செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
தலைநகர் பெர்லினில் நடந்த
கூட்டத்தில் ஜனாதிபதி ஜோவாக்கீம் கௌக் மக்களுக்கு மத்தியில் பேருரை ஆற்றினார்.
அலெக்ஸாண்டர் பிளாட்ஸ் அருகே நகர்மன்றத்தில் நடந்த கூட்டத்தில்
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெர்லின் மாநகர் மேயர் கிளாஸ் வோவெரீட் தலைமை வகித்தார். அங்கு ஜனாதிபதி கௌக் சர்வசமய நல்லிணக்கம் குறித்து தன் முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் பிறரது சமயக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக ஒருவர் தமது சமயக் கொள்கைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இவ்வாறான தெளிந்த நல்லறிவு இருந்தால் ஒருவர் மற்றவருடைய பண்பாட்டை மதித்து அவருடன் இணக்கமாக வாழ முடியும். இணைந்து வாழும் பண்பாடு இன்றைய மனித இனத்தின் இன்றியமையாத் தேவை என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார். பின்பு நியு கோல்ன் மாவட்டத்தில் உள்ள மசூதிக்கு சென்று இளைஞர்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அக்கூட்டத்திற்கு வந்திருந்த பல இளம் தொழிலதிபர்களின் வர்த்தக மையத்தையும் அவர் பார்வையிட்டார். |
முகப்பு |