செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
பிரித்தானியாவில் வசிக்கும்
மரினா சப்மான் என்ற பெண் தான் குரங்குகளால் வளர்க்கப்பட்டதாக அவரது புத்தகத்தில்
எழுதியுள்ளார்.
கடந்த 1950ம் ஆண்டு பிறந்த மரினா, 5 வயது சிறுமியாக இருந்த போது கடத்தல்
காரர்களால் கடத்தப்பட்டு காட்டில் விடப்பட்டார். அப்போது குரங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்ததாகவும் பறவைகளையும் முயல்களையும் பிடிக்க கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மரினா கூறியதாவது, பின்னர் வேட்டைக்காரர்கள் தன்னை ககுடா நகரிலுள்ள விபசார விடுதியொன்றில் விற்றதாகவும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறினார். அதன் பின் பல வருடங்களை வீதிகளில் கழித்த அவர் சில சமயங்களில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தொடர்ந்து சுமார் 15 வயதில் கொலம்பிய குடும்பமொன்றில் வீட்டுப் பணியாளராக பணியாற்றிய போது, மரினா லுஸ் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் வீட்டுப்பணியாளராக பணியாற்றிய கொலம்பிய குடும்பம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய பிரட்போர்ட்டில் 6 மாத காலம் தங்கிய போது அவர்களுடன் பிரித்தானியாவுக்கு வந்தேன். பின்னர் தேவாலயமொன்றில் ஜோன் சப்மான் என்பவரை சந்தித்து காதல் கொண்டேன். 1977ம் ஆண்டில் அவருடன் திருமண பந்தத்தில் இணைந்தேன். தற்போது எனக்கு இரு மகள்மார் உள்ளனர். தென் அமெரிக்காவில் நிலவும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் மோசமான நிலைப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எனது வாழ்க்கை கதையை புத்தகமாக ௭ழுதியுள்ளேன். மேற்படி கதையை தொலைக்காட்சி ஆவணப்படமாகவும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார். |
செவ்வாய், 23 அக்டோபர், 2012
குரங்குகளால் வளர்க்கப்பட்டதாக பெண்ணொருவர் எழுதிய புத்தகம்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்