siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

விற்பனைக்கு வருகின்றது நோக்கியாவி​ன் தலைமை அலுவலகக் கட்டிடம்

கைப்பேசி உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நோக்கியா நிறுவனமானது பின்லாந்தின் எஸ்பூ நகரில் அமைந்துள்ள தனது தலமை அலுவலகக் கட்டிடத்தினை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.
சுமார் 170 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான இந்த அலுவலக கட்டிடத்தினை விற்பதற்கு கடந்த ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் இவ்வருட இறுதிக்குள் விற்பனையாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48,000 சதுரமீட்டர்கள் உடைய இந்த அலுவலகக்கட்டிடத்தில் 1997ம் ஆண்டிலிருந்து 15 வருடங்களாக நோக்கியா நிறுவனம் செயற்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Firefox உலாவியில் Facebook Messenger-இனை பயன்படுத்து​வதற்கு

பில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பேஸ்புக் சமூக வலைத்தளமானது தொடர்ச்சியாக பல புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. இதன் தொர்ச்சியாக அண்மையில் குரோம் உலாவியில் பயன்படுத்தக்கூடியவாறான Facebook Messenger - இனை அறிமுகப்படுத்தியிருந்தது.
தற்போது இந்த வசதியினை Firefox உலாவிகளிலும் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வசதியினை Firefox உலாவியின் பிந்திய பதிப்புக்களில் பெற்றுக் கொள்வதற்கு https://www.facebook.com/about/messenger-for-firefox எனும் இணைப்பில் கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் காணப்படும் Turn On எனும் பொத்தானை அழுத்தினால் போதுமானது.


வீரர்களுக்கு அங்கேயே காய்கறிகள் கிடைக்கும் வகையில் தோட்டம்

          
சந்திரன மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஆய்வுகள் நடத்திவருகின்றன

இதற்கிடையில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு அங்கேயே உணவுக்கு புத்தம் புதிய காய்கறிகள் கிடைக்கும் வகையில் தோட்டம் அமைக்க முடியுமா? என்ற முயற்சியில் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தீவிரமாக ஈடுபட்டது.

இதற்காக பெரிய பரிசோதனை கூண்டு அமைத்து ஆய்வு நடத்தினார்கள். இந்த பரிசோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் டெங் யிபிங் தெரிவித்துள்ளார்.

“டைனமிங் பேலன்ஸ்டு மெக்கானிஷம்” என்பதை பயன்படுத்தி ஆகாய வெளியில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீரை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை கொடுக்க முடியும் என்ற நிலை உருவாகப் போகிறது

வியாழன், 6 டிசம்பர், 2012

எங்கள் நாட்டு விமானத்தை ஈரான் சிறைபிடித்ததா?

தங்கள் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. வளைகுடா கடல் பகுதி வழியாக ஈரான் வான் எல்லைக்குள் புகுந்து உளவு பார்த்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை சிறை பிடித்துவிட்டதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது. அந்த விமானம் தொடர்பான சில தகவல்களையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜே கார்னி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ஈரான் அமெரிக்க விமானத்தை சிறை பிடித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லாத பொய்யான தகவல் தொடர்பாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்

புரட்டி போட்ட சூறாவளி: பலி எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு





 
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி புயலுக்கு இதுவரையில் 300 பேர் பலியாகி உள்ளனர்.
பிலிப்பைன்சை நேற்று முன்தினம் போபா என்ற புயல் தாக்கியது. பலத்த வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்கள் பலியாகினர்
 

புதன், 5 டிசம்பர், 2012

உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த 116 வயது பெண் மரணம்.



உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியாக கருதப்பட்ட பெசி கூப்பர் (வயது 116) அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். கின்னஸ் சாதனை பதிவுகளின்படி 1997ம் ஆண்டு வரை 122 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த ஜீனே கல்மென்ட் என்பவர் உலகில் வயது முதிர்ந்த நபராக கருதப்பட்டார். இவர் பிரான்சு நாட்டில் பிறந்தவர்.

