29.08.2012.BYrajah. |
புத்தூர் வீதி வேம்பிராய் சந்தியில் நடைபெற்ற சாலை
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அதிதீவிர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் வீதி வேம்பிராய் சந்தியில் இன்று மாலை 6.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் மீசாலை மேற்கைச் சேர்ந்த த. நாராயணபிள்ளை வயது 60 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு
இச் சம்பவம் குறித்துத்
தெரியவருவதாவது,
தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வேம்பிராய் சந்தியை துவிச்சக்கர வண்டியில் கடந்து சென்று கொண்டிருந்த வேளை புத்தூர் வீதியில் இருந்து ஏ9 பாதையை நோக்கி வந்து கொண்டிருந்த தென்னிலங்கை சுற்றுலா பஸ் குறித்த நபரை மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அதனையடுத்து அயலவர்களது உதவியுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ் விபத்திற்குக் காரணம் சாரதியின் கவனக்குறை ஆகும். ஏனெனில் சந்தி என்பதையே கருத்திற் கொள்ளாமலே சாரதி வாகனத்தை செலுத்தி வந்துள்ளார். சம்பவத்தையடுத்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிய வேளையில் சந்தியில் இருக்கும் இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு விடயம் குறித்து அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பெருமளவிலான போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரும் சாதாரண பொலிஸாரும் பெருமளவில் பிரசன்னமாகி இருந்தனர். அந்த இடம் ஒரு களோபரத்தை அடக்குவதற்கு என பொலிஸார் வருகை தந்ததிருந்த இடமாக மாறியிருந்தது. பெருமளவிலான ஆட்கள் குவிந்திருந்ததால் அவர்கள் பயந்து விட்டார்கள் போலும் இங்கு கூடியிருந்த மக்களை விரட்டுவதிலேயே இராணுவத்தினரும் பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்ல இங்கு நின்றவர்களை தகாத முறையில் பேசியதுடன் தட்டிக் கேட்க ஆட்களில்லை என்ற நிலையில் அதிகார பலத்தை பிரயோகித்த வண்ணமே இருந்தனர். எனினும் அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களது சொற்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் அவ்விடத்திலேயே நின்றனர் அதன் போது அங்கு நின்ற போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் இவர்களை இப்படி விட்டால் சரிவராது நாவாந்துறை மாதிரித்தான் செய்ய வேண்டும் என சிங்களத்தில் தமக்குள் போசிக் கொண்டதனை தெளிவாக கேட்க முடிந்தது. அதனடிப்டையில் நோக்கும் போது அதிகரித்த பொலிஸ் பிரசன்னமானது திட்டமிட்ட படியே தான் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது. அந்த இடத்தில் 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் வரவேண்டிய அவசியம் கிடையாது ஆனாலும் குறித்த பஸ்சும் அதில் வந்திருந்தவர்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தான் இதற்கான காரணம் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடனேயே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள். எனினும் இரவு 8மணிக்குப் பின்னரே சம்பவ இடத்தில் இருந்து பஸ் நீதிமன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனாலும் அதுவரை சாரதி கைது செய்யப்படவில்லை. எனினும் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலமை கவலைக் கிடமாகவே உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன |
புதன், 29 ஆகஸ்ட், 2012
தென்னிலங்கை சுற்றுலா பஸ் மோதி ஒருவர் படுகாயம்; தென்மராட்சியில் சம்பவம்
புதன், ஆகஸ்ட் 29, 2012
இணைய செய்தி