| ஐ.நா பாதுகாப்பு சபையின்
தலைமை பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபையில்
நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா போன்ற
நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளனர். இவைகள் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே அப்பதவியில் இருக்கும். இந்நிலையில் ஐ.நா சபையின் தலைமை பதவி சுழற்சி முறையில் உறுப்பினர் நாடுகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் ஜனவரி மாதத்துக்கான தலைமை பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மசூத் கான் கூறுகையில், தலைமைப் பதவியில் திறம்பட செயல்படுவோம். முக்கிய பிரச்னைகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி எடுப்போம். பயங்கரவாதம் தொடர்பாக சிறப்பு விவாதக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். விரிவான நடவடிக்கை, பேச்சுவார்த்தை, மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் மூலம்தான் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 3 ஜனவரி, 2013
ஐ.நாவின் தலைமை பதவியை ஏற்றது பாகிஸ்தான்
புதன், 2 ஜனவரி, 2013
புத்தாண்டில் நிகழ்ந்த சந்தோஷமும், துக்கமும்
| டொரண்டோ
நகரில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது, இதனை
அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
டொரண்டோ நகரில் உள்ள Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane
Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில்
நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். இந்த சந்தோஷத்திற்கு மத்தியில் சோகமான நிகழ்வும் நடந்துள்ளது. அதாவது, மது அருந்தி விட்டு வந்த இருவர் தெருவில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்டனர் அப்போது ஒருவர், மற்றவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உடனே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நபரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இதுவே புத்தாண்டில் நிகழ்ந்த முதல் கொலையாக கருதப்படுகிறது[புகைப்படங்கள், ] . |
புத்தாண்டு கொண்புகைப்படங்கள்,டாட்டத்தில் போதையில்
நடுரோட்டில்விழுந்தகிடந்தஇளம்பெண்கள்இங்கிலாந்தில் புதுவருட கொண்டாட்டத்தின் போது ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் குடிபோதையில் நடுரோட்டில் போதை தெளியாமல், சுயநினைவு இன்றி விழுந்து கிடந்ததாக காவல்துறை உயரதிகாரி Superintendent James Tozer என்பவர் வருத்தத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வன்முறை எதுவும் நிகழாவண்ணம் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டது.
புதுவருடம் பிறந்தவுடன் நள்ளிரவு 12 மணிமுதல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் துவங்கியவுடன், இளம் ஆண்களும் பெண்களும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை குடிக்கத் தொடங்கினர். மதுபோதையில் அறைகுறை ஆடையுடன் நடு ரோட்டில் அவர்கள் செய்த அட்டகாசத்தை பொறுக்க முடியாத போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பொறுமையுடன் ஈடுபட்டனர்.
புத்தாண்டு தினம் என்பதால் அவர்களை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு, வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவரவர் வீடுபோய் சேர இங்கிலாந்து போலீஸார் உதவி செய்தது மிகவும் போற்றுதலுக்குரியது என அந்த அதிகாரி தன்னுடைய டுவிட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 1 ஜனவரி, 2013
2013ஆம் ஆண்டின் முதல் குழந்தைக்கு பரிசுகளும் வாழ்த்துகளும்
டொரண்டோ நகரில் மிகச்சரியாக 2013 புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 பிறந்த குழந்தையை இந்த ஆண்டின் முதல் குழந்தையாக டொரண்டோ நகர மக்கள் போற்றுகின்றனர்.
டொன்ரடோ நகரில் உள்ள St. Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர்.
இதேபோல Mississauga நகரத்தில் Credit Valley மருத்துவமனையில் 12.07க்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை அந்த நகரத்தின் முதல் குழந்தையாக கருதுகின்றனர். இந்த குழந்தையின் எடை ஆறு பவுண்டுகளும், 11 அவுன்ஸ்களும் ஆகும்.
இந்த இரண்டு குழந்தைகளுக்கும் அந்தந்த நகரத்தின் மக்கள் சார்பில் பரிசுகளும், வாழ்த்துக்களும் குவிந்து கொண்டு இருக்கிறது74 வயது இங்கிலாந்து தந்தைக்கு ஏழாவது குழந்தை
.
