siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சமுத்திரக்கனியின் சாட்டை பாடல்கள் இன்று வெளியீடு

28.08.2012.BY.rajah.
மைனா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் சாட்டை.
இந்த படத்தில் சமுத்திரகனி ஆசிரியர் வேடம் ஏற்று நடிக்கிறார். படத்தில் கண்ணியம் மிக்க ஆசிரியராக வலம் வரும் சமுத்திரகனிக்கு சுவாசிகா ஜோடியாக நடிக்கிறார்.
இளம் கதாநாயகனாக நடிக்கும் யுவனுக்கு, மகிமா ஜோடியாக நடிக்கிறார். வில்லனாக தம்பி ராமய்யா நடிக்கிறார்.
மைனா படத்திற்கு தேசிய விருதையும், பாராட்டுகளையும் பெற்ற தம்பி ராமய்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
பிளாக் பாண்டி, பிரேம், ஜீனியர் பாலையா, அவரது மகன் முரளி, பாவாலட்சுமணன் ஆகியோர் சாட்டைக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரங்கள்.
சாட்டை படம் பற்றி இயக்குனர் கூறுகையில், சாட்டை கதை நல்ல விதை! நல்ல விதை விதைக்கப்படுகிற நிலத்தை பொறுத்தே விருட்சமாவதும், வீணாவதும் தீர்மானிக்கப்படுகிறது.
பிரபுசாலமன்- ஜான் மேக்ஸ் இருவரும் நல்ல கதைக்கு கொடுத்த மரியாதைக்கு தலை வணங்குகிறேன்.
பிரபு சாலமன் தனது மாணவனை மதித்து, எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார். நானும் அவரது பெயரை காப்பாற்றி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
பிரபு சாலமன் கூறுகையில், திரைப்படக் கல்லூரியில் கோல்டு மெடல் பெற்றவர் அன்பழகன். சாட்டை என்கிற தலைப்பு ஆக்ஷன் தலைப்பாக தெரிந்தாலும், இது ஆக்ஷன் படமில்லை.
எந்தவொரு நாடும் வளமான நாடாக மதிக்கப்படுவது அந்த நாட்டின் கல்வித்துறையின் செயல்பாடுகளை வைத்து தான்.
பொறுப்பில்லாத ஆசிரியர்களும் இருக்கிறார்கள். கல்வியின் மதிப்பு தெரியாத மாணவர்களும் இருக்கிறார்கள்.
பெற்றோர்கள் தங்களது வாரிசுகளை ஆசிரியர்களை நம்பித்தான் அனுப்புகிறார்கள். ஆசிரியர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சாட்டையில் பதிவு செய்திருக்கிறோம்.
தயா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும், மாணவன் வேடத்தில் யுவனும் பொருந்தி போய் விட்டார்கள். இந்த படத்தை தயாரிப்பதற்காக பெருமைப்படுகிறோம் என்றார்கள் பிரபு சாலமனும், ஜான் மேக்சும்.

