siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

யாழில் பொதுமக்கள் மீது கடற்படையினர் கடும் தாக்குதல்!

          
Sunday 04 November 2012By.Rajah.  சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் திருவடிநிலை பகுதி பொதுமக்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருவடிநிலையில் கடற்பகுதியின் ஒருபகுதியை கடற்படையினர் தடைசெய்து வைத்துள்ளதால் இரண்டு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில் திடீரென மோட்டார் சைக்களில் வருகைதந்த கடற்படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடற்படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து ஒன்று திரண்ட பொதுமக்கள் கடற்படையினரின் தண்ணீர் பௌசரை வழிமறித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சி செய்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆயினும் மேலதிகமாக குறித்த பகுதிக்கு கடற்படையினர் அனுப்பப்பட்டு பொதுமக்களை கலைக்க கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது

சனி, 3 நவம்பர், 2012

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

03.11.2012.By.Rajah.மூச்சுத் திணறல் காரணமாக நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
 மனோரமா ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். சில மாதங்களுக்கு முன் மாடிப்படியில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டது.

டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காலை குணமாக்கினர். பின்னர் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு பின் மீண்டும் உடல்நிலை பாதித்தது.
 மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன், கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை மருத்துவமனையில் இருந்தவர், பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். புதிய படம் ஒன்றில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் இன்று திடீரென மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
 உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் பிரேம் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

பெண்ணாக மாறியவருக்கு மீண்டும் வந்த விபரீத ஆசை!?

03.11.2012.By.Rajah..நான் பிறக்கும் போது ஆணாகத்தான் பிறந்தேன். ஆனால் எனக்கு பெண்ணைப்போல மாறவேண்டும் என்று ஆசை எழுந்தது. இதனால் பெண்ணாக மாற ஆபரேசன் செய்து கொண்டேன். அதுவே சிக்கலாகிவிட்டதால் மீண்டும் ஆணாக மாறிவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் – இப்படி சொன்னது யார் தெரியுமா? இங்கிலாந்திலேயே மிகக்குறைந்த வயதில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ரியா கூப்பர்தான்.
17 வயதில் பெண்ணாக மாறிய ரியா
ரியா கூப்பர் தன்னுடைய 17 வது வயதில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். மார்பக வளர்ச்சிக்காக பெண்மைக்கான ஹார்மோன்களையும் உடலில் பொருத்தினார். அசல் பெண்ணைப் போலவே அழகாகவும் மாறினார். அதுதான் சிக்கலாகி விட்டது.
தொலைந்து போன அமைதி
பெண்ணாக மாறியது முதல் மன அமைதியையும், மகிழ்ச்சியை தொலைத்து நிற்கும் ரியா மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாற முடிவு செய்துவிட்டார்.
 2 முறை தற்கொலை முயற்சி
பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சையினால் பாதிக்கப்பட்ட கூப்பர்,இருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதனால் அவருக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்
ஹார்மோன் படுத்தும் பாடு…
ஹார்மோன்களை மாற்றி அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் சில சமயம் மிகவும் சந்தோசமாக உணர்கிறேன். சில நேரங்களில் டல்லாக உணர்கிறேன் என்று கூறுகிறார் ரியா. இதனால் என் குடும்பத்தினரையும், உறவுகளையும் இழந்து தவிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்

வெள்ளி, 2 நவம்பர், 2012

ஏலத்திற்கு வரும் டயானாவின் காரின் விலை என்ன தெரியுமா?

02.11.2012.By.Rajah.பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்படவுள்ளது. இந்தக் கார் 2 லட்சம் அமெரிக்க டொலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிகாகோவில் உள்ள வோலோ ஆட்டோ மியூசியம் இந்த ஏலத்தை வருகிற 9ஆம் திகதி நடத்தவுள்ளது.

மறைந்த இளவரசி டயானாவும்,பிரிட்டன் இளவரசர் சார்லஸசும் 1985ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன் அவரது மனைவி நான்சி ஆகியோரைச் சந்தித்தனர்.

அப்போது இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தால் 1979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது. பின்னர், நிபுணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.1.07கோடி செலவிடப்பட்டுள்ளது.

விஷவாயு மற்றும் வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படாத வகையில் அதிகபட்ச பாதுகாப்புடன் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் நிறம் கொண்ட இக் காரின் ஆரம்ப ஏல விலை 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, டயானா ஆரம்பித்த புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட உள்ளது

பிரசவ அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம்! ?

          
Friday 02 November 2012.By.Rajah.பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு `பிரசவத்திற்கு முன்னான கோழைக்கசிவு' என்று பெயர்.
இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும். இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரை தாரையாக வெளியேறும்.

பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும்.
வலி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்தி வெளியே தள்ள வேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கல் கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று கூட எண்ணத் தோன்றும்.
கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்த வுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும். ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும். இதனால் குழந்தை யோனிக்குள் தள்ளப்படுகிறது.
யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும். இல்லை யென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும்.
தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். இந்த அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடன் மருத்துவமனையை அணுகுவது மிகவும் நல்லது

10 மாத கர்ப்ப காலத்தில் சந்தோஷமா இருக்கணுமா?


