siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 3 ஜனவரி, 2013

திடீர் தீவிபத்து. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்



கனடாவில் Central York பகுதியில் புதிதாக கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக ஜனவரி 2அம் தேதி அதிகாலையில் திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீயை மிகுந்த சிரமத்துடன் அணைத்தனர். வீட்டினுள் கட்டிடவேலைகளுக்கு உதவும் கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால், முதலில் அவற்றை பாதுகாப்புடன் வெளியேற்றிய தீயணைப்பு துறையினர் தீ, அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்க முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Central York தீயணைப்பு துறையின் உயரதிகாரி Ian Laing செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில், தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்களும், 50 வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் வீடு முற்றிலும் தீயால் சேதமடைந்துவிட்டது என்று கூறினார்

வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குளிர்

தலைநகர் டெல்லியில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அதிகபட்சமாக 9 புள்ளி 8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருவதாகவும் இன்னும் 7 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் வட மேற்காக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குளிர் காற்று வீசி வருவதே அடர்த்தியான பனிப்பொழிவு நிலவ காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனினும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி வட மாநிலங்கள் பலவற்றில் நிலவும் கடும் குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக குளிர் வாட்டுகிறது. இதனால், பொதுமக்கள் தெருக்களில் தீ மூட்டி குளிரைபோக்கி வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக, வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பல மணி நேர தாமதத்துடனேயே செல்கின்றன.
இதனால், ரயில் நிலையங்களில் பயணிகள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.
நாள்தோறும் பிற்பகலுக்கு பின்னரே, பனிமூட்டம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வேலை பார்ப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜேர்மனியில் வேலைபார்ப்போர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக புள்ளியியல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியது. கடந்த வருடம் 41.5 மில்லியன் பேர் வேலை பார்த்து வந்த நிலையில் 416,000 பேருக்கு இந்த ஆண்டு புதிதாக வேலை கிடைத்திருக்கிறது.
அதாவது, இந்த ஆண்டு 1 சதவீதம் பேருக்குக் கூடுதலாக வேலை கிடைத்திருக்கிறது.
யூரோ மண்டலக்கடன் நெருக்கடி காரணமாக வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டு உழைப்பாளர் சந்தையும் பல்வேறு சிரமங்களை சந்திக்கும்போது வேலைபார்ப்போரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த வருடம் 2.34 மில்லியன் பேர் வேலை இல்லாமல் இருந்தனர்.
இந்த ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை 162,000 ஆகக் குறைந்துவிட்டது, என்று புள்ளியியல் துறை தகவலறிக்கை தெரிவிக்கின்றது

மூன்று தமிழ்ப் பெண்கள் மீது காடையர் கூட்டமொன்று பாலியல்!


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று தமிழ்ப் பெண்கள் மீது காமவெறி பிடித்த காடையர் கூட்டமொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருக்கோவில் மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த இந்த மூன்று பெண்களும் வட்டமடு பிரதேசத்தில் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நான்கு காடையர்கள் அவர்களைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.
இதன்போது அந்தக் காமுகக் கயவர்களுடன் போராடிக் கொண்டிருந்த அந்த மூன்று பெண்களும் கூக்குரலிடவே பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததனைக் கண்ணுற்ற நான்கு காமுகர்களும் தலைமறைவாகி விட்டனர்.
இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட மூன்று பெண்களும் தப்பியோடி நகருக்குள் வந்துள்ளனர்.
இருப்பினும் கயவர்களுடன் அவர்கள் போராடியதால் காயமுற்ற நிலையில் முதலில் திருக்கோவில் வைத்தியசாலையில் மூவரும் அனுமதிக்கப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

ஐ.நாவின் தலைமை பதவியை ஏற்றது பாகிஸ்தான்

ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபையில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளனர். இவைகள் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே அப்பதவியில் இருக்கும்.
இந்நிலையில் ஐ.நா சபையின் தலைமை பதவி சுழற்சி முறையில் உறுப்பினர் நாடுகளுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் ஜனவரி மாதத்துக்கான தலைமை பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மசூத் கான் கூறுகையில், தலைமைப் பதவியில் திறம்பட செயல்படுவோம்.
முக்கிய பிரச்னைகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி எடுப்போம்.
பயங்கரவாதம் தொடர்பாக சிறப்பு விவாதக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். விரிவான நடவடிக்கை, பேச்சுவார்த்தை, மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் மூலம்தான் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

புதன், 2 ஜனவரி, 2013

புத்தாண்டில் நிகழ்ந்த சந்தோஷமும், துக்கமும்


டொரண்டோ நகரில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது, இதனை அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். டொரண்டோ நகரில் உள்ள Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது.
இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர்.
இந்த சந்தோஷத்திற்கு மத்தியில் சோகமான நிகழ்வும் நடந்துள்ளது. அதாவது, மது அருந்தி விட்டு வந்த இருவர் தெருவில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்டனர்
அப்போது ஒருவர், மற்றவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உடனே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நபரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இதுவே புத்தாண்டில் நிகழ்ந்த முதல் கொலையாக கருதப்படுகிறது[புகைப்படங்கள், ]
 .
 

