செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில்
கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை சிறைக்கைதிகள் தப்பியோடி விட்டனர்.
ஒர்பேயில் உள்ள குரோய்ஸி சீர்திருத்த மையத்தில் மூன்று அறைகளில்
அடைக்கப்பட்டிருந்த ஆறு கைதிகள் ஞாயிறு அதிகாலை தப்பிச் சென்றனர். இவர்களில் நால்வரை சிறையதிகாரிகள் திரும்பவும் பிடித்து சிறையில் அடைத்தனர். இரண்டு பேரைத் தேடி வருகின்றனர். இத்தகவலை வாட் மாநிலத்தின் தகவல்தொடர்பு துறையின் அரசுச் செய்திக் குறிப்பு தெரிவித்தது. தப்பிச் சென்றவர்கள் சிறைக் கம்பிகளைக் கைவினைக் கருவி கொண்டு அறுத்துத் தப்பிச் சென்றனர். கண்காணிப்பு கமெராவின் உதவியுடன் நான்கு பேர் போனதைப் பார்த்த சிறை அதிகாரிகள் அவர்களின் பாதையை அடியொற்றிச் சென்று பிடித்துவிட்டனர். இதற்கு ராணுவ ஹெலிகப்டரும் காவல்துறையும் இவர்களுக்கு உதவியாக இருந்தது. தப்பிச் சென்றவர்களில் நான்கு பேர் அருகேயுள்ள சுச்சி கிராமத்தில் ஒளிந்திருந்தனர். மற்ற இருவர் கடந்த இடம் தெரியவில்லை. யூலை மாதம் 30ம் திகதி, அல்பேனியா மற்றும் கொசோவா நாட்டு குடிமக்கள் ஐந்து பேர் சிறையின் கூரையைப் பெயர்த்துத் தப்பிச் சென்றனர். இவர்களை இன்னும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது |
செவ்வாய், 23 அக்டோபர், 2012
வாட் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்