siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 26 நவம்பர், 2012

இங்கிலாந்தில் கனமழை: 800க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த கனமழையால் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன, மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் டேவிட் கமரூன் டுவிட்டரில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான  அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் {புகைப்படங்கள்},

இருமல் மருந்து குடித்த 12 பேர் பலி: பாகிஸ்தானில்

கலப்பட இருமல் மருந்து குடித்த 12 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் லாகூர் அருகே ஷதாரா நகரம் உள்ளது. இங்குள்ள கடைகளில் இருமல் மருந்து 25 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இப்பகுதியை சேர்ந்த சிலர் போதைக்காக இருமல் மருந்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்று ஒரு கடையில் 20 பேர் இருமல் மருந்தை வாங்கி உட்கொண்டனர். இந்த மருந்தை குடித்த சில நிமிடங்களில் நான்கு பேர் இறந்து விட்டனர்.
மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
மேலும் ஏழு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலப்பட இருமல் மருந்தை உட்கொண்டதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது.

தோல்வியில் முடிவதற்கு காரணம் காதலர்கள் தான் !


காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும், ஆணும், மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து தலித்துகளுக்கு எதிராக அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை.ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த ராமதாஸ், பெண்களுக்கு திருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இதன் மூலம், கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளையும், சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்பு இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிற காரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்
ஆயினும், தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்டதற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில், தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு சமுதாயம் தந்துள்ள நிலையில், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு மறுப்பது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லை என்றார் பழமலய்

தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்!


கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே.
அரசாங்கத்திற்கும், அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நன்றாக ஒரு விடயம் புரிந்திருக்கின்றது. எதனை அழித்தாலும், மக்கள் மீது எத்தகைய அடக்கு முறைகளை திணித்தாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர்களுடைய நினைவுகளை அழிக்க முடியாது.
ஏதோவொரு வழியில் மாவீரர்களுடைய நினைவுகளை மக்கள் அனுஸ்டிக்கவே போகின்றார்கள். அந்த வழிகளையும் முற்றாக மூடிவிடவேண்டும் என்றே படையினர் பகீரத பிரயத்தனம் எடுத்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கமும், அதன் காட்டுமிராண்டித்தனமான இராணுவ இயந்திரமும் புரிந்து கொள்ளத் தவறியிருக்கின்றது. அதாவது கடந்த 30வருடங்களில் 40ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
எனவே அந்த 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இந்த மாவீரர்களுடன் சம களத்தில் நின்ற போராளிகள், நண்பர்கள், மனைவி, பிள்ளைகள் என ஒவ்வொரு தமிழனும் மாவீரர்களுடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றான். சிலர் அற்ப சலுகைகளுக்காக படையினருக்கும், அரசாங்கத்திற்கும் பின்னால் சென்றிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு மாவீரன் நெருக்கமான தொடர்பு இருக்கும். மாவீரர்கள் ஒன்றும் கூலிப்படை கிடையாது. அடக்கி, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடையாளக் குறிகள். போராடினாலே வாழ்வென்றுரைத்த மூன்று தசாப்தங்களின் நிலைக்குறியீடுகள்.
கடைசி தமிழன் உள்ளவரையில் மாவீரர்களின் நினைவுகள் வாழும். மாவீரர்கள் பூசிக்கப்படுவார்கள். நடுகல் வழிபாடுகளின் தாய், தந்தையர்கள் நாங்கள். எங்கள் சொந்தங்களின் நினைவுகளைக் கொண்டாட முடியவில்லை.
எத்தனை அழிவுகள், இழிவுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி மாவீரர்களுடைய கனவுகளையும், அவர் தம் நினைவுகளையும் சுமந்து கொண்டு கால்கடுக்க நடக்கின்றோம். அடைய வேண்டிய இலக்கினை நோக்கி.
நிச்சயமாக எங்கள் மாவீரர்கள் சிந்திய இரத்தத்திற்கும், அவர்கள் கொடுத்த உயிர் விலைக்கும் ஒரு விளைவு கிடைக்கும். தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்.
அந்த நம்பிக்கையோ, பிரிவினைகள், பேதங்கள் இல்லாமல் அந்த உத்தமர்களை நினைவில் கொள்வோம். மூச்சு மூடியும் கடைசித் தருணத்திலும் அவர்கள் உச்சரித்துக் கொண்ட தாரக மந்திரத்தை சொல்லிக் கொள்வோம்.
ஒரு நாள் அடிவானில் சூரியன் பிறக்கையில் இந்த இனம் விடுதலை பெற்று விட்டதாய் செய்தி வரும். அதற்காய் அஸ்த்தமன நேரத்தை ஒவ்வொரு நாளும் வேகப்படுத்திக் கொள்கின்றோம்{புகைப்படங்கள்,}

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மலாலாவுக்கு பிரித்தானியாவில் வீடு