 

Friday 02 November 2012 By.Rajah.கர்ப்ப காலம் பத்து மாதம்தான்... ஆனா, தாய்மை என்ற உறவு, காலம் முழுதும் இருக்க கூடியது... அந்த உறவை பெற கர்ப்ப காலத்தில் இருந்தே பெண்கள் தங்களை பாதுகாப்பது அவசியம் என்கிறார் ராக்கி கபூர். இவர், ஆழ்வார்பேட்டையில் ‘த்வி மெட்டர்னிடி ஸ்டூடியோ‘ என்ற கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதோ அவரது பேட்டி...
என் கர்ப்ப காலத்தில் சந்தித்த பிரச்னைகள்தான் இந்த பயிற்சி மையத்தை ஆரம்பிக்க தூண்டியது. குழந்தைபேறு குறித்த கவுன்சிலிங் படிப்பை படித்து இருந்தாலும் என் கர்ப்பகாலத்தில் பல பிரச்னைகளை சந்தித்தேன். உடல் நலம் நன்றாக இருந்த போதும், சில மருத்துவ பிரச்னைகள் என் கர்ப்பகாலத்தை சிக்கலாக்கியது. நான் பட்ட அவஸ்தைகள் மற்ற பெண்களும் படக்கூடாது என்பது தான் இந்த பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கம்.
உடற்பயிற்சி என்றதும் ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்மில் செய்வது போல் இருக்கும் என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். இது அப்படி இல்லை. குழந்தை கருவில் உருவான நாள் முதல் அது வெளியே வரும் வரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், பத்து மாத காலத்தை எவ்வாறு சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி மட்டுமே இங்கு சொல்லித் தருகிறோம்.
கர்ப்பகாலத்தில் பல பெண்களுக்கு முதுகுவலி, மனச் சோர்வு, மனஉளைச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சில பெண்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்பட்டு அதனாலும் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். கர்ப்பகாலத்தில் சமச்சீரான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதே சமயம் சிறிய உடற்பயிற்சிகளும் செய்யலாம்.
உடல் எடை சீராகவும், ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். முதன் முதலில் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு குழப்பங்கள் இருக்கும்.  அந்தக் குழப்பங்களை போக்கி ஒரு தெளிவான பாதையை காட்டுகிறோம்.
இங்கு முக்கிய பயிற்சி மூச்சு பயிற்சி.
குழந்தையின் எடையை கால் தாங்குவதால், கால் தசைகள், வயிற்று பகுதி, இடுப்பு மற்றும் பெல்விக் தசைகள் வலுவாக்கும் பயிற்சியும் அளிக்கிறோம். மேலும் குழந்தைகளை கையாளும் முறை குறித்து கணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். குழந்தையை வசதியாக எப்படி தூக்குவது, உடை மாற்றுவது, அவசர கால நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆண்களுக்கும் சொல்லித் தருகிறோம். இவ்வாறு கூறினார் ராக்கி கபூர்

புகைப்படங்களை அழகான வீடியோவாக மாற்றுவதற்கு

வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2012,By.Rajah.உங்களது விருப்பமான புகைப்படங்களை Slide.ly என்ற தளம் அழகான வீடியோவாக மாற்றி தருகிறது.
இத்தளத்தை ஓபன் செய்ததும், அழகான புகைப்பட வீடியோ காட்சிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு நீங்களும் உருவாக்குவதற்கு, முதலில் பேஸ்புக் தளத்தில் உள்நுழைய வேண்டும்.

அதன் பின் Create New One என்பதை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தெரிவு செய்து கொள்ளவும்.

பிறகு பொருத்தமான பின்னணி இசையை தெரிவு செய்து விட்டால், உங்களுக்கான வீடியோ உருவாக்கப்படும்.

இதனை பேஸ்புக், டுவிட்டர் மற்றும் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் இந்த வீடியோ ஏற்கனவே உள்ள தொகுப்புகளின் பட்டியலில் இணைந்து விடும். இதனை மற்றவர்களும் பார்த்து, கருத்துகளை தெரிவிக்கலாம்.

