ஆ1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது
.தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 24 ஜனவரி, 2013
புதன், 23 ஜனவரி, 2013
கவலையில் அமெரிக்க, கனடா, பிரிட்டன் பெண்கள்
மூதாதையர்களை விட, நவீன கால பெண்கள் மிகவும் பலவீனமாக உள்ளனர்; குறைவாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாதது போன்றவைதான் இதற்கு முக்கிய காரணம்' என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் மருத்துவ அறிவியல் துறையின் பேராசிரியர் கிராண்ட் டாம்கின்சன் கூறியதாவது:
பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு உடல் வலிமை குறைந்துவிட்டது. சாதாரண உடற்பயிற்சியான உட்காருதல், எழுதல் போன்றவை கூட, 8 முதல் 10 சதவீதம் குறைந்துவிட்டது.
1985ம் ஆண்டு வரை, உடல் வலிமையில் எந்தவிதமான பிரச்னைகளும் இருந்ததில்லை, அதற்குப் பின், உடல் எடை கூடியுள்ளதே தவிர, உடல் பலம் கூடவே இல்லை. நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. குறிப்பாக, பெண்களே இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
லண்டனை சேர்ந்த முட நீக்கியல் நிபுணர் சமி மார்கோ கூறுகையில், " பெண்கள் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் ஆனால், அதற்கேற்ற பலம் அவர்களிடத்தில் இல்லை' என்றார்.பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சி மற்றும் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் கென் பாக்ஸ் கூறியதாவது:உடல்பலம் குறைவுதான் பெரும்பாலான நோய்களின் பிறப்பிடமாக உள்ளது. எலும்பு முறிவு, மூட்டுவலி, முதுதண்டு வலி போன்ற உபாதைகளுக்கு இதுவே மூலகாரணம். தங்களின் உடலை மெலிதாக வைத்துக் கொள்ளவே பெண்கள் விரும்புகிறார்கள். இதனால், அதிகமாக சாப்பிடுவதில்லை, உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு இது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்
விண்வெளியில் இருந்து நேரடியாக உரையாடிய Chris Hadfield
டொரண்டோவில் தனது பெயரில் இயங்கும் பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேர்களுடன் நேரடியாக உரையாடினார் Chris Hadfield என்னும் விண்வெளி வீரர். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.தனது பெயரில் டொரண்டோ அருகில் இயங்கும் Chris Hadfield Public School மாணவர்களுடன் நேரடியாக விண்வெளியில் இருந்து உரையாடும் சம்பவம் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார் Chris Hadfield.பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகன்ற திரையில் திடீரன Chris Hadfield உருவம் தெரிந்து, அவர் பேச ஆரம்பித்தவுடன் மாணவ மாணவிகள் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளித்தார் விண்வெளி வீரர்ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வகுப்புக்கு ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரிடம் வரிசையாக தங்களுடைய வானவியல் சந்தேகங்களை குறித்த கேள்விகளை கேட்டனர்ஆறாம் கிரேடு படிக்கு ஒரு மாணவி "புவியீர்ப்பு இல்லாத விண்வெளியில் உடல் எடையை அதிகரிக்காதவாறு இருக்க எவ்வகை முயற்சிகளை செய்தீர்கள்" என்ற கேள்விக்கு பதிலளித்த விண்வெளி வீரர், "தினமும் இரண்டு மணிநேரம் கடுமையான உடற்பயிற்சி செய்து, உடல் எடை சீராக வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.
மேலும் விண்வெளியில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது என்றும் மேல்பகுதி எது? கீழ்பகுதி எது? என்றே தெரியாமல் மிதந்து கொண்டிருப்பதால், இரத்த ஓட்டம் சீராக இருப்பது.{புகைப்படங்கள்}
தடைபடுகிறது என்றும் அதற்காக சிறப்பு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.
செவ்வாய், 22 ஜனவரி, 2013
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: சிறுமி பரிதாப மரணம்
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தோனேஷியாவின் பாண்டா ஏஸ் கடலோர நகரில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் கட்டிடங்கள் நொறுங்கின, இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இதேபோன்று கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு, இந்தோனேஷியா, இலங்கை மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தாயகத்திலும் 2013 முதல் வாகன சாரதிகளுக்கு ??
அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை அடுத்தவருடம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸாருக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.சாரதிகளின் கவனயீன்மை காரணமாக இந்த வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது. அதாவது தற்போது நாளொன்று 8 பேர் வீதம் இறக்கின்றனர்.
இதனையடுத்து மேற்படி திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும். அதாவது 24 மாதத்திற்குள் சாரதி ஒருவர் 24 புள்ளிகளை பெறுவார் எனின் 12 மாத காலத்திற்குள்ள குறித்த சாரதியின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும்.
மீள வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு நன்னடத்தை காலம் வழங்கப்பட உள்ளதோடு இக்காலத்தில் 6 புள்ளிகள் பெற்றால் நன்னடத்தை காலம் மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கப்படும்.
24 மாத காலத்தினுள் 24 புள்ளிகளைவிட குறைவாகப் பெறும் சாரதி ஒருவர் அடுத்த வருடத்தில் புள்ளி எதுவும் பெறாவிட்டால் அந்த புள்ளிகளில் 6 குறைக்கப்படும். அதற்கு அடுத்த வருடத்திலும் புள்ளிகள் எதுவும் பெறாவிடின் அவரின் சகல புள்ளிகளும் நீக்கப்படும்.
சாரதி பயிற்சி வகுப்பு நடத்தும் ஒருவர் 24 மாத காலத்தினுள் 12 புள்ளிகள் பெற்றால் அவரின் அனுமதி பத்திரம் 12 மாதங்களுக்கு ரத்துச் செய்யப்படும்.
- சாரதிகள் பெறும் புள்ளிகள் பற்றிய விபரம் ஒவ்வொரு மாதமும் 10 திகதிக்கு முன்னர் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றமும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும். அவை கணனியில் உட்படுத்தப்பட்டு புள்ளிகள் கணிப்பிடப்படும். 18 புள்ளிகளை தாண்டியதும் அது குறித்து கடிதம் மூலம் சாரதிக்கு அறிவிக்கப்படும்
ஒரு பில்லியின் டொலர் செலவில் வளரும் கூகுளின் தலைமை ?
இணைய உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனமாது சுமார் 1 பில்லியின் டொலர் செலவில் தனது தலமை அலுவலகம் ஒன்றினை லண்டனில் உருவாக்கிவருகின்றது.
2.4 ஏக்கர் பரப்பளவுடைய பிரதேசத்தில் 7 மற்றும் 11 தட்டுக்களை கொண்ட தொடர்மாடிக்கட்டிடங்களின் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவருவதுடன் இக்கட்டுமானப்பணிகளை 2016ம் ஆண்டளவில் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை கூகுள் நிறுவனத்திற்கென லண்டனின் Victoria மற்றும் St Giles High Street பிரதேசங்களில் ஏலவே இரண்டு அலுவலகங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது
திங்கள், 21 ஜனவரி, 2013
மனிதரின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் பூனைகள்:
மெஸ்சினா பல்கலைக் கழகம்,அறிவுள்ள விலங்குகளில் பூனையும் ஒன்று. அவை தன்னை வளர்ப்பவர்களின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் நன்கு கவனித்து அதை அப்படியே பிரதிபலிக்கின்றன.
அதாவது தனக்கு ஒதுக்கப்பட்ட உணவை சாப்பிடுவது, உறங்குவது, கழிவறை செல்வது போன்றவற்றை ஒழுங்காக செய்கின்றன. மேலும் உணவு பொருள் வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடித்து சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.
இதுபற்றிய ஆய்வை மெஸ்சினா பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் குளூசெப்பே பிக்சியோனி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
பூனைகளை 2 பிரிவுகளாக்கி அவற்றின் ஒரு பிரிவை சிறிய வீட்டிலும், மற்றொரு பிரிவை பெரிய வீட்டிலும் வளர்த்தனர். அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து சிறப்பாக பராமரித்தனர். அவற்றுடன் அவைகளை வளர்ப்பவர்களை எப்போதும் உடன் இருக்கும்படி செய்தனர்.
