், ஜப்பானில் நாகசாகி கடற்கரை பகுதி, ஹாஷிமா தீவு, மனிதர் வசிக்காத சில பகுதிகளிலும் செட் போட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.
மொத்தம் 133 நாட்கள் படக்குழு காட்சிகளை பதிவு செய்துள்ளன. துருக்கியில் ஏராளமான இளைகர்களுக்குப் பயிற்சியளித்து ஒத்திகை பார்த்து காட்சிகளில் இடம்பெற செய்துள்ளார்கள்.
துருக்கியில் கமெரா காணாத பல பகுதிகளை படம்பிடித்து வந்துள்ளனர். அங்கு ஸ்பைஸ் பஜார், க்ராண்ட் பஜார் போன்ற வணிகவளாகங்கள் மூடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அதற்கான வியாபார இழப்பை தினமும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கியே படப்பிடிப்பு நடந்துள்ளது. எங்கேல்லாம் சேதங்கள் ஏற்பட்டதோ அவை புதிதாக அமைத்து தரப்பட்டது.
இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படமான SKYFALL உலக நாடுகளைப் போல இந்தியாவிலும் நவம்பர் 1ல் வெளியாகிறது.
உலக ரசிகர்களின் 150 மில்லியன் டொலர் கனவு விரைவில் உங்கள் திரையரங்குகளில் காட்சியாக விரிய இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளிவருகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது.
இந்தியாவில் மட்டும் 1300 திரையரங்குகளில் வெளி வருகிறது SKYFALL