siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 29 மார்ச், 2017

நூறு கிலோ எடையுள்ள தங்க நாணயம் ஜெர்மனி அருங்காட்சியகத்தில் கொள்ளை!!


ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என 
மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளை போன நாணயம் கனடா அரசால் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ‘பெரிய பனை ஓலை’ 
என பெயரிடப்பட்டிருந்தது.
அதில் ராணி 2-வது எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. சுத்த தங்கத்தால் இது உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
53 சென்டி மீட்டர் நீளமும், 3 சென்டி மீட்டர் பருமனும் கொண்டது. இது ‘புல்லட் புரூப்’ கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக 
வைக்கப்பட்டிருந்தது.
அருங்காட்சியகத்தின் ஜன்னலை உடைத்து ஏணி மூலம் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த தங்க நாணயத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தில் உலக நாடுகளின் நாணயங்கள் சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வகை நாணயங்கள் உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 28 மார்ச், 2017

மனிதக் கழிவு கொக்கா-கோலாவில் விஷத்தன்மை?

அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள் இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
லிஸ்பர்ன் நகரில் உள்ள கொக்கா-கோலா ஆலையில் கடந்த வாரம் ஒரு நாள் இரவுப் பணியின்போது, டின்களை நிரப்பும் இயந்திரங்கள் அடைத்துக்கொண்டதாகவும், அதைப் பரிசோதித்ததில் மனிதக் கழிவுகளை ஒத்த ஒரு திரவம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், குழாய்களில் அசுத்தம் காணப்பட்டது உண்மைதான் என்றபோதும், அதனைக் கொண்டு நிரப்பப்பட்ட டின் தொகுதிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன என்றம் கொக்கா-கோலா நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும், அன்றைய தினம் வினியோகிக்கப்பட்ட டின்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்க அனுப்பப்பட்டுள்ளன.
இது மிக மிக அரிதாக நடக்கும் ஒரு தற்செயல் நிகழ்வு என்றும், அசுத்தமான கொக்கா-கோலா டின்கள் வினியோகத்துக்கு விடப்படவில்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொக்கா-கோலா நிறுவனத்தின் பானங்களில் குறித்த வகை நஞ்சூட்டப்பட்டிருப்பதை நைஜீரிய நீதிமன்றம் ஒன்று 
உறுதி செய்துள்ளது.
நைஜீரியாவில், கொக்கா-கோலா மற்றும் அதன் சகோதர உற்பத்திகளான ஃபென்ட்டா, ஸ்ப்ரைட் என்பனவற்றை அருந்துபவர்களின் பற்கள் விரைவாகப் பழுதாகிவருவதாகப் புகாரளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளில், ஒன்றுக்கொன்று ஒவ்வாத அமிலங்கள் சில இந்தத் தயாரிப்புக்களில் சேர்க்கப்படுவதாகவும், அப்படிச் சேர்க்கப்படுவதால் அவை நச்சுத்தன்மை கொண்டவையாக மாறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நைஜீரிய உணவுப் பாதுகாப்பு அமைப்புக்கு சுமார் ஆறாயிரத்து ஐநூறு அமெரிக்க டொலர்களை அபராதமாகச் செலுத்தும்படி கொக்கா-கோலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவ்வமைப்பின் பரிசோதனைகளின் பின் அவை தரமானவையாக அறிவிக்கப்படும் வரை உற்பத்தியை இடைநிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


போதை பொருளுடன் கடலிற்குள் கனடிய கப்பல்கள்!

கனடிய கப்பல்கள் சர்வதேச நீர்ப்பரப்பில் ஒரு பாரிய கொக்கெயின் கடத்தலில் 26 நாட்கள் காலப்பகுதியில் ஈடுபட்டிருந்ததாக யு.எஸ்.கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
14.51 மெட்ரிக் தொன்கள் எடையுள்ள இந்த சம்பவம் குறித்து விவாதிக்க நிறுவனம் ஒரு செய்தி மகாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இப்போதை பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு 420மில்லியன் யு.எஸ்.டொலர்களாகும்.
கனடிய கப்பல்கள் கடலோர காவற்படை சட்ட அமுலாக்க பற்றற்ற அணியினருடன் பயணித்து கொண்டிருக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தனித்தனியாக 17 சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் அதிகார பூர்வமாக
 தடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 27 பிப்ரவரி, 2017

இலங்கை பெண் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தபட உள்ளார்!

