29.08.2012.BY.rajah.சங்கானையில் 60 மில்லியன் ரூபா செலவில் நவீன சந்தைக் கடைக் கட்டடத் தொகுதி "புறநெகும' திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட செயலாளரும் "புறநெகும' தேசிய இணைப்பாளருமான வியானி குணதிலக இதற்கான விசேட அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதி மொழி அளித்துள்ளார்.
இவ்வாறு வலி.மேற்கு பிரதேச சபை தொழில் நுட்பக் குழுத் தலைவரும் உறுப்பினருமான த.நடனேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
வலி. மேற்கில் கட்டம்டிடிடி "புறநெகும' திட்டத்தின் கீழ் 60 மில்லியன் ரூபா செலவில் சங்கானையில் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதற்கான மக்களின் முன்னுரிமைத் தெரிவு, சபைத் தீர்மானம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம் என்பன அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
எனினும் இதற்கான மாவட்ட மட்ட தீர்மானமும் மாகாண மட்ட தீர்மானமும் இழுபறியில் உள்ளன. ஆயினும் தேசிய "புறநெகும' இணைப்பாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வின் அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரி விசேட கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன் என்றார்