புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah. |
கணவன்
தன்னுடைய உயிரணுக்களை தானம் செய்ய, மனைவியின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என
இங்கிலாந்து பெண் ஒருவர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் பெண் ஒருவர் பிரபல பத்திரிக்கையான டெய்லி மெயிலுக்கு
பேட்டியொன்றை அளித்துள்ளார். அதில், என் கணவர் உயிரணுக்களை எனக்கே தெரியாமல் இரகசியமாக தானம் செய்துள்ளார். இது முற்றிலும் தவறு. ஆண், பெண் இருவரும் திருமண பந்தத்துக்குள் வந்து விட்ட பிறகு, கணவனின் உயிரணுவும் திருமண சொத்தாகி விடுகிறது. எனவே மனைவியின் அனுமதி இல்லாமல் கணவன் உயிரணுக்களை தானம் செய்ய கூடாது. இந்த விடயத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆண்களிடம் உயிரணுக்களை தானம் பெறும் போது, மனைவியின் அனுமதியையும் பெற வேண்டும். |
புதன், 29 ஆகஸ்ட், 2012
கணவன் உயிரணுக்களை தானம் செய்ய மனைவியின் அனுமதி வேண்டும்: பெண் போர்க்கொடி
புதன், ஆகஸ்ட் 29, 2012
இணைய செய்தி