(6வது மகன் Paul உடன் 72 வயது மைக் அமிடேஜ் ஜோடி){புகைப்படங்கள்,}
இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(2007 ஆம் ஆண்டு திருமணத்தின் போது 3வது மனைவி லிண்ட்சேவுடன் மைக் அமிடேஜ்)
32 வயது இளம் மனைவி பெற்றெடுத்தார்.அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தனக்கு 7வது குழந்தை பிறக்கப் போவதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார் அமிடேஜ்.
இந்த வயதில் தந்தையாகப் போகிறோமே என்று அமிடேஜ் வெட்கமெல்லாம் படவில்லை. மாறாக படா குஷியாக காணப்படுகிறார். இன்னும் பல குழந்தைகளை லின்ட்சே மூலம் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கண் சிமிட்டிப் புன்னகையுடன் கூறுகிறார். பலர் என்னிடம் இந்த வயதில் ஏன் இப்படி என்று கேட்கிறார்கள். அவர்களது கேள்வியே தவறு. நான் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் இப்போது இளமையாக உணர்கிறேன் என்றார் அமிடேஜ்.
இவர் சுர்ரேயைச் சேர்ந்தவர் 1961ம் ஆண்டு முதல் முறையாக இவர் தந்தையானார். இவரது மூத்த மகன் கிளன் அப்போதுதான் பிறந்தார். அப்போது அமிடேஜுக்கு 21 வயதுதான். அப்பெல்லாம் பிள்ளை பெத்துக்கிறது ரொம்பக் கஷ்டமானதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே எனது மனைவி லின்ட்சே மூலம் நிறைய குழந்தைகளுக்கு பிளான் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறுகிறார் அமிடேஜ்
திங்கள், 31 டிசம்பர், 2012
இங்கிலாந்தின் மிகச் சிறிய மொடல் அழகன்
| இங்கிலாந்தில் மிகச் சிறிய மொடல்
அழகனாக ரோவன் ஸ்டோன் என்ற 7 மாத குழந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வென்ச்சர் போட்டோகிராபி நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான அழகு
போட்டி நடத்தப்பட்டது. இதில் 2300-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றன. ஒன்லைனில் போட்டோக்களை பார்த்து 24 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இவர்களுடன் சூப்பரான அழகு குழந்தையை தேர்வு செய்ய நடுவர் குழுவும் அமைக்கப்பட்டது. அவர்களது ஏகோபித்த ஆதரவுடன் கொழு கொழு குழந்தையாக தாமஸ்(வயது 28) - பெக்கி(வயது 29) தம்பதியின் 7 மாத ஆண் குழந்தை ரோவன் ஸ்டோன் தெரிவு செய்யப்பட்டுள்ளான். இவனுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் பொம்மைகள் வாங்கிக் கொள்வதற்கான கிப்ட் வவுச்சர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் ஓராண்டுக்கு வார, மாத இதழ்களில் அட்டை படமாக குழந்தை ரோவனின் படம் வெளிவருவதற்கும் விளம்பரத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. |
தமிழ் கணித மேதை ராமானுஜத்தின் கண்டுபிடிப்புக்களை 90 ஆண்டுகள்
கழித்து ஒப்புக்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். உலக பிரசித்தி பெற்ற இந்திய கணித மேதையும், தமிழருமான ராமானுஜம் 1920-ம் ஆண்டு மரணப்படுக்கையில் இருந்தபோது பல கண்டுபிடிப்புகள், சூத்திரங்களை கண்டறிந்தார். இங்கிலாந்தை சேர்ந்த தனது வழிகாட்டியான கணிதமேதை ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் இதுபற்றி அவர் எழுதி இருந்தார்.
இது கணித உலகுக்கே புதிதாகவும், புதிராகவும் இருந்தது. இப்போது அமெரிக்க கணித ஆராய்ச்சியாளர்கள் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள், சூத்திரங்கள் எல்லாம் சரிதான் என ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரது கணித புதிர்களுக்கும் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.
