| பாட்டை சத்தமாக வைத்து
கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் நகரில் ஷாப்பிங் செய்ய மைக்கேல்
டன்(வயது 45) என்ற தொழிலதிபர் தன் மனைவியுடன் வந்திருந்தார். அப்போது அதிகளவு சத்தம் போட்டு கொண்டு கறுப்பின வாலிபர்கள் சிலர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். உடனே சத்தத்தை குறைக்கும் படி கூறினார், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். கோபமடைந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியை எடுக்கவே, இதை பார்த்த டன் துப்பாக்கியை பிடுங்கி சரமாரியாக வாலிபரை நோக்கி 10 முறை சுட்டார். இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவத்துக்கு பிறகு டன் அங்கிருந்து தப்பி சென்றார். ஆனால் கண்காணிப்பு கமெரா மூலம் அவரை பொலிசார் பிடித்தனர். இறந்த வாலிபர் டேவிஸ் என்பதும், கைது செய்யப்பட்ட டன் வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 28 நவம்பர், 2012
பாட்டு கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொலை??
பொருளாதாரம் திடீரென சரிவடையலாம்: OECD நிறுவனம் எச்சரிக்கை
| கனடாவின் பொருளாதாரம்
வளர்ச்சி நிலையில் உள்ள போதிலும், சில பின்னடைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக OECD
என்ற சர்வதேச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECD சர்வதேச அளவிலான
பொருளாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கனடாவுக்கு அதிர்ச்சியூட்டும் பொருளாதார தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டில் இருந்தும் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலும் பொருளாதார வளர்ச்சியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதத்தில் கனடாவின் பொருளாதாரம் 15 சதவிகிதம் வளர்ச்சி பெறும். இது 2013ஆம் ஆண்டில் 1.8 சதவிகிதமாகவும், 2014ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.4 சதவிகிதமாகவும் மாறலாம் என்றும் OECDயும், கனடா மத்திய வங்கியும் கருதுகின்றன. இருப்பினும் OECD அமைப்பு, சர்வதேச நாடுகளோடு ஒப்பிடுகையில் கனடாவின் வளர்ச்சி விகிதம் 34 நாடுகளை விட கூடுதலாகவே உள்ளதாக தெரிவித்தது. இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பின்பு உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் சரிவு நிலை தோன்றும் என்றும் எச்சரித்துள்ளது |
வடகொரியாவின் இளம் தலைவர் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர்: ?
| உருண்டை முகத்துடன்
இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங் தான் உலகிலேயே செக்ஸியான மனிதர்
என்று சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் தான் இந்த ஆண்டின் செக்ஸியான மனிதர் என
அமெரிக்காவின் “The Onion" அறிவித்துள்ளதாக சீனாவை சேர்ந்த நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது. மேலும், இளமையானவர், அழகானவர், உருண்டை முகம் கொண்டவர், துடிப்பானவர், உறுதியானவர்.. என எல்லா பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக கிம் ஜாங் விளங்குகிறார் என்று கமென்ட்டும் அடித்திருக்கிறது. தனது இணையதளத்தில் 55 பக்கங்களுக்கு கிம் ஜாங்கின் விதவிதமான படங்களையும் வெளியிட்டிருக்கிறது. உண்மையாகவே கிம் ஜாங்குக்கு இப்படியொரு பட்டத்தை The Onion மீடியா நிறுவனம் வழங்கியதா என்பது பற்றி தகவல் இல்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு நடத்தும் பத்திரிகையில் இதுபோன்ற செய்திகள் வருவது இது முதல்முறை அல்ல. அமெரிக்க நாடாளுமன்றத்தை வாஷிங்டனில் இருந்து இடம் மாற்றப் போகிறார்கள், வேறு இடம் பார்த்து வருகிறார்கள் என்று சீன அரசு நடத்தும் பீஜிங் ஈவ்னிங் நியூஸ் இதழில் 2002ம் ஆண்டு பரபரப்பான பொய் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது |
இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின
| இந்தோனேஷியாவின் கிழக்கு
கடற்கரையோரப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலுக்கடியில் 56 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம்
ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின, சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. டுவால் நகரில் இருந்து 157 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கடியில் 12 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், 6.3 ரிக்டர் அளவில் உருவாகும் என்றும் இந்தோனேசிய ஆய்வு மையம் முதற்கட்ட தகவலை வெளியிட்டிருந்தது. இருப்பினும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியா அறிவித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர் |
கார்த்திகை விளக்கீட்டை அனுஷ்டிப்பதற்கு இந்துக்களுக்கு தடை!
