| Wednesday, 29 August 2012.BY.rajah. |
| எஸ். எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் சுதீப் நடித்த நான் ஈ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. |
|
கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெலுங்கில் நடித்த படம் ஈகா. இதனால் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களைக்கூட எடுத்துவிட்டு தமிழ்நாட்டில்நான் ஈ திரைப்படங்களை திரையிட்டனர். இந்த திரைப்படம் ஆந்திராவிலும், தமிழிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது நான் ஈ. இந்நிலையில் கன்னட நடிகரான கிச்சா சுதீப் பிற்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் மன்றம் அமைக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்கு ரசிகர்கள் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 29 ஆகஸ்ட், 2012
தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாயை வசூலித்த நான் ஈ
புதன், ஆகஸ்ட் 29, 2012
தகவல்கள்
ஆண், பெண் நண்பர்களாக பழகினால் தவறா? த்ரிஷா கேள்வி
புதன், ஆகஸ்ட் 29, 2012
தகவல்கள்
| Wednesday, 29 August 2012,BY.rajah. |
| நடிகர் ராணாவுடன் காதல், விரைவில் திருமணம் என்றெல்லாம் வதந்திகள் பரவுவதற்கு காரணம் இருக்கிறது என்கிறார் த்ரிஷா. |
|
தெலுங்கு நடிகர் ராணா, த்ரிஷா நெருக்கமாக பழகி வருவதாகவும், அடுத்த ஆண்டு
இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து த்ரிஷா கூறுகையில், ராணாவும், நானும் பல வருடங்களாக நண்பர்களாக பழகி வருகிறோம். அதை வைத்து எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்கிறோம் என்று எழுதுகிறார்கள். இதெல்லாமே உண்மைக்கு புறம்பானது. ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக பழகினால் அதில் என்ன தப்பு? அதை வைத்து காதலிப்பதாக கூறுவது சரியல்ல. தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். என்னை தேடி வரும் நல்ல படங்கள் எல்லாவற்றிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நானோ, எனது குடும்பத்தினரோ என்னுடைய திருமணம் பற்றி இன்னும் யோசிக்கக்கூட இல்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராணாவும் நானும் நண்பர்கள். இப்போதுதான் இருவரும் வெளிப்படையாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறோம். அதை வைத்துதான் இதுபோல் வதந்தி பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் |
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேனா? பிரியங்கா ஆவேசம்
புதன், ஆகஸ்ட் 29, 2012
தகவல்கள்
| Wednesday, 29 August 2012, BY.rajah. |
| பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. |
| இது பற்றி அவர் கூறுகையில், என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் தேவை
எனக்கு ஏற்படவில்லை. ஆனாலும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. தொடக்க காலங்களில் மேக்கப் போடுவது எப்படி என்பதுகூட எனக்கு தெரியாது. பல்வேறு படங்களில் நடித்த பிறகே அதுபற்றி புரிந்துகொண்டேன். பல நடிகைகளின் நிலைமை இதுதான். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூறுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்கு நான் எதிரி அல்ல. அழகையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதில் தவறு இல்லை. ஆனால் அதுவே மனதை ஆட்டிப் படைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அது தவறு. எனக்கு நம்பிக்கை தருவது என்னுடைய படங்களின் வெற்றிதான். நடிகையாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. எனது பல வயதில் பல்வேறு தோற்றங்களில் நான் மாற்றம் அடைந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் தோற்றத்தில் நான் செலுத்திய கவனம்தான். இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த தோற்றம் எனக்கு பிடித்த வகையில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் |
அமலாவுக்கு நடிகை குஷ்பு வரவேற்பு
புதன், ஆகஸ்ட் 29, 2012
தகவல்கள்
| Wednesday, 29 August 2012, BY.rajah. |
| அமலா நாகர்ஜுனா மீண்டும் நடிக்க வருவதற்கு நடிகை குஷ்பு தன்னுடைய வரவேற்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். |
|
நடிகை அமலா 1982- 1992 வரையிலான திரையுலக காலத்தில் தன்னுடைய வசீகரமான
நடிப்பினால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர். 1992 ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்த பின்னர், திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் Life is Beautiful படத்தின் மூலமாக நடிகை அமலா நீண்ட காலத்திற்கு பின்பு நடிக்க வருகிறார். இந்த செய்தியை கேட்ட நடிகை குஷ்பு, என்னுடைய நெருங்கிய தோழி அமலா மீண்டும் நடிக்க வருவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது என்று தனது இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் |
நான் ஸ்ரீதேவியின் ரசிகர்: அஜித்
புதன், ஆகஸ்ட் 29, 2012
தகவல்கள்
| Wednesday, 29 August 2012, BY.rajah. |
| நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்காக அஜித்குமார் கௌர வேடத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். |
|
இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி
