செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை விதித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுயாட்சி அதிகாரம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளல், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் போன்ற நிபந்தனைகளை புலம் பெயர் தமிழர்கள் விதித்துள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என புலம் பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர்.
நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட சாத்தியமில்லை என உலக தமிழர் அமைப்பின் பணிப்பாளர் பஞ்சலிங்கம் கந்தய்யா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் விரைவில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் என விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.