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட 18 வயசு படம்

சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ஊடகத்தினருக்காக 18 வயசு படம் திரையிடப்பட்டது.
நிக் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள 18 வயசு படத்தை ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.
இதில் ஜானி, காயத்திரி, ரோஹிணி, சத்யேந்திரன், மறைந்த எழுத்தாளர் கிருஸ்ணா டாவின்சி, யுவராணி, டொக்டர் சூரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சக்தி ஒளிப்பதிவு செய்ய தினேஷ், சார்லஸ் போஸ்கோ இசையமைத்துள்ளனர்.
சண்டைப் பயிற்சியை ராஜசேகர் கவனிக்க திரைப்படத்தை ஆண்டனி தொகுத்து வழங்கியுள்ளார்.
குடும்ப சூழலால் மன நிலை தவறும் இளைஞனின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பன்னீர் செல்வம்.
அம்மாவின் பாசத்துக்கும் தோழியின் அன்புக்கும் ஏங்கித் தவிக்கிறார் இளம் நாயகன் ஜானி. காடும், நட்சத்திர வான் வெளியும் தான் சுகமளிக்கும் உறுதியாக ஜானி நம்புகிறார்.
நண்பன் சொன்னதால் தோழி காயத்ரியின் காதல் நெருக்கத்தை ஜானி விரும்புகிறார். அம்மா யுவராணியையும், அவரின் அந்தரங்க நண்பனையும் தீர்த்துக் கட்டுகிறார்.
நண்பன் சத்யேந்திரன் உதவ, தோழி காயத்ரியோடு ஜானி தான் விரும்பிய காட்டுக்கு பயணமாகிறார். ஜானியை வேட்டையாட பொலிஸ் துரத்துகிறது.
மரண வாசலை நோக்கி வேகமாக செல்லும் நாயகன் ஜானியை காப்பாற்ற டொக்டர்கள் கிருஷ்ணா டாவின்சியும் ரோகிணியும் போராடுகிறார்கள்.
பொலிஸின் துப்பாக்கிக்கு ஜானி பலியாகிறாரா? தோழி காயத்ரியின் அன்பு ஜானிக்கு கிடைத்ததா? என்பதை பரபரப்பாக இயக்குனர் பன்னீர் செல்வம் சொல்லியிருக்கிறார்.
சவாலான கதாபாத்திரத்தில் ஜானி மிருகத்தனமான நடிப்பைக் காட்டியிருக்கிறார். சீரியசான காட்சிகளில் காயத்ரி அழுத்தமான நடிப்பைக் காட்ட முயற்சித்துள்ளார்.
தொழில் நுட்ப அளவில் ரசிகர்களை கவரும் வகையில் '18 வயசு' படம் வந்துள்ளது

புதிய தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட உயிர்மொழி



கொலிவுட்டில் ஹார்மோன் மூவி மேக்கர்ஸ், மானவ் புரடக்சன் இணைந்து தயாரித்துள்ள படம் உயிர்மொழி.
இப்படத்தில் மானவ், ராஜீவ், சர்தாஜ், கீர்த்தி, சாம்ஸ், சசி, பாபி ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குனர் ராஜா இயக்கியுள்ளார். விளம்பரப்படங்களில் பணியாற்றியுள்ள இவர், ப்ரைம் ஃ போகஸ் ஸ்டுடியோவில் எடிட்டராக பணிபுரிந்து, திரைப்பட இயக்கத்தையும் கற்று தேர்ந்தவர்.
உயிர்மொழி படம் குறித்து இயக்குனர் ராஜா கூறுகையில், பல சுவாரஸ்யமான காட்சிகள், சம்பவங்களை சேர்த்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நிச்சயம் தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
காதல், பாசம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, அதிர்ச்சி என்று எல்லாம் கலந்த அழகான கலகலப்பான படமாக உயிர்மொழி ரசிகர்களை கவரும். திரைக்கதையுடன் பின்னப்பட்டுள்ள டி.என்.ஏ அம்சம் படத்துக்கு கூடுதல் பலமாக நிற்கும்.
சென்னை, கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அனிமேஷன் அசத்தலும் உண்டு. stop motion, Limbo frame முறையிலும் காட்சிகளை எடுத்துள்ளோம்.
புதுமையான தொழில்நுட்பத்தில் நீளமான காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளோம் என்றும் பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


16 வயது பெண்ணாக நடிக்கும் தேவயானி

Tuesday, 28 August 2012, 07:57.50 AM GMT +05:30 ]
கொலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி.

காதல் கோட்டை, பிரண்ட்ஸ் என்று பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் இயக்குனர் ராஜகுமாரனை மணந்து கொண்ட பின்னும் அவ்வப்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
28.08.2012.BY.rajah.
கோலங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் வெற்றிகரமாக நடித்த இவர் தற்போது திருமதி தமிழ் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை அவரது கணவர் ராஜகுமாரன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் அவர்களுக்கு, இரண்டு டூயட் பாடல்கள் உள்ளதாம். அதில் ஒரு பாடல் காட்சியில், தேவயானி பதினாறு வயது பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ராஜகுமாரன் கூறுகையில், தேவயானியின் முகமும், உடலமைப்பும் இளமையாக தோற்றமளிப்பதால், இந்த கதாபாத்திரத்திற்கு, அவர் கச்சிதமாக பொருந்தி விட்டார்.
மேலும், திருமதி தமிழ் படத்தை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இயக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்
 