அவற்றில் சிறிய வீட்டில் வளர்ந்த பூனைகள் தன்னை வளர்க்கும் எஜமானர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தன. அவை தன்னை வளர்த்தவர்களின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் அப்படியே பிரதிபலித்தன. அதே நேரத்தில் பெரிய வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளிடம் சிறிய வீட்டில் வளர்ந்த பூனைகளின் செயல்பாடுகளில் பாதி அளவே இருந்தது. இதன் மூலம் பூனைகள் தங்களை வளர்ப்பவர்களின் செயல்பாடுகளை பிரதிபலிப் பவையாக இருப்பது தெரிகிறது
மீண்டும் மாலியைக் கைப்பற்றுவோம் பிரான்ஸ் அறிவிப்பு
வடக்கு மாலியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலி வந்து இறங்கிய பிரான்ஸ் இராணுவம் முழுமையாக இந்நாட்டை கைப்பற்றுவோம் என்று அறிவித்தது.
முன்பு மாலி ஃபிரான்சின் குடியிருப்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது.
இன்னும் சில வாரங்களில் மாலி முழுவதும் எங்களின் கட்டுபாட்டில் கொண்டு வருவதே இத்தாக்குதலின் இலட்சியம் என்று பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லீ டிரியான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாலியின் வடபகுதியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸ் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. விமானத்தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்த அல்கொய்தா போராளிகளும் கூட்டாளிகளும் டயாபெலி நகரை விட்டு வெளியேறினர். பிரெஞ்சு படைகள் நியோனோ நகரத்தில் புதிய ராணுவத்தை அமைத்துள்ளது. இந்நகரம் தெற்கே 40 மைல் தொலைவில் உள்ளது நேற்று பிரெஞ்சுப்படைவீரா்கள் எவ்விதத்தாக்குதலிலும் ஈடுபாடமல் ஓய்வெடுத்தனர்.
நீண்ட போருக்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருப்பதாக தளபதி ஃபிரட்ரெக் தெரிவித்தார். இன்னும் பல தகவல்கள் தேவைப்படுவதாகவும் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். டயாபலி நகரை விட்டுக் கிளம்பிய ஹமீது டோங்காரா பொதுமக்களில் ஒருவர்கூட இந்த போரில் கொல்லப்படவில்லை நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை என்று விவரித்தார். ஏனென்றால் பிரெஞ்சுப்படைகளின் தாக்குதல் தொடங்கியதும் போன திங்களன்று அக்கிம் படைகள் டயாபலி நகரை நோக்கி வந்தன.
அப்போது அங்கிருந்த மக்களிட் நாங்கள் முஸ்லீம்கள் நாங்கள் அல்லாஹவின் பெயரால் இங்கு வந்திருக்கிறோம் யாரையும் துன்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்ததை டுங்காரா நினைவுபடுத்தினார்.
அக்கிம் படைகள் டயாபலி நகரில் உள்ள மருந்துகடைகளில் புகுந்து அங்கிருந்த மருந்துகளை அள்ளிச்சென்றன. மக்களில் ஒருவரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்தனர் மீறி வந்த ஒருவரை சுட்டு தள்ளியதாக டங்காரா கூறினார்.
அபுபக்கர் மய்கா(35)என்பவர் இந்த தாக்குதல் பற்றிக்கூறும்போது, அல்ஜீரியர் லிபியா நாடுகளைச் சேர்ந்த துவாரெக் இனத்தவரே பெரும்பாலும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறினார். இவர்கள் அனைவரும் முகத்தை மூடியிருப்பதால் அவர்களின் மொழிவழக்கை வைத்துதான் அவர்களை இனம்பிரித்தறிய முடியும் என்றார்.
மாலி படைகளைச் சோ்ந்த தளபதி செய்யது சொகோபா பொதுமக்களும் கலகக்கார்களுடன் கலந்திருப்பதால் இசுலாமியத் தீவிரவாதிகளைத் தனித்து வீழ்த்துவது கடினம் என்றார்
உலகை சுற்றி வந்தவர் படகு பழுதடைந்ததால் தவிப்பு.