பிரித்தானியாவில் 8 வருடங்களாக வாழ்ந்த ஈழப் பெண் சிரோமினி சற்குணராஜா நாடு கடத்தப்படவுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாளை மறுதினம் அவர் நாடு கடத்தப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஈழப் பெண் இந்த வருடம் தன் மின் பொறியியல் பட்டப் படிப்பினை நிறைவு செய்யவுள்ளார்.
2009 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினி அவரது தந்தையின் மாணவர் விசாவை வைத்தே தங்கியுள்ளார். இருப்பினும் குறித்த யுவதியின் தந்தை 2011 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
பின்னர் சிரோமினியின் இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையில் அவரது தாயாரையும் அவரும் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 21ம் திகதி அந்த பெண்ணின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது
எனவே, விண்ணப்பம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு உள்துறை செயலாளர் ஒருவருக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 28 ஆம் திகதி நாடு கடத்துவதற்கு எதிராக தனக்கு ஆதரவு அளிக்குமாறு குறித்த பெண் வேண்டுகோள் 
விடுத்துள்ளார்.
அவரது நாடு கடத்தலை நிறுத்துமாறு அங்குள்ள 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தனது மகளின் பட்டப்படிப்பு இடையிலேயே நின்று விடுமோ என சிரோமினியின் தாய் கவலை 
வெளியிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>


திங்கள், 20 பிப்ரவரி, 2017

இல்லாத அளவிற்கு சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் அதிகரித்துள்ளது!

சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவு இப்போது அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
2012 முதல் 2016 வரையான காலப்பகுதியிலான 
முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியானது இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் 
அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் என்ற சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒட்டு மொத்த ஆயுத கொள்முதலில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாடுகளும், வளைகுடா நாடுகளும் செய்துள்ளதாகவும் உலகிலேயே இந்தியாவுக்கு அடுத்ததாக ஆயுதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக சௌதி அரேபியா மாறியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுத விற்பனையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகளும் 75 சதவீத ஆயுத ஏற்றுமதியை வழங்கியிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்உத்தரவால்இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய குடிவரவு கட்டுப்பாட்டினால், இலங்கையை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள, ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 71 பேர், தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் 
பகிர்ந்துள்ளன.
மேலும் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுள், அதிகமானவர்கள் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட நாடுகளில்  இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், பிரான்ஸ்,சுவிஸர்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவதாக குறித்த தகவல்
 தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும், குறிப்பிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு தடை ஏற்படுத்தும் வகையிலான உத்தரவை டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். குறித்த உத்தரவிற்கு உலகளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இலங்கையர்களும், அமெரிக்க குடிவரவு திணைக்களத்தினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 27 ஜனவரி, 2017

அடுத்த மாதம் உலகில் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும்:வானியலாளர் எச்சரிக்கை!

ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அடுத்த மாதம் பூமியை ஒரு மர்ம பொருள் தாக்கவுள்ளதால் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நாசா ஒரு விசித்திரமான பொருளை சுற்று வட்டப்பாதையில் கண்டுள்ளது. அதன் பெயர் WF9 என்று 
கூறியிருந்தது.
இது ஒரு விண்கல் அல்லது சிறுகோளாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாசா அண்மையில் பூமியை நோக்கி ஒரு மர்மமான பொருள் வருவதாகவும், அதனால் பூமிக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்றும் பூமிக்கு 51 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவிலே அது கடந்து சென்றுவிடும் என
 தெரிவித்திருந்தது.
இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி நிகழும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் டாக்டர்.Dyomin Damir Zakharovich ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், WF9 என்ற அந்த மர்ம பொருள் தன்னுடைய கூற்றுப்படி அதே மாதம் 16 ஆம் திகதியே பூமியை வந்து தாக்கும்.
இதனால் பூமியின் பல பகுதிகளில் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும். நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்று அதிர்ச்சிகர தகவல் ஒன்றை 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 22 ஜனவரி, 2017

சென்று வாருங்கள் ஒபாமா!

அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்குத் தொடக்கமாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது.
எழுத்தாளர் நடைன் கார்டிமர் கொல்கத்தா வில் 2008 நவம்பரில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். „பாதி கறுப்பர்தான் ஒபாமா“ என்றார் அவர். நோபல் பரிசு பெற்ற அந்த எழுத்தாளர் மேலும் ஒரு வரி சொன்னார். „அவர் பாதி வெள்ளையரும்கூட“. ஒபாமா ஒரு கறுப்பர் என்று கொண்டாடப்படுகிறார். அவரது கணிப்பு எளிமையானது. ஆழமானது. சின்னதாக நாம் நினைக்கும் உலகின் பாதி அவர். ஒருவர் பெரிதாகச் சிந்திக்கும் உலகின் பாதியும் அவர்தான். ஒபாமா முன்னேறினார். ஒரு அர்த்தத்தில் அவரே முன்னேற்றமாக இருந்தார். அவர் முன்னேறியபோது அவரோடு முன்னேறிய அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல. அரசியல்ரீதியாகப் பரிணமிக்கும் உலகத்துக்கே அவர் முன்னேற்றமாக இருந்தார்.
சங்கடப்படுத்தாத மாற்றம்
ஒபாமா தனது பணிகளைத் தொடங்கிய உடனே எல்லாம் ஆரம்பமாகிவிட்டன. அவரைப் பலவீனப்படுத்த, அத்துமீறித் துளைத்தெடுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. அற்பத்தனமான, வலிதரும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. அவர் பற்றிய எல்லாம் ஆர்வத்தோடு கண்காணிக்கப்பட்டன. என்ன உடுத்துவார், என்ன சாப்பிடுவார், என்ன குடிப்பார், என்ன விளையாடுவார், அவரைப் பற்றி அவரது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவரது வாழ்வைத் தோண்டிப் பார்க்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவரைச் சேதப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் அவரது குடும்பத்துக்குள்ளும் கைவரிசை காட்டினார்கள்.
அவர் வெள்ளை அமெரிக்காவை மறுத்து விடாமல், தனது ஆழமான, கறுப்பு வேர்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியவர் ஆனார். அவர் எதையும் ரொம்ப சங்கடப்படுத்தி விடாமல் மாற்ற நினைத்தார். மிகவும் பிடித்த மான விவகாரங்களை அவர் மாற்ற நினைத்தார். ஆனால், அதேபோல மிகவும் பிடித்தமான விவகாரங்களைச் சங்கடப்படுத்திவிடாமல் மாற்ற நினைத்தார். புதிய வடிவங்களை உருவாக்காமல் அவரால் ஒரு புதிய பார்வை யைச் செதுக்க முடியுமா? அவர் முயற்சி செய்ய விரும்பினார். உண்மையாகவே முயன்றார்
ட்ரம்ப் வெற்றிக்கான வேர்
வெள்ளை அமெரிக்கர்கள் சகிப்புத்தன்மை யோடு அனைவரையும் வரவேற்க வேண்டும் என்ற வெளிப்படையான பேரார்வத்தை அவர் வெளிப்படுத்தினார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அவர் படிக்கும்போது அதன் சட்டப் பள்ளியில் வெளியாகும் ‚ஹார்வர்டு லா ரெவ்யூ‘ இதழின் முதல் கறுப்பின ஆசிரியராக அவர் மாறியபோதே அத்தகைய நடத்தை அவரிடம் வெளிப்பட்டது. அமெரிக்க நலன்களைப்
 பாதுகாக்கும் அதிபர் என்ற முறையில், அவர் வெளியுறவுக் கொள்கையில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். அதனால், பேரழிவுகள் நடந்தன. குறிப்பாக, சிரியாவில் அவர் தன் கொள்கையைச் சமரசம் செய்துவிட்டார். அதன் விளைவை இன்னும் சிரியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. லிபியா விவகாரத்தில் அவரும் சேர்ந்துகொண்டதைச் சொல்லலாம்.
கழுவ முடியாத கறை
இரண்டு எதிர்மறையான விஷயங்கள் ஒபாமா விடம் இருக்கின்றன. ஒன்று, அவர் நோபல் பரிசை ஏற்றுக்கொண்டது. அது முதல் பிறந்த நாளுக்கான பரிசை எட்டே மாதக் குழந்தைக்கு வழங்கியதைப் போல இருந்தது. ஒபாமா அதை மறுத்திருந்தால் அவர் உலகம் முழுவதற்கும் புத்துணர்வு ஊட்டியிருப்பார்.
இரண்டாவதாக, அவர் பொதுமக்களை அதிகமாகக் கொல்லக்கூடிய ஆள் இல்லாத விமானங்கள் போன்ற ட்ரோன் போர்க் கருவி களைப் பயன்படுத்த அனுமதித்தார். அவரால் அந்தக் கறையை எதைக் கொண்டும் கழுவ முடியாது. ஒசாமா பின்லேடனின் கதையை முடித்தது வேறுபட்ட அனுபவம். அது பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணத்தை அளித்த தருணம்தான்.