வருகின்றது. இந்நிலையில் தமிழில் உருவாகும் இப்படத்திற்காக கௌர வேடத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ரஜினி நடிக்க வில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் பால்கி, நடிகர் அஜித்குமாரை அணுகினார். அஜித்தும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இரண்டு நாள்களாக இப்படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித், 12 மணி நேரத்தில் தனது வேடத்தை ஏற்று நடித்துக் கொடுத்தார். சம்பளம் பற்றி தயாரிப்பாளர் பால்கி பேச, அஜித் மறுத்து விட்டாராம். நான் ஸ்ரீதேவியின் ரசிகன் என்றும் சம்பளம் தேவையில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் |
பிரியாணியில் சினேகா, பிரசன்னா
புதன், ஆகஸ்ட் 29, 2012
தகவல்கள்
| Wednesday, 29 August 2012, BY.rajah. |
| வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் பிரசன்னா, சினேகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. |
|
மங்காத்தா வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு கார்த்தியை வைத்து
பிரியாணி என்ற படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் பிரியாணியில் பிரசன்னா, சினேகா நடிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார். இப்படத்தில் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் சினாகா நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்றார். படத்திற்கான நாயகி தெரிவு விரைவில் நடைபெறும் என்றும் வெங்கட் கூறியுள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 2 பாடல்களுக்கு இசையமைத்துள்ள யுவன், அடுத்த பாடலுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார். படத்தின் முதல் பாடலை கவிஞர் வாலி எழுத கேட்டுக் கொண்டதாகவும் மற்ற பாடல்களை வாலியுடன் கங்கை அமரன் எழுத உள்ளதாகவும் வெங்கட் தெரிவித்தார் |
ஓணம் பண்டிகையை கேரளாவில் கொண்டாட முடியவில்லை:
புதன், ஆகஸ்ட் 29, 2012
தகவல்கள்
| Wednesday, 29 August 2012,BYrajah. |
| கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையான ஓணம் பண்டிகையை நாயகி அசின் மும்பையிலே கொண்டாடுகிறார். |
|
மலையாள நடிகர், நடிகைகளான மம்முட்டி, மோகன் லால், ஜெயராம், பிருதிவிராஜ்,
நயன்தாரா, அசின், மீராஜாஸ்மீன், பத்மபிரியா, அனன்யா, கோபிகா போன்றோர் வீட்டிலும்,
படப்பிடிப்பு தளங்களிலும் புத்தாடை உடுத்தி ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில்
ஈடுபட்டனர். தற்போது மும்பையில் 'கிலாடி' என்ற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் நடிகை அசின் மும்பையிலேயே ஓணம் பண்டிகையை கொண்டாடினார். மேலும் ஓணம் பண்டிகை குறித்து அவர் கூறுகையில், எனக்கு பிடித்த ஓணம் பண்டிகையை கேரளாவில் எனது வீட்டில் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கேரளா செல்ல முடியவில்லை என்பதால் மும்பையில் கொண்டாடுகிறேன். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து கொடுக்க உள்ளேன். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஓணம் பண்டிகைக்கு மலையாளி அல்லாதவர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பேன். எனது தாயும் விதவிதமாக சமைத்து தருவார். பெரும்பாலும் ஓணம் பண்டிகைக்கு எடுக்கும் புத்தாடை பட்டு பாவாடை சட்டையாகத் தான் இருக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் வீட்டில் ஓணத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் |
சகுனி (வீடியோ இணைப்பு)
புதன், ஆகஸ்ட் 29, 2012
காணொளி
| 29.08.2012.BYrajah. |
| அரசியலை மையமாக வைத்து படம் வந்து நாட்களாகி விட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும். |
|
ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்து
வைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு
பொழுதுபோக்குமாயிற்று! காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது! முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை. தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ். குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை. முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்! முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி! என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!" பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும் போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ.1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது! மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை! கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை. இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்து விட்டது போன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம். கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார். நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர். இசை: ஜீவி பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு: பிஜி முத்தையா. பிஆர்ஓ: ஜான்சன். தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன். இயக்கம்: சங்கர் தயாள். |
சௌந்தர்யா படத்தில் பழி வாங்கும் ஆவி நாயகி
புதன், ஆகஸ்ட் 29, 2012
தகவல்கள்
Wednesday, 29 August 2012, BY.rajah.
