Wednesday, 29 August 2012, BY.rajah.
சந்திரமோஹனின் இயக்கத்தில் ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் தயாரிக்கும் புதிய படம் செளந்தர்யா.
புதுமுகங்கள் கோவிந்த், கில்லர் காசிம், ரித்தூஸன், சாரதி, சந்தோஷ், வினித் வினு, சஞ்சுகொட்டேரி என்று பலர் நடிக்க, இவர்களுடன் மாறுபட்ட வேடத்தில் எப்.எம்.எஸ் நடராஜன் நடித்துள்ளார்.
சந்திரமோஹனின் இயக்கத்தில் ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் தயாரிக்கும் புதிய படம் செளந்தர்யா.
புதுமுகங்கள் கோவிந்த், கில்லர் காசிம், ரித்தூஸன், சாரதி, சந்தோஷ், வினித் வினு, சஞ்சுகொட்டேரி என்று பலர் நடிக்க, இவர்களுடன் மாறுபட்ட வேடத்தில் எப்.எம்.எஸ் நடராஜன் நடித்துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலையில் மஜாஜ் வேலை செய்யும் அழகிய இளம் பெண் செளந்தர்யா. அவள் அழகில் மயங்கும் விமல், அவள் தன்னிடம் அப்படி பழகுவாள் இப்படி
நடந்து கொண்டாள் என்று இல்லாத பொல்லாத செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, அந்த பொய் செய்தியை நம்பும் நான்கு இளைஞர்கள், செளந்தர்யாவிடம் சென்று தங்களது ஆசைக்கும் இணங்குமாறு வலியுறுத்துகின்றனர்.
அதற்கு அவள் சம்மதிக் மறுக்கிறாள். இதனால் ஆத்திரம் அடையும் அந்த நால்வரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அந்த வன்முறை தாங்காது செளந்தர்யா உயிரை இழக்கிறாள்.
பிறகு அவள் ஆவியாக வந்து அவர்களை எப்படி பழி வாங்குகிறாள் என்பதை புதிய களத்தில், புதிய கோணத்தில், புதிய ஸ்டைலில் படமாக்கி உள்ளேன் என்கிறார் இயக்குநர் சந்திமோஹன்.
மேலும் படம் பற்றி இயக்குநர் சந்திமோஹன் கூறுகையில், இந்தப் படத்துல ஒரு மெசேஸ் இருக்கு. சீரியஸா இருந்தாலும் அதை உணர்ற மாதிரி நகைச்சுவையோடு சொல்லிருக்கேன்.
ரெண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக படம் இருக்கும். நல்ல அருமையான பாடல்கள் இருக்கு. ஆட்டம் பாட்டம்னு மனசை அள்ளுற மாதிரி நிறைய காட்சிகள் இருக்கு.
படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் கை தட்டி, விசில் அடிச்சு என்ஜாய் பண்ணிப் பார்ப்பாங்க. இந்தப் படம் எல்லா இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம். அந்த நோக்கத்தோடுதான் எடுத்திருக்கேன்.
அஜ்மல் அஜீஸ் என்பவரின் இசையில், பாடல்களை கவிகுமரன் எழுதி உள்ளார். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான ஆனைமலை, ஆனைக்கட்டி, தளிக்குள்ளம் பீச் போன்ற இடங்களில் படமாக்கி உள்ளேன்.
ரித்திக் சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை புரூஸ்லி ராஜேஷ் அமைத்திருக்கிறார். வித்தியாசமான நடன காட்சிகளை விஜய ரக்ஷித் அமைத்துள்ளார்.
பரபரப்பான இந்தப் படத்திற்கு ஆத்மஜன் திரைக்கதை எழுதி இருக்கிறார். சின்னதாக சொன்னாலும் பஞ்ச் வைத்த மாதிரி வசனங்களை தீட்டி உள்ளார் வசனகர்த்தா ஜே.ரமல் பிரபு என்கிறார்.
தயாரிப்பாளர் குருவண்ண பஷீர் கூறுகையில், யார் தப்பு செய்தாலும், அவர்களுக்கு இந்த பூமியிலேயே தண்டனை கிடைச்சிடும் என்பது தான் இந்தப் படத்தோட கருத்து.
இப்போது கிடைத்திருக்கிற இளமை வாழ்க்கையை சரியாக நடத்த வேண்டும். எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. பல பேர் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை. யாருக்கு என்ன நடந்தா என்ன என்று நினைக்கிற மனநிலை இந்த தலைமுறை இளைஞர்களிடம் இருக்கு.
விளையாட்டு தனமா செய்ற சம்பவம் இன்னொருத்தருக்கு வலியா வேதனையா இருக்கும். அது மாதிரி எல்லாம் இருக்க கூடாது. இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக தாங்கள் செய்த ஒரு சிறு தவறையாவது உணர்வார்கள்.
தீங்கு செய்யமால் இருக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவற்றை நினைத்து சிலர் திருத்திக்க ஒரு வாய்ப்பாகவும் ஒரு உணர்வை ஏற்படுத்தும் படமாக இந்தப் படம் இருக்கும். செய்த தவறை நினைத்து ஒரு ஆள் வருத்தப்பட்டால் கூட எங்களுக்கு பெரிய திருப்தி தான் என்று தெரிவித்துள்ளார்.