siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 10 நவம்பர், 2012

சீன ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை சிந்து!

     10.11.2012.By.Rajah.ஒரு மாத இடைவேளைக்கு பின் ஹாங்காங் மற்றும் சீன ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை சிந்து களமிறங்குகிறார்.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து, 17. சமீபத்தில் நடந்த சீன பாட்மின்டன் தொடரின் அரையிறுதியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கனையான லீ சியூரியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதன் பின் ஜப்பானில் நடந்த ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வலது முழங்கால் காயம் காரணமாக பங்கேற்வில்லை. இந்திய பாட்மின்டன் வீராங்கனையான செய்னா நேவலுக்கு பின் சிந்து மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சிந்து கூறுகையில்,""ஹாங்காங் மற்றும் சீன ஓபன் பாட்மின்டன் தொடர்களில் தற்போது பங்கேற்கவுள்ளேன். இத்தொடரில் சிறப்பாக செயல்பட திட்டமிட்டுள்ளேன். இதற்கான பயிற்சியும் சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளேன். நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெற முயற்சிப்பேன்.
செய்னாவிற்கு அடுத்தபடியாக என்னை குறிப்பிடுவதை பெருமையாக நினைக்கிறேன். ஒவ்வொரு முறை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. பாட்மின்டனில் சீன வீராங்கனைகள் வல்லவர்கள். அவர்களை எளிதாக வெல்ல முடியாது,''என்றார்

சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிந்தோரின் எண்ணிக்கை

10.11.2012.By.Rajah..வெலிக்கடை சிறைசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் காயமடைந்த 16 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 43க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளா அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையை சோதனை செய்ய சென்ற விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டது.

இதன்போது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தின் சிறையின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி சிறைக்கைதிகளும் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வீச்சு தாக்குதல்களையும் அவர்கள் நடத்தினர்.

வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 13 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும், நான்கு இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

விசேட அதிரடிப்படைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவனவும் மோதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட கைதிகளே கலகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த சம்பவத்தின்போது சிறை உடைக்கப்பட்டதாகவும் சிறைக்கைதிகள் தப்பிச்சென்றதாகவும் வெளியான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
 

 

முதன் முறையாக இன்டர்போலின் தலைவராக பிரான்ஸ் பெண்

10.11.2012.By.Rajah.சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைவராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பில் 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் கமிஷனராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிரிலி பாலஸ்டிராசி(வயது 58) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் இன்டர்போலில் பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பதும், பல முக்கியமான வழக்குகளை சிறந்த முறையில் கையாண்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய எம்.பி

10.11.2012.By.Rajah..பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில், அதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் தப்பினார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக், கியூ பிரிவு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மெதான் பக்டி.
இவர் நேற்று காலை பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகருக்கு கிழக்கே உள்ள தேரா பக்டி பகுதியில் உள்ள மசூதிக்கு சென்றார்.
மசூதிக்கு வெளியே ஷூவை கழற்றி விட்டு தொழுகைக்கு சென்றார். அப்போது அவரது ஷூவில் மர்ம நபர்கள் யாரோ வெடிகுண்டை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
தொழுகை முடிந்து வெளியே வந்த பக்டி, மீண்டும் ஷூவை அணிந்த போது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது.
இதில் பக்டியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் குவெட்டா நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்தனர்

ஆணுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

10.11.2012.By.Rajah.தனது கணவருடன் சிரித்து பேசி கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் கண்ணாடியால் தாக்கி காயப்படுத்திய மனைவிக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கிளவ்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் நதாஷா ஹவ்(வயது 31). இவரது கணவர், அமி ப்ளூக் என்ற பெண்ணுடன், ஒரு நைட் கிளப் பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நதாஷா, தனது கணவருடன் அமி சிரித்து சிரித்துப் பேசியபடி இருப்பதைப் பார்த்து கோபமடைந்தார். தனது கணவரை அமி வளைத்துப் போட்டு விட்டாரோ என்று பயந்து போனார்.
உடனே வேகமாக அமியை நெருங்கிய அவர் அங்கிருந்த கண்ணாடி கிளாஸை எடுத்து அமி முகத்தில் ஓங்கி அடித்தார். இதில் அமி அலறியபடி கீழே விழுந்தார்.
அப்படியும் நிறுத்தாத நதாஷா, அமியின் தலை முடியைப் பிடித்து இழுத்து சுவரில் மோதினார். இதில் அமியின் முகத்தில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு, வலியால் அலறித் துடித்தார்.
இதைப் பார்த்து அருகில் இருந்தோர் வேகமாக ஓடி வந்து நதாஷாவைத் தடுத்துப் பிடித்தனர். உடனே அமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நதாஷாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் நதாஷாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே 2001ம் ஆண்டு வேகமாக கார் ஓட்டியதாக நதாஷா மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று மலாலா நாள்: ஐ.நா கௌரவிப்பு

10.11.2012.By.Rajah.பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடிய மாணவி மலாலாவை கௌரவிக்கும் வகையில் நவம்பர் 10ம் திகதியை(இன்று) மலாலா நாளாக கொண்டாடுகிறது ஐ.நா.
பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்த மலாலா யூசுப் சாய்(வயது 14) தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில், மலாலாவை கௌரவிக்கும் வகையில் நவம்பர் 10ம் திகதி மலாலா நாளாக கொண்டாடப்படும் என ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மலாலா குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறுகையில், மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலக அடையாளச்சின்னம்.
கல்வி ஒரு அடிப்படை உரிமை என்றும் அது மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், மலாலா மற்றும் உலக நாடுகளிலுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய உலக சமூகம் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

வியாழன், 8 நவம்பர், 2012

'கோச்சடையானுக்காக' சொந்தக்குரலில் பேசும் தீபிகா படுகோன்

  08.11.2012.By.Rajah.கொலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை  தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் படம் 'கோச்சடையான்'.
இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அனிமேஷன் படமான 'கோச்சடையானை' ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கி வருகிறார்.
'கோச்சடையான்' படத்தை சர்வதேச அளவில் வெளியிட உள்ளனர்.
இப்படத்தில் 'cutting edge technology' மூலம் நேற்றைய கலைஞர்களான நாகேஷ், வீரப்பா, நம்பியார், மனோகர், அசோகன் ஆகியோரை இணைக்கிறார்கள்.
சர்வதேச அளவில் ஜப்பான், இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிடுகிறார்கள்.
கோச்சடையான் நாயகன் ரஜினிகாந்துடன், பாலிவுட் அழகி தீபிகா படுகோன் சொந்தக்குரலில் பேசி நடிக்கிறார் என்கிறது பட வட்டாரம்.

ரூ. 750 கோடி சொத்துக்கு சயிப் அலிகான் குடும்பத்தினர் மோதல்: ?

    08.11.2012.By.Rajah.பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு எழுந்துள்ளது.
இவருக்கும் இந்தி நடிகை கரீனா கபூருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் சொத்துக்கள் கைவிட்டு போய்விடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள்.
எனவே அவற்றை பிரித்துக் கொடுக்கும்படி போர்க்கொடி தூக்கி உள்ளனர். சயீப் அலிகான் ‘பட்டோடி நவாப்’ பரம்பரையை சேர்ந்தவர்.
பட்டோடி அரண்மனை, விவசாய நிலங்கள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என்று பட்டோடி நவாப் குடும்பத்தினருக்கு நிறைய சொத்துகள் உள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.750 கோடியாகும்.
மன்சூர் அலிகான் பட்டோடியின் ஒரே மகன் சயீப் அலிகான் என்பதால் இந்த சொத்துக்கள் அவர் கைவசம் உள்ளன.
சயீப் அலிகான் சகோதரிகள் சபா, சோகா அலிகான் ஆகியோரும் இதனை அனுபவிக்கிறார்கள்.
ஆனால் மறைந்த மன்சூர் அலிகான் சகோதரிகள் சலீகா, சபீகா ஆகியோரும் இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
தங்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என்றும், வற்புறுத்தி வருகிறார்கள்.
இதனால் சயீப் அலிகான் தாய் சர்மிளா தாகூர் குழப்பமடைந்து உள்ளார். இவர்களின் சொத்து சண்டையை பார்த்த நடிகை கரீனா கபூரும் அதிர்ச்சியாகியுள்ளார்.
சொத்துக்களை குடும்பத்தினர் எல்லோருக்கும் பிரித்து கொடுக்க மத்தியஸ்தர்களை வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது

நமது வாழ்வினூடே பல முறைகளில் கலந்துவிட்ட ஒன்று!மருத்துவக் குணங்கள்!

By.Rajah.08.11.2012.மஞ்சள் நமது வாழ்வினூடே பல முறைகளில் கலந்துவிட்ட ஒன்று. உணவுக்கு மணமூட்டவும், கிருமி நாசினியாகவும், மருந்துகள் தயாரிக்கவும், அழகு சாதனப் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. பொருளாதாரம்,
மருத்துவம், தொழில், ஆன்மீகம் என எல்லாத் துறையிலும் மஞ்சள் பெரும்பங்கு வகிக்கிறது. மஞ்சளின் தாயகம் இந்தியா. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பயிரடப்படுகிறது. கறி மஞ்சள், ந¡க மஞ்சள், காஞ்சிர மஞ்சள் என்று பல வகை இருந்தாலும் குச்சி மஞ்சள், குண்டு மஞ்சள் இருண்டுமே அதிகம் பயன்படுகிறது. குச்சி மஞ்சள் சமையலுக்கும்,
எண்ணெய் எடுக்கவும் மருத்துவத்திலும் பயன்படுகிறது. குண்டு மஞ்சள் பெண்கள் முகத்தில் பூசவும், அழகு சாதனப் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது மஞ்சளுக்கு பிரபஞ்சத்திலுள்ள நுண்ணிய கதிர்களை கவரும் ஆற்றல் உண்டு. எனவே சக்தியுள்ள இயற்கைப் பொருளாக இது திகழ்கிறது. தாவர இயலில் மஞ்சள் "குர்குமா லாங்கா" என குறிப்பிடப்படுகிறது. தமிழில் மஞ்சளைக் குறிக்கும் பெயர்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. அரிகம், அரன்மசி, உத்தரம், உரோசிதம், கதம்பம், சிறுகன்,
அரித்திரம், அம்பரம், கசர்ப்பம், காதரி, தீரம், தாமி, குருந்தம், அதிசக்தி, உருத்திரம், கதுப்பு என்பவை சில. மருத்துவக் குணங்கள் மஞ்சள் நுண்ணியிர்களை, நோய்க்கிருமிகளை அழிக்கும். உஷ்ணத்தை ஏற்படுத்தி வாயுவை வெளிப்படுத்தும். வயிற்றுப்புழு பூச்சிகளை அழிக்கும். மூலநோயை குணப்படுத்தும். தொண்டை நோயை நீங்கும். விஷங்களை இறக்கும்.

1. அட்டை, குளவி, தேனீ போன்றவை கொட்டினால் வலி, கடுப்பு ஏற்படும். அப்போது ஒரு துண்டு மஞ்சளுடன் சிறிது வேப்பிலை சேர்த்து அரைத்துப் பூசினால் விஷம் முறியும், வலியும் தீரும்.

