siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 29 ஆகஸ்ட், 2012

கிறிஸ்தவர் மற்றும் பெண் ஒருவர் எகிப்து ஜனாதிபதி உதவியாளர்களாக நியமனம்

29.08.2012.BYrajah.
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி தனது உதவியாளர்களில் ஒரு கிறிஸ்தவர், பெண் மற்றும் இரு இஸ்லாமிய வாதிகளை நியமித்துள்ளார். கிறிஸ்தவ மிதவாத எழுத்தாளரான சமிர் முர்குஸ் ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கான ஜனாதிபதி உதவியாளராகவும், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ் ஞான விரிவுரையாளரான பகினம் அல் ஷர்காவி என்ற பெண் ஜனாதிபதியின் அரசியல் விவகார உதவியாளராகவும் முர்சி நியமித்துள்ளார்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மொஹமட் முர்சி தனது தேர்தல் பிரசாரத்தில் கிறிஸ்தவர் ஒருவர் தனது உதவியாளராக பெரும்பாலும் துணை ஜனாதிபதியாக நியமிக்கப் படுவார் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் முன்னாள் நீதிபதியான மஹ்மூத் மெக்கி துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட் டுள்ளார். எனினும் எகிப்து சனத்தொகையில் 10 வீதம் கொண்ட கிறிஸ்தவர்கள் புதிய அரசில் தமது பிரதிநிதித் துவம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எகிப்து அமைச்சரவையிலும் ஒரு கிறிஸ்தவரே இணைக்கப் பட்டுள்ளார். இதில் கடும் போக்கு சலபி கட்சியான நூர் கட்சியின் தலைவர் இமாத் அப்துல் கபூர் ஜனாதி பதியின் சமூக தொடர்புகள் குறித்த உதவியாளராகவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இஸ்ஸாம் அல் ஹதாத் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான உதவியாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இதுதவிர 17 ஜனாதிபதி ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்