தலிபான்களின் தாக்குதலுக்குள்ளாகி பிரித்தானியாவில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மலாலாவுக்கு அந்நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வீடு ஒதுக்கப்பட இருக்கிறது. கடந்த ஒக்ரோபர் 9ம் திகதி தலிபானியர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான மலாலாவுக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுத்திருக்கிறது.
கடந்த மாதம் மலாலாவின் பெற்றோரும் அவரது சகோதரர்களும் பிரித்தானியா சென்றனர்.
இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை வரை போய் மலாலா சுடப்பட்ட 30வது நாளை மலாலா நாளாக கடைபிடிப்பதாகவும் அறிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, மலாலாவின் தந்தைக்கு பிரித்தானியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
தற்போது ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டிருப்பதால் பிர்மிங்ஹாமில் வீடும், வாகன வசதியும் வழங்கப்படுகிறது.
மலாலாவின் உடலில் இருக்கும் குண்டு அகற்றப்பட்ட பின்பு இந்த வீட்டில்தான் அவர்கள் வசிக்க இருக்கிறார்.
பாகிஸ்தான் அரசின் இந்நடவடிக்கையை பிரித்தானியா எம்.பி. காலித் மஹ்மூத் வரவேற்றுள்ளார்

பங்களாதேஷ் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து: 120 பேர் பலி

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஜவுளி தொழிற்சாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இந்த ஜவுளி ஆலை கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணியும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பங்களாதேஷிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இராணுவத்தில் இருந்து 6 பெண்கள் விலகினர் !BBC




இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

அதேவேளை, அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

முன்னதாக, இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார்.

அலுவலகப் பணிகளுக்காக, கணினி பயிற்சிகளுக்காக என்று பொய்யாக கூறி சேர்க்கப்பட்ட தாம் இராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரிய வந்ததுடன் இராணுவத்தில் இருந்து விலக அந்தப் பெண்கள் கோரியதாகவும், ஆயினும் ஒரு நாள் வரை தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிறிதரன் எம்பி கூறியுள்ளார்.

முற்றிலும் இராணுவத்தினாலும், அதன் உளவுப் பிரிவினாலும் சூழப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மன்னார், துணுக்காய் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தப்பி ஓடியதாக வெளிவந்த செய்திகள் தவறு என்றும் சிறிதரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சிறிதரன் தமிழோசைக்கு தெரிவித்தார்

உறுப்பினர்களை கொல்லச் சதி - கிழங்கு கறியில் சயனைட் நஞ்சு !

 

சிறிலங்கா நாடாளுமன்ற சமையற்கூடத்துக்கு அனுப்பப்பட்ட கோஹிலா கிழக்கில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தது, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்ற சமையற்கூடத்தில் சமைக்கப்பட்ட கோஹிலா கிழக்கு கறி, வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறத்தில் இருந்தது.
இதையடுத்து, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத கிழங்கு மாதிரிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையிலேயே, நாடாளுமன்ற சமையற்கூடத்துக்கு அனுப்பப்பட்ட கோஹிலா கிழங்கில் சயனைட் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற காவல்துறை பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அதிகளவில் பயன்படுத்தப்பட்ட உரம், அல்லது பூச்சிக்கொல்லியினால் கோஹிலா கிழங்கில் சயனைட் நச்சு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது

சனி, 24 நவம்பர், 2012

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் !


மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தடைவிதிப்பது ஒரு மனிதவுரிமை மீறலாகும் என்பதை நெருக்கடிகளுக்கான சர்வதேச குழுவின் அறிக்கை புலப்படுத்துவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போரில் உயிரிழந்தவர்களை பயங்கரவாதிகள் என அரசாங்கம் வரையறுத்தாலும் பெற்றோருக்கு அவர்கள் பிள்ளைகள் என்பதை அரசு மறுக்க முடியாது எனவும் சுட்டிக்காட் டியுள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் நினைவாக அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என நெருக்கடிகளுக்கான சர்தேச குழு அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இவ்விடயம் குறித்துக் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த அறிக்கையில் மாவீரர் தினத்தை மக்கள் அனுஸ்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என குழு தெரிவித்திருக்கின்றது. இது இன்று தமிழ் மக்களுடைய மனங்களில் அடக்கப்பட்டிருக்கும் விடயத்திற்கு சற்றே அறுதலளிப்பதாக இருக்கின்றது.
யுத்தத்தில் உயிரிழந்து போனவர்கள் போராளிகள் என்றும், பயங்கரவாதிகள் என்னும் பார்க்கும் அரசாங்கம் அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் பெற்றோர், உறவுகள், நண்பர்கள் இருப்பதையும் உயிரிழந்து போன தங்கள் உறவுகளுக்கு, நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதையும் அரசு மறுக்கிறது.
இறந்தவர்களை தெய்வங்களாக கருதி நடுகல் வழிபாட்டை எங்கள் மூதாதையர்கள் ஆரம்பித்தார்கள். அதன் தொடர்ச்சியைத் தான் நாங்கள் கடந்த காலங்களில் செய்தோம். இது எங்கள் உணர்வுகளுடன் தொடர்புபட்டதொரு விடயம். இங்கே இனவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் இடம் கிடையாது.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதிக்க வேண்டும் என நெருக்கடிகளுக்கான சர்வதேச குழு விடுத்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது என்றார்

வெள்ளி, 23 நவம்பர், 2012

வியக்க வைக்கும் காட்சி - கருவறைக்குள் கொட்டாவி விட்ட?

        
 
இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர்.
சிசுவாக நாம் கருவில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.
இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன் செய்து பார்த்தனர். கடைசி ஸ்கேனிங் 36வது வாரத்தி்ல எடுக்கப்பட்டது.
இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர். இப்படிக் கொட்டாவி விடுவதன் மூலம் குழந்தையின் தாடைப் பகுதி நன்கு விரிய வாய்ப்பு கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை கொட்டாவி விடுவது என்பது மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் மூளையை ரிலாக்ஸ் ஆக்கும் முயற்சியாகவும் இதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்