கணவரின் பிறந்தநாளை பார்வையற்றோருடன் கொண்டாடிய சினேகா

Tuesday, 28 August 2012, BYrajah.
நடிகை சினேகா வழக்கமாக தனது பிறந்தநாளை பார்வையற்றோருடன் கொண்டாடுவார்.
அதேபோலவே அவரது கணவரான நடிகர் பிரசன்னாவின் பிறந்த நாளையும் மந்தைவெளியில் பார்வையற்றோருடன் இன்று கொண்டாடினார்.
பிரசன்னா பார்வையற்றோர் மத்தியில் கேக் வெட்டினார். அவர்களுக்கு சினேகா கேக் ஊட்டி விட்டார். பின்னர் மூன்று சக்கர சைக்கிள், 100 பேருக்கு ஆடைகள், உபகரணங்கள், 200 பேருக்கு உணவு போன்ற உதவி பொருட்களையும் சினேகாவும், பிரசன்னாவும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசன்னா கூறுகையில், எனது பிறந்தநாளை இன்றுதான் பயனுள்ளதாக கொண்டாடி இருக்கிறேன். எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வருவது கடைசி நிமிடம் வரை தெரியாது.
பிறந்தநாளையொட்டி மயிலாப்பூர் கோவிலில் சினேகாவும், நானும் சாமி கும்பிட்டோம். திடீரென்று இங்கே சினேகா என்னை அழைத்து வந்து விட்டார்.
இவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக சினேகாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இனிவரும் காலங்களிலும் இதுபோல பயனுள்ள வகையில், பிறந்த நாள் கொண்டாடுவேன் எனவும் கூறினார்.
நிகழ்ச்சியில் பார்வையற்றோர்கள் சங்க தலைவர் அருணாச்சலம், ஐயப்பன், சாய் சங்க தலைவர் கே.தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்


ரஜினி ஸ்டைலில் சசிகுமார்!

28,08.2012.BYrajah.தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் இயக்குனர் சசிகுமார் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன். சசிகுமாருக்கு ஜோடியாக லஷ்மி மேனன் நடிக்க நடிகர் சூரி, தேசிய விருது பெற்ற அப்புகுட்டி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் சுந்தர பாண்டியன் படத்தின் இசை வெளியீடு நடந்தது. இதில் இயக்குனர்கள் பாலா, சமுத்திரகனி, ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சசிகுமார்.
படத்தின் முதல் பாடலான கொண்டாடும் மனசு ஹீரோ சசிகுமாரின் அறிமுகப்பாடல். இதில் நடன அசைவுகள் எல்லாமே ரஜினி ஸ்டைலில் இருந்ததை பார்த்தவர்கள் உணரமுடியும். இதுபற்றி சசிகுமாரிடம் கேட்டபோது, “ இந்த படத்துல நான் ரஜினி சார ஃபாலோ பண்ணி நடிச்சிருக்கேன். படத்துல என்னோட முதல் காட்சியே ‘இவர் தான் சுந்தரபாண்டியன். ரஜினி ரசிகர்’னு சொல்றா மாதிரி தான் இருக்கும். முதல் பாடலும் அப்படித்தான் ரஜினி சார் ஸ்டைலில் மூவ்மெண்ட் போட்டிருக்கோம்.
இதுவரைக்கும் நான் நடிச்ச படத்துல என்ன பாத்து எல்லாரும் பயந்தாங்க. என்னடா இவன் எப்பவுமே கத்தியோட வந்து கொலை செய்யுறதே வேலையா இருக்கான்னு. ஆனா இந்த படத்துல நட்பு,காதல், ஆக்‌ஷன், குடும்பம் என எல்லாம் இருக்கு.
எப்போதும் படத்தில் நீங்க மத்தவங்க காதலுக்கு தான் உதவி செய்வீங்க. ஆனா, இந்த படத்துல நீங்களே காதலிக்கிறீங்களே? என்று கேட்டதற்கு, ஏன் நான் காதலிக்கக் கூடாதா ஒரு பொண்ண வெரட்டி வெரட்டி இந்த படத்தில் காதலிக்கிறேன்” என்றார். சுந்தரபாண்டியன் அடுத்த மாதத்தில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது

சந்தனமடு ஆற்றுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி

28.08.2012.BY.tajah.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றுப் பகுதியில் நேற்று திங்கள் அதிகாலை யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். பலியானவர் களுவன்கேணியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (32 வயது) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் நேற்று அதிகாலை களுவன்கேணியிலிருந்து சந்தனமடு ஆற்றுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆற்றுக்கு அண்மையில் யானை குறுக்கிட்டு இவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.