புத்தாண்டு கொண்புகைப்படங்கள்,டாட்டத்தில் போதையில்


நடுரோட்டில்விழுந்தகிடந்தஇளம்பெண்கள்இங்கிலாந்தில் புதுவருட கொண்டாட்டத்தின் போது ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் குடிபோதையில் நடுரோட்டில் போதை தெளியாமல், சுயநினைவு இன்றி விழுந்து கிடந்ததாக காவல்துறை உயரதிகாரி Superintendent James Tozer என்பவர் வருத்தத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வன்முறை எதுவும் நிகழாவண்ணம் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டது.



 

புதுவருடம் பிறந்தவுடன் நள்ளிரவு 12 மணிமுதல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் துவங்கியவுடன், இளம் ஆண்களும் பெண்களும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை குடிக்கத் தொடங்கினர். மதுபோதையில் அறைகுறை ஆடையுடன் நடு ரோட்டில் அவர்கள் செய்த அட்டகாசத்தை பொறுக்க முடியாத போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பொறுமையுடன் ஈடுபட்டனர்.



புத்தாண்டு தினம் என்பதால் அவர்களை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு, வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவரவர் வீடுபோய் சேர இங்கிலாந்து போலீஸார் உதவி செய்தது மிகவும் போற்றுதலுக்குரியது என அந்த அதிகாரி தன்னுடைய டுவிட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

2013ஆம் ஆண்டின் முதல் குழந்தைக்கு பரிசுகளும் வாழ்த்துகளும்



டொரண்டோ நகரில் மிகச்சரியாக 2013 புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 பிறந்த குழந்தையை இந்த ஆண்டின் முதல் குழந்தையாக டொரண்டோ நகர மக்கள் போற்றுகின்றனர்.

டொன்ரடோ நகரில் உள்ள St. Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர்.

இதேபோல Mississauga நகரத்தில் Credit Valley மருத்துவமனையில் 12.07க்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை அந்த நகரத்தின் முதல் குழந்தையாக கருதுகின்றனர். இந்த குழந்தையின் எடை ஆறு பவுண்டுகளும், 11 அவுன்ஸ்களும் ஆகும்.
இந்த இரண்டு குழந்தைகளுக்கும் அந்தந்த நகரத்தின் மக்கள் சார்பில் பரிசுகளும், வாழ்த்துக்களும் குவிந்து கொண்டு இருக்கிறது
 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2013

   அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் இணையவித்தகர் ஆசிரியர் விமலுக்கும் எமது நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.1-1-2013.ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.  
                                                   வாழ்க என்றும் நலமுடன் ,,,,,,,,,,{காணொளி,}

74 வயது இங்கிலாந்து தந்தைக்கு ஏழாவது குழந்தை

.           
 
(6வது மகன் Paul உடன் 72 வயது மைக் அமிடேஜ் ஜோடி){புகைப்படங்கள்,}
இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(2007 ஆம் ஆண்டு திருமணத்தின் போது 3வது மனைவி லிண்ட்சேவுடன் மைக் அமிடேஜ்)
32 வயது இளம் மனைவி பெற்றெடுத்தார்.அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தனக்கு 7வது குழந்தை பிறக்கப் போவதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார் அமிடேஜ்.
இந்த வயதில் தந்தையாகப் போகிறோமே என்று அமிடேஜ் வெட்கமெல்லாம் படவில்லை. மாறாக படா குஷியாக காணப்படுகிறார். இன்னும் பல குழந்தைகளை லின்ட்சே மூலம் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கண் சிமிட்டிப் புன்னகையுடன் கூறுகிறார். பலர் என்னிடம் இந்த வயதில் ஏன் இப்படி என்று கேட்கிறார்கள். அவர்களது கேள்வியே தவறு. நான் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் இப்போது இளமையாக உணர்கிறேன் என்றார் அமிடேஜ்.
இவர் சுர்ரேயைச் சேர்ந்தவர் 1961ம் ஆண்டு முதல் முறையாக இவர் தந்தையானார். இவரது மூத்த மகன் கிளன் அப்போதுதான் பிறந்தார். அப்போது அமிடேஜுக்கு 21 வயதுதான். அப்பெல்லாம் பிள்ளை பெத்துக்கிறது ரொம்பக் கஷ்டமானதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே எனது மனைவி லின்ட்சே மூலம் நிறைய குழந்தைகளுக்கு பிளான் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறுகிறார் அமிடேஜ்