முயற்சியால் கிடைத்த உயர்இடம்
ஒபாமாவிடம் உள்ள நல்லவை, அவரது சமரசங்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், தவறான முடிவுகளால் ஏற்பட்ட அதிர்ச்சிகள், எல்லாவற்றையும் மொத்தமாகக் கணித்தால், பெரும் முயற்சியால் உயர்ந்த இடத்துக்குப் போனவராக உலகம் அவரைப் பார்க்கும். பல விஷயங்களை முதல்தடவையாகச் செய்தவர் என்ற இடத்தை விதி அவருக்குத் தந்துள்ளது.
2015 ஜூன் மாதத்தில் இம்மானுவேல் மெத டிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் அவர் பேசியதுதான் அவர் பேசியவற்றிலேயே மனத்தைத் தொட்ட உரை. அந்தத் தாக்குதலை நடத்திய 21 வயது இளைஞர் டைலான் கைது செய்யப்பட்டிருந்தார்
. தனது பேச்சை „தேவ மாதா“ என்று தொடங் கினார் ஒபாமா. „உண்மையில், இது தேவாலயத் துக்கும் மேலான இடம்
. சுதந்திரத்தைத் தேடிய ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் நிறுவிய வழிபாட்டுத்தலம் இது. அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக உழைத்தவர்களால் கட்டப்பட்ட தால் இது எரித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. கறுப்பின மக்கள் தேவாலயங்கள் கட்டி வழிபடுவதைச் சட்டங்கள்
 தடைசெய்த காலம் அது. அவர்கள் தேவாலய வழிபாடுகளை ரகசியமாகச் செய்தனர். வன்முறை இல்லாத இயக்கம்தான் உயர்ந்த லட்சியங்களை நோக்கி நாட்டைக் கொண்டுசென்றது. நமது உயர்வான தலைவர்கள் இந்தத் தேவாலயத்திலிருந்துதான் நீண்ட நடைப் பயணங்களைத் தொடங்கி னார்கள்“ என்றார் அவர்.
திருப்பியடித்தலும் மரபும்
„கறுப்பின மக்களின் தேவாலயங்கள் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல. இனங்கள், நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ள வெறுப்பு நமது ஜனநாயகத்துக்கும் லட்சியங்களுக்கும் ஆபத்தாக இருக்கிறது. ஆனாலும், அனைத்து இனங்களிலிருந்தும், அனைத்து நம்பிக்கைகளிலிருந்தும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலிருந்தும் ஒற்றுமையும் அன்பும் பீறிட்டுக் கிளம்பும் என்று நான் நம்புகிறேன். கசப்பையும் வெறுப்பையும் அது முறியடிக்கும்“ என்றார் அவர்.
ஒபாமா ஒரு தவறு செய்தார். பிளவுகளை இணைப்பதற்கு முயல்கிறபோது, அவருக்குப் புலப்படாமல் இருந்த வெள்ளையர் இனத் தொழிலாளர்களுக்கு அது பிடித்தமானதாக இல்லை என்பதை அறிந்துகொள்ளத் தவறிவிட்டார். அமெரிக்க மக்களின் முன்னேற்றம், உலகமயம்
, தொழில்நுட்பப் புரட்சியில் அந்தத் தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டதை அவர் பார்க்கத் தவறினார். அதன் பயனைத்தான் அவர் அனுபவித்தார். அமெரிக்கா குடியரசுக் கட்சியைத் தேர்வு செய்தது. அது அதிபர் மாற்றம் மட்டுமல்ல. கருத்துகளின் மாற்றமும்தான். அவரது அதிபர் காலகட்டத்துக்கு எதிரான பின்விளைவு இனரீதியாக இருந்தது. ட்ரம்ப் தேர்வானார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் ஒரு முரண்நகை உண்டு. எழுத்தாளர் நடைன் கார்டிமர் கோட்பாடு என்று இதை அழைக்கலாம். அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்கான தொடக்க மாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். 
அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது. தலைகீழாகப் போகிற இந்த மாற்றம் அதிலிருந்து மீளுமா? தனது பாதையில் முன்னேறுமா?
ஏங்குகிறேன்
 ஒபாமா தொடங்கியுள்ள அவரது மரபு, ஒரு மெழுகுவத்தியின் ஒளிபோல இருளோடு போராடும். தனித்தன்மையோடு அது ஒளிரவே செய்யும். மனித இனத்தில் ஒரு அரசியல் ஆன்மிகவாதி அதிகாரத்தில் இருந்தார் என்று வருத்தத்தின் வலியோடு உலகம் 
நினைவுகூரும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 13 ஜனவரி, 2017