வெறும் புகைப்படங்களாக பார்ப்பதையும், பகிர்வதையும் விட இது போல புகைப்பட வீடியோ தொகுப்பாக பார்த்து ரசிக்க முடிவது மிகவும் சுவாரஸ்யமானது தான்

உடல் எடை குறைய வேண்டுமா? ஐஸ் கட்டி சாப்பிடுங்க…

By.Rajah.ஐஸ் கட்டியை சாப்பிடுறவங்களா நீங்க? அதனால் ஒரு நன்மை இருக்கிறது. என்னவென்றால், ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் உடலில் இருக்கும் அதிகமான பவுண்டுகள் குறையுமாம். அந்த ஐஸ் கட்டிகள் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைக்க செய்கிறது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
உடல் எடை எளிதில் குறைய…
* எப்போது ஐஸ் கட்டிகளை சாப்பிடுகிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைகிறது. ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையானது இருக்கும். அதில் மேலம் இந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால், உடலில் வெப்பநிலை அதிகரித்து, உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புகள் மற்றும் கலோரியை கரைத்துவிடுகின்றது.
* ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால் வேறு எந்த உணவையும் உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எது வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் உண்டப் பின் கண்டிப்பாக ஐஸ்கட்டிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடல் எடை எளிதாக குறையும்.
* பசியைக் கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறைகிறதோ, அதேப் போல் தான் ஐஸ் கட்டிகளும் அதில் ஒன்று. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே நன்மை தான் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டாலும் கிடைக்கும்.
* ஐஸ் கட்டியும் ஒரு பசியைத் தடுக்கும் பொருள். இதனால் உட்கொள்வதால் உடல் எடையானது விரைவில் குறையும்.
* எப்போதெல்லாம் பசி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பசியானது அடங்கிவிடும். ஆகவே உடலில் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். அதனால் எடையும் குறையும்.
* ஐஸ் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு குடிக்க வேண்டும். அது பற்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆனால் அப்படியே ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பற்கள் வலுவை இழக்கும். ஆகவே அதனை தண்ணீராகத் தான் குடிக்க வேண்டும்.
* எப்போது எடை குறைந்தது போல் உணர்கிறீர்களோ, அப்போது அந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அளவுக்கு அதிகமாக ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால், அது பற்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஐஸ் கட்டிகளை எந்த காரணம் கொண்டும் கடித்து சாப்பிட வேண்டாம். மேலும் ஐஸ் உடலில் இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்திவிடும். ஆகவே எடை குறைய வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான்” என்பதை மனதில் கொண்டு எதையும் உண்ண வேண்டும்

வியாழன், 1 நவம்பர், 2012

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்! இது உண்மைக் கதை

 
வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012, .By.Rajah
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.
ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.
ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.
உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.
எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம்.
ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.
என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது.
சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.
நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்?
தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.
பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?
1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி.
பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.
ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!
அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?
இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!
இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?
ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!
என்ன நடந்தது?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.
அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன்.
எமது போராட்டத்தில் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்று விட்டோம். எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை.
முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது, இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன்.
எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.
அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் இராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன்.
காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன்.
எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.
பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.
அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர்.
சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர்.
காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது.
கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர்.
குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கைகொட்டி ரசித்தனர்.
அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர்.
பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர்.
எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் இருந்தேன்!
விசாரணை சித்திரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?
சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டு போய் விட்டனர்.
அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது.
பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!
நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?
பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன.
முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர்.
நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது.
பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!
ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?
எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர்.
பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை.
யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன்.
அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார்.
அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!
யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?
பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்திரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?
அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?
(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது)
இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை.
'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப் போடுகின்றனர்.
எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது.
எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன்.
(சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.)
இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்.
எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.
ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா?
கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா?
கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா?
கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!
உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி’ என விமர்சித்...'
(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

மியான்மர் முஸ்லிம் அகதிகள் சென்ற படகு கடலில் ??'

 வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012,By.Rajah.
மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுடன் மலேசியா புறப்பட்ட படகு வங்காள தேசத்துக்கு அருகே கடலில் மூழ்கிய விபத்தில் 130 பேரைக் காணவில்லை. மியான்மாரில் பௌத்த மத பழங்குடியினரின் தொந்தரவிலிருந்து தப்பிப்பதற்காக அங்குள்ள சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 1 இலட்சம் பேர் இதுவரை அயல் நாடான வங்காள தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் அகதிகளை ஏற்க முடியாது என்று வங்காள தேசத்திலிருந்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான அகதிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மலேசியாவில் தஞ்சம் புகுவதற்கென 135 பேருடன் சட்ட விரோதமாகப் புறப்பட்ட படகே வங்க தேசம் அருகே கடலில் மூழ்கியுள்ளது.
இதில் 6 பேர் மீன்பிடிப் படகுகள் மூலம் காப்பாற்றப் பட்டு காவலில் உள்ளனர்.
இதேவேளை வங்காள தேச கரையோர காவற்படையினரும் இராணுவத்தினரும் மீட்புப் பணிக்கும் கடலில் சடலங்கள் ஏதும் மிதந்து வருகின்றதா எனப் பார்வையிடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மியான்மாரில் சொந்த மாநிலம் அற்ற சுமார் 800 000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்ளனர்.
ஐ.நா சபை இவர்களை உலகில் மிக மோசமாகத் தொந்தரவுக்கு உள்ளாகும் சிறுபான்மையினத்தவர் என விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.