இந்த சாதனைக்கு பிறகு அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை பெசி கூப்பரை, உலகில் வயது முதிர்ந்த நபராக கின்னஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. அப்போது அவருக்கு வயது 115. சில மாதங்களுக்கு முன்னர் வயிற்றில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்காக இவர் அட்லாண்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை பெசி கூப்பர் சிகை அலங்காரம் செய்துக் கொண்டார். பின்னர் தங்கள் குடும்பத்தாருடன் கடந்த ஆண்டு கொண்டாடிய கிருஸ்துமஸ் விழாவை வீடியோவில் பார்த்து ரசித்தார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் பெசி கூப்பருக்கு செயற்கை சுவாசம் அளித்தனர். என்றாலும் பலனின்றி சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார்.
அவரது மணரம் குறித்து பேட்டியளித்த பெசியின் மகன் சிட்னி கூப்பர் கூறுகையில்,  இன்று காலை சிகை அலங்காரம் செய்து கொண்டபோது, அவர் போவதற்கு தயாராக இருந்தது போல் தோன்றியது  என்றார். அமெரிக்காவின் டென்னசீ மாவட்டத்தில் பிறந்த பெசி, முதலாம் உலகப் போரின் போது, டீச்சராக வேலை செய்யும் நோக்கில் ஜார்ஜியா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு 116 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்

மாங்குளத்தில் பொலிசார் மீது மோதிவிட்டு தப்பியோடிய?


கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிவிட்டு தப்பியோடிய தனியார் பஸ்ஸை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் கூறியுள்ளதாக, ஏ- 9 வீதியின் முருங்கன் ஆலயத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது என மேலும் அறியப்படுகிறது. மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ் எங்கே போனது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், சாட்சியங்களை வழங்கியபோதிலும் பஸ் மாயமாக மறைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.
பொலிசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக மேலும் அறிய முடிகிறது. மேற்குறிப்பிட்ட கான்ஸ்டபிள் போதையில் நின்றிருந்தாகவும், அவரே தற்செயலாகச் சென்று பஸ்சுடன் மோதுண்டதாகவும் சில பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்

இனிமேல் அனுமதி பெற்றே நுழைவார்கள் !படைத் தளபதி

     
நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இனிமேல் சிறிலங்கா படையினரோ காவல்துறையினரோ யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையமாட்டார்கள் என்று யாழ். படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வாக்குறுதி அளித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவுடன், நடத்திய 3 மணிநேரப் பேச்சுக்களை அடுத்தே, அவர் நேற்று மாலை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“யாழ்.பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில் பாதுகாப்ப்பில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினரை அங்கிருந்து முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழலிலேயே, யாழ்.பல்கலைக்கழகத்தினுள் சிறிலங்கா படையினர் நுழைய வேண்டியேற்பட்டது.

அதுபோன்று இனிவரும் காலங்களில் சிறிலங்கா படையினரோ, காவல்துறையினரோ பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய மாட்டார்கள்.

அவ்வாறு நுழைய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிர்வாகத்திடம் உரிய அனுமதியைப் பெற்றே நுழைவார்கள்.

மாணவர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்ள வேண்டி ஏற்பட்டமை கவலை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது.

இந்தச் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களில் மருத்துவபீட மாணவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூவரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கின்றனர்.” என்றும் மேலும் தெரிவித்துள்ளார்

நாடு திரும்பிய குடும்பத் தலைவர் - புலனாய்வுப் பிரிவினரால்


இந்தியாவில் தஞ்சமடைந்திருந்து நாடு திரும்பிய குடும்பத் தலைவர் ஒருவரை, சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணை என்ற பெயரில் தினமும் துன்புறுத்தி வருகின்றனர்.

திருகோணமலை, சாம்பல்தீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கோவிந்தன் சிவராசா என்ற குடும்பத் தலைவரையே சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியா சென்ற இவரது கடந்த செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா திரும்பி சொந்த இடத்தில் குடியேறினர்.

இந்தநிலையில், கடந்த ஒக்ரேபர் மாதம் 15ம் நாள் தொடக்கம், தினமும் காலை, மாலை வேளைகளில் இவரது வீட்டுக்கு வரும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர் விசாரணைத் துன்புறுத்தல்களால், குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும் விரக்தியும் அடைந்த நிலையில் உள்ளனர்.

பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி



பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானௌ தீவை போபா புயல் நேற்று தாக்கியதில் 43 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிலிப்பைன்சில் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயல், மின்டானௌ தீவில் நேற்று கரையை கடந்தது.
இதனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நகரான ககாயான் டியோரோ நீரில் மூழ்கியுள்ளது.
41 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்டானௌ நகரில் அருகேயுள்ள கிராமத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.{காணொளி, புகைப்படங்கள்}
இந்த கிராமத்தில் திடீரென வெள்ளம் புகுந்ததால், இராணுவ ரோந்து முகாமை அடித்து சென்றதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கம்போஸ்டெலா பள்ளத்தாக்கு மாகாண ஆளுநர் அர்டுரோ உய் கூறுகையில், 34 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.
நியூ பாட்டன் பகுதியில் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் சென்ற வாகனம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என்றார்.