சந்திரமோஹனின் இயக்கத்தில் ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் தயாரிக்கும் புதிய படம் செளந்தர்யா.
புதுமுகங்கள் கோவிந்த், கில்லர் காசிம், ரித்தூஸன், சாரதி, சந்தோஷ், வினித் வினு, சஞ்சுகொட்டேரி என்று பலர் நடிக்க, இவர்களுடன் மாறுபட்ட வேடத்தில் எப்.எம்.எஸ் நடராஜன் நடித்துள்ளார்.
சந்திரமோஹனின் இயக்கத்தில் ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் தயாரிக்கும் புதிய படம் செளந்தர்யா.
புதுமுகங்கள் கோவிந்த், கில்லர் காசிம், ரித்தூஸன், சாரதி, சந்தோஷ், வினித் வினு, சஞ்சுகொட்டேரி என்று பலர் நடிக்க, இவர்களுடன் மாறுபட்ட வேடத்தில் எப்.எம்.எஸ் நடராஜன் நடித்துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலையில் மஜாஜ் வேலை செய்யும் அழகிய இளம் பெண் செளந்தர்யா. அவள் அழகில் மயங்கும் விமல், அவள் தன்னிடம் அப்படி பழகுவாள் இப்படி
நடந்து கொண்டாள் என்று இல்லாத பொல்லாத செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, அந்த பொய் செய்தியை நம்பும் நான்கு இளைஞர்கள், செளந்தர்யாவிடம் சென்று தங்களது ஆசைக்கும் இணங்குமாறு வலியுறுத்துகின்றனர்.
அதற்கு அவள் சம்மதிக் மறுக்கிறாள். இதனால் ஆத்திரம் அடையும் அந்த நால்வரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அந்த வன்முறை தாங்காது செளந்தர்யா உயிரை இழக்கிறாள்.
பிறகு அவள் ஆவியாக வந்து அவர்களை எப்படி பழி வாங்குகிறாள் என்பதை புதிய களத்தில், புதிய கோணத்தில், புதிய ஸ்டைலில் படமாக்கி உள்ளேன் என்கிறார் இயக்குநர் சந்திமோஹன்.
மேலும் படம் பற்றி இயக்குநர் சந்திமோஹன் கூறுகையில், இந்தப் படத்துல ஒரு மெசேஸ் இருக்கு. சீரியஸா இருந்தாலும் அதை உணர்ற மாதிரி நகைச்சுவையோடு சொல்லிருக்கேன்.
ரெண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக படம் இருக்கும். நல்ல அருமையான பாடல்கள் இருக்கு. ஆட்டம் பாட்டம்னு மனசை அள்ளுற மாதிரி நிறைய காட்சிகள் இருக்கு.
படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் கை தட்டி, விசில் அடிச்சு என்ஜாய் பண்ணிப் பார்ப்பாங்க. இந்தப் படம் எல்லா இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம். அந்த நோக்கத்தோடுதான் எடுத்திருக்கேன்.
அஜ்மல் அஜீஸ் என்பவரின் இசையில், பாடல்களை கவிகுமரன் எழுதி உள்ளார். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான ஆனைமலை, ஆனைக்கட்டி, தளிக்குள்ளம் பீச் போன்ற இடங்களில் படமாக்கி உள்ளேன்.
ரித்திக் சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை புரூஸ்லி ராஜேஷ் அமைத்திருக்கிறார். வித்தியாசமான நடன காட்சிகளை விஜய ரக்ஷித் அமைத்துள்ளார்.
பரபரப்பான இந்தப் படத்திற்கு ஆத்மஜன் திரைக்கதை எழுதி இருக்கிறார். சின்னதாக சொன்னாலும் பஞ்ச் வைத்த மாதிரி வசனங்களை தீட்டி உள்ளார் வசனகர்த்தா ஜே.ரமல் பிரபு என்கிறார்.
தயாரிப்பாளர் குருவண்ண பஷீர் கூறுகையில், யார் தப்பு செய்தாலும், அவர்களுக்கு இந்த பூமியிலேயே தண்டனை கிடைச்சிடும் என்பது தான் இந்தப் படத்தோட கருத்து.