சவப்பெட்டி மூலம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பெண்

குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி மூலம் சுமார் 2500 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பெண்
போலந்து நாட்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் பொழுது யூதர்களுக்கும், நாசிகளுக்கும் பெரும் பகை ஏற்பட்டிருந்தது.
அபோது, பல யூதர்களையும், யூதக் குடும்பங்களையும் நாசியினர் கெட்டோ எனும் சிறிய பகுதியில் சிறை பிடித்து வைத்துள்ளனர்.
அந்த சிரை பகுதியானது, சிறியது என்பதால் அதிகளவு மக்கள் அடைத்து வைக்க அங்கு, நோய் தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், போலாந்தில் பிப்ரவரி 15, 1910-ல் பிறந்தவர் இரினா சென்ட்லர் என்பவர் சமூக சேவையில் மிகுந்த ஆர்வமுடையவர்.
இவர் மருத்துவத் துறையில் நர்ஸாக பணியாற்ரி வந்தார்.
மேலும், சமூக நல்வாழ்வு அமைப்பு மூலம் உணவு, உடைகள் அளித்து உதவி வந்தார்...
அப்போது, யூதர்களுக்கு உதவி செய்ய நினைத்த இரினா ங்கு தான் உயிரை பணயம் வைத்து தான் உதவி செய்ய வேண்டியுள்ளது என்பதை உணர்ந்து தனது உடன் உதவி செய்ய வந்தவர்களுடன் சேர்ந்து கெட்டோவில் இருந்து யூத குழந்தைகளை வெளியேற்ற ரகசியமாக உதவி செய்து வந்துள்ளார்.
குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை கெட்டோவில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருந்தது.
இருப்பினும், நாசியின் கண்காணிப்பு கெட்டோ பகுதியில் கடுமையாகவும், விரிவாகவும் இருந்த காரணத்தினால் வேறு ஏதாவது வழியில் உதவி செய்யலாம் என நினைத்த இரினாவிற்கு ஒரு யுக்தி தோன்றியது.
அதாவது, குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி போன்றவற்றில் அடைத்து மீட்க முயன்றார்.
இவ்வாறு, குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி மூலம் சுமார் 2500 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் இரினா.
இந்நிலையில், இரினா குழந்தைகளை காப்பாற்றிய விசயம் நாசி படையினர்ருக்கு தெரிய வரவே அவரை கைது செய்து சித்திரைவதை செய்து, கைகளை உடைத்து கொடுமைகள் செய்தனர்.
ஆனாலும், அந்த குழந்தைகள் பற்றி ஒரு தகவலும் கொடுக்காமல் அவர்களை காப்பாற்றினார் இரினா.
இதைத் தொடர்ந்து, நாசி படையில் ஒரு வீரருக்கு லஞ்சம் கொடுத்து இரினாவை சிறையில் இருந்த தப்பிய இரினா அன்றிலிருந்து கடைசி வரை இரினா போலியான அடையாளத்தில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், போரும் முடிவுக்கு வந்தது. குழந்தகளின் தகவல்களையும் அரசுக்கு கொடுத்து விட்ட பின் திருமணம் செய்துக் கொண்டு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார் இரினா.
இதையடுத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இரினா தனது 98வது வயதில் மரணம் அடைந்தார்.
மேலும், 1997-ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆனால், அந்த வருடத்திற்கான நோபர் பரிசு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 4 ஜனவரி, 2017

3.8 ரிக்டர் அளவில் இங்கிலாந்து யோக்ஷையர் கடற்பிராந்தியத்தில் நிலநடுக்கம்!

யோக்ஷையர் வடக்கு கடற்பிராந்தியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்காபுரோ வடக்கு கடற்பிராந்தியத்தின் கிழக்கு பகுதியிலிருந்து 100மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நிலநடுக்கத்தினால் கட்டமைப்பு சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடற்பிராந்தியத்தில் வருடம்தோறும் 3 முதல் 3.9 ரிக்டருக்கு இடைப்பட்ட நான்று நிலநடுக்கங்கள் உணரப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>