கடல் வழியாக உலகை தனிநபராக வலம் வரும் பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் படகு பழுதடைந்து கடலில் சிக்கித் தவித்த பிரஞ்சுக்காரர் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவருகே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அலெய்ன் தெலோர் என்ற இந்த படகு பாய்மரப் படகு மாலுமியை பயணிகள் கப்பல் ஒன்று ஞாயிறன்று மீட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பயண பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
தனி நபராக உலகைச் சுற்றி பாய்மரப் படகில் வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அலெய்ன் டெலார்ட் சென்ற படகு மூன்று நாட்களுக்கு முன் பழுதடைந்திருந்தது
அவருடைய படகின் பாய்மரக் கம்பம் முறிந்துவிட அவர் தனது முயற்சியைக் கைவிட வேண்டி வந்தது.
டாஸ்மேனியாவிலிருந்து கடலில் ஐநூறு கடல் மைல்களுக்கு அப்பால் இவர் நின்றிருந்ததால், ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டிருந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இவருக்கு உணவு, குடிநீர், உயிர்காப்பு மிதவை உடுப்பு ஆகியவற்றைக் கொடுக்க முடிந்திருந்தது என பிபிசி செய்தியாளர் நிக் பிரையண்ட் குறிப்பிடுகின்றார்.
63 வயதான அலெய்ன்னுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அவர் மனத்தளவிலும் பெரிய பாதிப்பு எதுவும் அவருக்கில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அலெய்னுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அண்டார்டிகா கண்டத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஓரியன் என்ற கப்பலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்தக் கப்பல் ஐம்பது மணி நேரம் பாதை மாறி பயணித்து இவரைக் காப்பாற்றியுள்ளது.
பிரான்சிலிருந்து கிளம்பி அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றி தனி நபராக பாய்மரப் படகில் வலம் வரும் வெண்டீ குளோப் ரேஸ் என்ற போட்ட்யின் பாதையில் அலெய்ன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்
ஆனால் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் படகுப் போட்டியில் முறைப்படி பதிந்துகொண்டு அலெய்ன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கவில்லை
வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள்
இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது.
முதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இரவுக்கு அடுத்த இரவுதான் உண்மையான முதலிரவாக அமையும்.
முதல் இரவில் எப்படியெல்லாம் நமது மனைவியை சந்தோஷப்படுத்தலாம், குஷிப்படுத்தலாம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்டமிடல் எதுவும் இருப்பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும்.
முதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. இதுதான் ஒரே உபாயம் என்றில்லை… இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இது…
முதலிரவின்போது, பொதுவாக ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன்தான் பெஸ்ட். காரணம், ஏற்கனவே புதுப் பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்கத்தில் இருப்பார், இறுக்கமாகவும் இருப்பார். எனவே எடுத்ததுமே ‘கெளபாய், டாகி’ என்று போகாமல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன்தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன்தான் பெரும்பாலான தம்பதிகளுக்குப் பிடித்தமானதும் கூட, எளிமையானதும் கூட.
மேலும் தனது மனைவியின் முகத்தில் தெரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடியும் என்பதால் அவரது முக பாவனைக்கேற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதான் நல்லது.
அதேபோல 69 பொசிஷனும் கூட ஒரு ஜாலியான, எளிமையான விஷயம். இருவருக்கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளைமேக்ஸை எளிதில் அடையவும் இது உதவும். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதான். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசமயம், இருவரும் முழுமையான ஆர்கஸத்தை எட்ட இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது மாதிரி சின்னச் சின்னதான பொசிஷன்களை சூஸ் செய்வதே முதலிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியும் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந்த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிறகு நீங்கள் விதம் விதமான பொசிஷன்களை செய்து பார்க்கலாம்… அதுவரை இப்படி லைட்டான ஐட்டங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

