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27ம் திகதியன்றே இம்முறை குமாராலய தீபமும் வருவதால்தான் இந்த தலையீட்டையும் தடைகளையும் இந்துக்கள் எதிர்நோக்குவதாக அவர் கூறுகின்றார்.குமாராலய தீப நாளிலும் அதனை அடுத்த சர்வாலய தீப நாளிலும் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுதல் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடு செய்தல் வழக்கம்.
இம்முறை அவற்றைத் தடுக்கும் வகையில் இராணுவத்தினராலும் காவல் துறையினராலும் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து தனது கவனத்திறகு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி காவல் துறை துணை மா அதிபர் ஆகியோரை சந்தித்து நேரில் முறைப்பாடு செய்ய திங்கட்கிழமை சென்றிருந்த போதிலும சந்திக்க முடியாத நிலையில் எழுத்து மூலம் அவர்களின் கவனத்திற்குதான் தெரியபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளுக்கு தடை என்று பாதுகாப்பு தரப்பினர் அறிவித்திருந்தனர்.
செவ்வாய், 27 நவம்பர், 2012
ஜேர்மனியில் ஊனமுற்றோர் தொழிற்சாலையில் தீ விபத்து: 14 பேர் பலி (வீடியோ இணைப்பு)
| ஜேர்மனியில் ஊனமுற்றோர்
தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஜேர்மனியின் பிளாக் பாரஸ்ட் என்னுமிடத்தில் உள்ள டிடிசீ நியூஸ்டட்டில்
ஊனமுற்றோருக்கான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 120 ஊனமுற்றோர்கள் மர மற்றும் இரும்பு சம்பந்தமான வேலைகள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த மீட்பு படையினர், அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை. |
பெண் வீராங்கனைகள் மீது பாலியல் தாக்குதல்: அவுஸ்திரேலிய
| அவுஸ்திரேலிய இராணுவத்தில்
இளம் இராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகள் மீது பாலியல் அத்துமீறல்கள்
நிகழ்த்தப்பட்டதற்கு அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அரசின் சார்பில்
பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில், இராணுவத்தில் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் சக இராணுவத்தினரால் பாலியல் ரீதியாகவோ அல்லது உடல் மற்றும் மன ரீதியாகவோ துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தால் அதற்காக அரசு சார்பில் வருத்தம் தெரிவிக்கின்றேன் என்றார். மேலும் இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகளை உயரதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததை ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு தலா 52 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லென் ராபர்ட் ஸ்மித் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட உள்ளது. இத்தகவலை தி ஆஸ்திரேலியன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது |
திங்கள், 26 நவம்பர், 2012
இங்கிலாந்தில் கனமழை: 800க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த கனமழையால் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன, மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் டேவிட் கமரூன் டுவிட்டரில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்
{புகைப்படங்கள்},
இருமல் மருந்து குடித்த 12 பேர் பலி: பாகிஸ்தானில்
| கலப்பட இருமல் மருந்து குடித்த
12 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் லாகூர் அருகே ஷதாரா நகரம் உள்ளது. இங்குள்ள கடைகளில் இருமல்
மருந்து 25 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த சிலர் போதைக்காக இருமல் மருந்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று ஒரு கடையில் 20 பேர் இருமல் மருந்தை வாங்கி உட்கொண்டனர். இந்த மருந்தை குடித்த சில நிமிடங்களில் நான்கு பேர் இறந்து விட்டனர். மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர். மேலும் ஏழு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலப்பட இருமல் மருந்தை உட்கொண்டதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது. |
தோல்வியில் முடிவதற்கு காரணம் காதலர்கள் தான் !
காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும், ஆணும், மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து தலித்துகளுக்கு எதிராக அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை.ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த ராமதாஸ், பெண்களுக்கு திருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இதன் மூலம், கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளையும், சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்பு இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிற காரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்
ஆயினும், தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்டதற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில், தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு சமுதாயம் தந்துள்ள நிலையில், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு மறுப்பது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லை என்றார் பழமலய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



