இப்போது கிடைத்திருக்கிற இளமை வாழ்க்கையை சரியாக நடத்த வேண்டும். எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. பல பேர் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை. யாருக்கு என்ன நடந்தா என்ன என்று நினைக்கிற மனநிலை இந்த தலைமுறை இளைஞர்களிடம் இருக்கு.
விளையாட்டு தனமா செய்ற சம்பவம் இன்னொருத்தருக்கு வலியா வேதனையா இருக்கும். அது மாதிரி எல்லாம் இருக்க கூடாது. இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக தாங்கள் செய்த ஒரு சிறு தவறையாவது உணர்வார்கள்.
தீங்கு செய்யமால் இருக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவற்றை நினைத்து சிலர் திருத்திக்க ஒரு வாய்ப்பாகவும் ஒரு உணர்வை ஏற்படுத்தும் படமாக இந்தப் படம் இருக்கும். செய்த தவறை நினைத்து ஒரு ஆள் வருத்தப்பட்டால் கூட எங்களுக்கு பெரிய திருப்தி தான் என்று தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை சுற்றுலா பஸ் மோதி ஒருவர் படுகாயம்; தென்மராட்சியில் சம்பவம்
புதன், ஆகஸ்ட் 29, 2012
இணைய செய்தி
| 29.08.2012.BYrajah. |
|
புத்தூர் வீதி வேம்பிராய் சந்தியில் நடைபெற்ற சாலை
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அதிதீவிர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் வீதி வேம்பிராய் சந்தியில் இன்று மாலை 6.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் மீசாலை மேற்கைச் சேர்ந்த த. நாராயணபிள்ளை வயது 60 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு
இச் சம்பவம் குறித்துத்
தெரியவருவதாவது,
தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வேம்பிராய் சந்தியை துவிச்சக்கர வண்டியில் கடந்து சென்று கொண்டிருந்த வேளை புத்தூர் வீதியில் இருந்து ஏ9 பாதையை நோக்கி வந்து கொண்டிருந்த தென்னிலங்கை சுற்றுலா பஸ் குறித்த நபரை மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அதனையடுத்து அயலவர்களது உதவியுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ் விபத்திற்குக் காரணம் சாரதியின் கவனக்குறை ஆகும். ஏனெனில் சந்தி என்பதையே கருத்திற் கொள்ளாமலே சாரதி வாகனத்தை செலுத்தி வந்துள்ளார். சம்பவத்தையடுத்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிய வேளையில் சந்தியில் இருக்கும் இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு விடயம் குறித்து அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பெருமளவிலான போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரும் சாதாரண பொலிஸாரும் பெருமளவில் பிரசன்னமாகி இருந்தனர். அந்த இடம் ஒரு களோபரத்தை அடக்குவதற்கு என பொலிஸார் வருகை தந்ததிருந்த இடமாக மாறியிருந்தது. பெருமளவிலான ஆட்கள் குவிந்திருந்ததால் அவர்கள் பயந்து விட்டார்கள் போலும் இங்கு கூடியிருந்த மக்களை விரட்டுவதிலேயே இராணுவத்தினரும் பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்ல இங்கு நின்றவர்களை தகாத முறையில் பேசியதுடன் தட்டிக் கேட்க ஆட்களில்லை என்ற நிலையில் அதிகார பலத்தை பிரயோகித்த வண்ணமே இருந்தனர். எனினும் அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களது சொற்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் அவ்விடத்திலேயே நின்றனர் அதன் போது அங்கு நின்ற போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் இவர்களை இப்படி விட்டால் சரிவராது நாவாந்துறை மாதிரித்தான் செய்ய வேண்டும் என சிங்களத்தில் தமக்குள் போசிக் கொண்டதனை தெளிவாக கேட்க முடிந்தது. அதனடிப்டையில் நோக்கும் போது அதிகரித்த பொலிஸ் பிரசன்னமானது திட்டமிட்ட படியே தான் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது. அந்த இடத்தில் 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் வரவேண்டிய அவசியம் கிடையாது ஆனாலும் குறித்த பஸ்சும் அதில் வந்திருந்தவர்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தான் இதற்கான காரணம் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடனேயே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள். எனினும் இரவு 8மணிக்குப் பின்னரே சம்பவ இடத்தில் இருந்து பஸ் நீதிமன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனாலும் அதுவரை சாரதி கைது செய்யப்படவில்லை. எனினும் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலமை கவலைக் கிடமாகவே உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
























