siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 23 அக்டோபர், 2012

8 வயது சிறுவன் இறந்து விட்டதாக தவறுதலாக அறிவித்த மருத்துவமனை

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அமெரிக்காவில், 8 வயதான தங்கள் மகன் இறந்துவிட்டதாக தவறாக அறிவித்த மருத்துவ மனைக்கெதிராக பெற்றொர் வழக்குத் தாக் கல் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த பிங் டோர்ஸி, ஷீனா லேன் தம்பதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஜேலன் டோர்ஸி என்ற தங்களது 8 வயது மகனை அங்குள்ள மேர்ஸி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
இங்கு சிகிச்சை பெற்ற அந்த சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடலிலும், கண்களிலும் அசைவுகள் காணப்படுவதாக உறவி னர் கள் தெரிவித்ததையும் அலட்சியம் செய்து சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித் திருந் தனர்.
இந்நிலையில், சிறுவனின் இருதயம் இயங் குவதை உறுதிப்படுத்த ‘அல்ட்றா சவுண்ட்’ பரிசோதனையை மேற்கொள்ள உற வி னர்கள் நிர்ப்பந்தித்ததையடுத்து, சிறு வன் இறந்துவிட்டதாக மருத்துவர் களால் தெரிவிக்கப்பட்டு 5 மணி நேரம் கழித்து சிறுவனது இருதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது கண்டறியப் பட்டது.
இந்நிலையில் சிறுவனின் பெற்றோரான பிங் டோர்ஸியும், ஷீனா லேனும் மேற்படி மருத் து வமனை மீது வழக்குத் தாக்கல் செய்து ள் ள னர்.