ராமானுஜம் இறந்து ஏறத்தாழ 100 ஆண்டு காலம் நெருங்கும் நிலையில், இப்போது அவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி எமோரி பல்கலைக்கழக கணித ஆராய்ச்சியாளர் கென் ஒனோ கூறுகையில், ராமானுஜத்தின் கடைசி கடிதத்தில் கூறி இருந்த கணக்கு புதிர்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். கடந்த 90 ஆண்டுகளாக இந்த தீர்வு காணப்படாமல் இருந்தது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் சரியானவைதான் என்றார்.
இது கணித உலகுக்கே புதிதாகவும், புதிராகவும் இருந்தது. இப்போது அமெரிக்க கணித ஆராய்ச்சியாளர்கள் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள், சூத்திரங்கள் எல்லாம் சரிதான் என ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரது கணித புதிர்களுக்கும் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.
ராமானுஜம் இறந்து ஏறத்தாழ 100 ஆண்டு காலம் நெருங்கும் நிலையில், இப்போது அவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி எமோரி பல்கலைக்கழக கணித ஆராய்ச்சியாளர் கென் ஒனோ கூறுகையில், ராமானுஜத்தின் கடைசி கடிதத்தில் கூறி இருந்த கணக்கு புதிர்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். கடந்த 90 ஆண்டுகளாக இந்த தீர்வு காணப்படாமல் இருந்தது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் சரியானவைதான் என்றார்.
வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு ரத்த உறைவு கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2009 ஜனவரி முதல் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு மந்திரி ஆக உள்ளார். தற்போது, உடல் நிலையை கருத்தில் கொண்டு ஒபாமாவின் மந்திரி சபையில் மீண்டும் தொடர மறுத்துவிட்டார்.
எனவே, அடுத்த வெளியுறவு மந்திரியாக ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன் திடீரென மயங்கி விழுந்தார். வயிற்று வலி காரணமாக இப்பிரச்சினை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் மயங்கி விழுந்தபோது உடலில் அடிபட்டு ரத்தம் உறைந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் நியூயார்க்கில் உள்ள பிரஸ்பிடேரியன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் தனது பணிகளை கவனிப்பார் என அவரது செய்து தொடர்பாளர் பிலிப் ரீயின்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி பதவியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டன் 112 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பதவியில் இருந்தபோது அதிக உலக நாடுகளுக்கு சென்று வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி என பெருமையை இவர் பெற்றுள்ளார்
மிகவும் நூதனமான முறையில் கணனிகளை கொள்ளையிட்ட பெண்?
எல்.ஈ.டி, எல்.சீ.டி. மற்றும் மடி கணனிகளை கொள்ளையிட்ட பெண் கும்பலொன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதிலும் கோடிக் கணக்கான இலத்திரனியல் சாதனங்களை இந்தப் பெண் கும்பல் கொள்ளையிட்டுள்ளது. மிகவும் நூதனமான முறையில் இந்தக் கொள்ளைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கால்களுக்கு நடுவில் மடிகணனிகள் மற்றும் எல்.ஈ.டி. மற்றும் எல்.சீ.டி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மறைத்து கொள்ளையிட்டுள்ளனர்.
கவர்ச்சியாக ஆடையணிந்த பெண்கள் கும்பலொன்று பிரபல இலத்திரனியல் சாதன விற்பனை நிலையங்களுக்கு சென்று ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடாத்தி, பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையன்று சம்ராஜ் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகளின் போது இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
சுரங்கீ என்ற 25 வயதான பெண்ணே இந்தக் கும்பலை வழிநடத்தியுள்ளார். முதலில் கையடக்கத் தொலைபேசி போன்ற சிறிய பொருட்களை கால்களின் நடுவில் வைத்து நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் பின்னர் பெரிய இலத்திரனியல் சாதனங்களை கால்களின் நடுவில் வைத்து சந்தேகம் ஏற்படாத வகையில் நடக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட மடிகணனிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
மீரிகமவைச் சேர்ந்த பெண்களே இந்தக் கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர். சுரங்கீயுடன் ஆறு பெண்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


