2. ஜலதோஷம், தும்மல், மூக்கு நீர்வடிதல் இவற்றால் தலை பாரமாக இருக்கும். தொடர்ந்து தும்மல் வரும். கண்கள் கூசும். இந்நிலையில் தணலில் மஞ்சள் பொடியை போட்டு அதிலிருந்து எழும் புகையை மெதுவாகச் சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. உடலில் தேமல் ஏற்பட்டால் அரை லிட்டர் நல்லெண்ணெயில் கைப்பிடி மஞ்சள் துண்டு எடுத்து இடித்துப் போட்டு காய்த்து வடிகட்டி பூசிவந்தால் தேமல் மறையும்.

4. எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டுவிட்டாலோ, அல்லது சுடுநீர், நீராவி ஆகியவற்றால் ஏதேனும் கொப்புளம் மற்றும் தீப்புண் ஏற்பட்டால் சிறிதளவு வெங்காயச்சாற்றை எடுத்து, மஞ்சள் பொடியைச் சேர்த்துக் குழைத்து பூசினால் தீப்புண், கொப்புளம் மாறும்.

5. உடலில் எங்காவது சொறி, படை ஏற்பட்டால், கைப்பிடி மருதாணி இலைகளோடு ஓரிரு துண்டு மஞ்சளைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் அவை ஆறும்.

6. மஞ்சளை அரைத்து நீரில் கலந்து தெளிய வைத்து ஒரு அவுன்ஸ் குடித்தால் உடல் எரிச்சல் தீரும்.

7. சொறி, சிரங்கு, புண் இவற்றின் மேல் மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசினால் மாறும்.

8. வாயு காரணமாகவோ அல்லது பொருந்தா உணவை உண்டதாலோ ஏற்படுகிற வயிறு உப்பிசம் குணமாக சாதம் வடித்த நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து குடித்தால் போதும்.

9. அளவுக்கு மீறி மதுபானம் அருந்தியதால் அல்லது கஞ்சா போன்ற லாகிரிப் பொருட்களை உபயோகித்ததால் ஏற்பட்ட மயக்கத்தைப் போக்க மஞ்சளை நெருப்பில் இட்டு அதில் எழும் புகையை சுவாசித்தால் போதும்.

10. நாள்பட்ட புண் அல்லது ஆறாத புண் இருந்தால், மஞ்சளை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரால் கழுவி வந்தால் புண் ஆறும்.

11. வீட்டைச் சுற்றி மஞ்சள் பொடியை கரைத்து நீரைத் தெளித்தால் தொற்றுநோய் கிருமிகள் பரவாது.

12. மஞ்சள் தூளுடன் நெய் சேர்த்து குழைத்து தொண்டை மேல் பூசி வர தொண்டைப்புண் குணமாகும்.

13. கோடைக்கட்டி, வியர்க்குரு, அரிப்பு இவற்றைப் போக்க சம அளவு சந்தனம், மஞ்சள் பொடி, வேப்பிலைப் பாடி சேர்த்துக் குழைத்துப் பூசினால் சரியாகும்.

14. மஞ்சள் இலை, புதினா இலை இரண்டையும் உலரவைத்து பொடியாக்கி அதோடு சிறிதளவு உப்புத்தூள் கலந்து பல் துலக்கிவர பற் மற்றும் ஈறு உறுதி பெறும், பல் நோய் வராது

சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள்

 
 
08.11.2012.By.Rajah...மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில் குடியேற்றுமாறு கோரியுள்ளனர்.
இதற்காக அவர்கள், பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் உதவிகளை கோரியுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு போரினால் வெளியேற்றப்பட்ட 212 தமிழ் கத்தோலிக்க மக்கள் தற்போது மறிச்சுக்கட்டு காட்டுப்பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல் தாம் உணவு உறையுள் மற்றும் வேலைவாய்ப்புகள் என்பவற்றுக்காக பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது சொத்துக்கள் முள்ளிக்குளம் பகுதியில் உள்ளன. அங்கு சென்றால் மீண்டும் பழைய வாழ்க்கையை தம்மால் தேடிக்கொள்ள முடியும்.
எனவே தமது சொந்த இடங்களுக்கு தம்மை செல்ல அனுமதிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள் கோரியுள்ளனர்.