நேற்றுக் காலை செங்கலடி வைத்தியசாலைக்குச் சடலம் கொண்டுவரப்பட்டபோது மாவட்ட வைத்திய அதிகாரி கே.சுகுமார் முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மரண விசாரணையை நடத்தினார். சடலத்தை பலியானவரின் மனைவி கிருஷ்ணபிள்ளை மஞ்சுளா அடையாளம் காட்டினார். பிரேதப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலமான தாக்குதல் காரணமாக மண்டையோட்டுப் பகுதி நொருங்கியதால் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ஏறாவூர் பொலிசார் சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

28.08.2012.BY.rajah.
நடைபெற்று முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட மோசடியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வினாத்தாள் மோசடி தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மேற்கண்டவாறு எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் இவ்வாண்டுக்கான 5ஆம் ஆண்டுப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,803 பரீட்சை மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து நானூற்றுப் பத்து பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அதன் போது தேசியக் கொடியின் சிறப்புப் பற்றி எழுதுவதற்கான கட்டுரை வினா தென்னிலங்கையின் பல இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டதை அடுத்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் விசாரணைகளை நடாத்தி உண்மையினைக் கண்டறியுமாறு கோரப்பட்டது.
அதன்படி கம்பகா கடவத்த போன்ற பல பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
எனினும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் இது தொடர்பில் ஆராய உள்ளதாக அவர் தெரிவித்தார்.ஆனாலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பரீட்சை ஆணையாளர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இல்லையேல் ஆசிரியர் சங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ தெல்லிப்பழை துர்க்கை தேர்த் திருவிழா

.BY.rajah.28.08.2012
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து உள் வீதியுலா வந்த துர்க்கை அம்மன் 9 மணியளவில் தேரில் ஏறி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர். பக்கதர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலயத்துக்கு விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.


கிளிநொச்சியில் இரவு 12 மணிக்கு பின்னர் தொடரும் சிங்களவரின் வெறியாட்டாம்!

 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah.
 
இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில் தென்னிலங்கை சிங்களவர்கள் வடக்குப் பிரதேசங்களுக்கு சுற்றுலா வருவது தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இவ்வாறு வரும் சிங்களவர்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கு இராணுவம் வசதிகளை செய்துகொடுக்கிறது. இவ்வசதிகள் புலிகளின் இடங்கள் எனக் கூறிக்கொண்டு, இராணுவம் தம்வசம் வைத்துக்கொண்டுள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் வீடுகளிலேயே வழங்கப்படுகின்றன.
இவ்வாறு கிளிநொச்சி திருநகர் பிரதேசம், கிளிநொச்சி நகரில் இருந்தும் சற்று உள்நோக்கி இருந்தப்போதும் அங்கும் தமிழர்களின் காணிகள் பல இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளவை தென்னிலங்கை சிங்களச் சுற்றுலா பயணிகளுக்கு தங்க இடமளிக்கப்படுகிறது.
இவ்விடங்களில் இரவு தங்கும் சிங்களவர்கள் இரவு 12:00 மணிக்கு பின்னரும் மதுபோதையில் "பைலா" எனும் பெயரில் கிடைக்கும் தகரம் தட்டுகளை அடித்து சிறு குழந்தைகள், வயோதிபர் என எவரும் நித்திரை கொள்ள முடியாத வகையில் பெரும் ஓசை எழுப்பி ஆடல் பாடல் என வெறியாட்டம் ஆடுகின்றனர்.
இதனால் இப்பிரதேச மக்களால் இரவு நேரங்களில் நித்திரைக் கொள்ள முடியாமலும், அச்சத்தினால் எவரிடமும் முறையிட முடியாத அவல நிலைக்கு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பிரதேச மக்கள் ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை காவல் துறையினரிடமோ, இராணுவத்திடமோ மக்கள் முறையிட்டால் முறையிடுபவர்களே தண்டனைக்கு உள்ளாவது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
தமிழர் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகளை முறையிடுவதற்கோ, முறையிட்டாலும் அதனை தீர்ப்பதற்கோ எவரும் அற்ற நிலைக்கே இன்று இப்பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்