siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 29 ஆகஸ்ட், 2012

மூழ்கும் கப்பலில் தொடர்ந்தும் எண்ணெய்க் கசிவு

29.08.2012.BY.rajah.

 


மீன்களின் இறப்புக்கு எண்ணெய் கசிவு காரணமா? வெள்ளவத்தை கடற்பரப்பில் உயிரிழந்திருக்கும் மீன்களின் இறப்புக்கு கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவுதான் காரணமா? என்பது குறித்து ஆராய்வதற்கென இறந்த மீனின் உடற் பாகங்களை பெற்றுக் கொள்ளவிருப்பதாக நாரா நிறுவனம் தெரிவிக்கிறது. உயிரிழந்த மீன்கள் இரண்டே இதுவரை மீட்கப்பட்டிருப்பதனால் இவை எண்ணெய் கசிவினால் உயிரிழக்கப்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வரமுடியுமெனவும் நாரா நிறுவனத்தின் அதிகாரியொருவர் கூறினார். இருப்பினும் தொடர்ந்தும் நாம் இது குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட்டு வருகிறோம். மீனவர்கள் தமக்கு தேவையில்லாத, விற்பனைக்கு உதவாத மேற்படி வகையான மீன்களை கடலில் எறிந்துவிட்டு செல்வதுண்டு மீட்கப்பட்டி ருக்கும் உயிரிழந்த மீன்கள் மீனவர்களால் கடலில் எறியப்பட்டவையாக இருக்கலா மென்றே ஊகிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பாணந்துறை கடற்பரப்பில் மூழ்கியிருக்கும் சைப்பிரஸ் நாட்டுக்குச் சொந்தமான கப்பலிலிருந்து தொடர்ந்தும் ஆங்காங்கே எண்ணெய் கசிவு இடம்பெற்று வருவதாகவும் அதனை அகற்றும் பணியில் சமுத்திர வள பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கூறினார்