29.08.2012.BY.rajah. |
கரீபியன்
கடலில் ஏற்பட்ட இசாக் புயல் அமெரிக்காவில் கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தில்
மையம் கொண்டுள்ளது.
இதனால் அங்குள்ள நியூ ஒன்லியன்ஸ் நகரம் கடும் பாதிப்புக்குள்ளாகி
இருக்கிறது. தற்போது அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். எனவே அமெரிக்காவின் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் ஜனாதிபதி ஒபாமா அவசர நிலையை பிறப்பித்துள்ளார். இது குறித்து ஒபாமா, புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது. வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும். எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்றும் அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு லூசியானாவை தாக்கிய கத்ரீனா புயலுக்கு 1,800 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நகரை மீண்டும் புயல் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் கெய்தி மற்றும் டொமினிகள் குடியரசு நாடுகளில் இப்புயலுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர். |
புதன், 29 ஆகஸ்ட், 2012
அமெரிக்காவில் புயல் எச்சரிக்கை: 4 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம்
புதன், ஆகஸ்ட் 29, 2012
புகைப்படங்கள்