நாகரீக காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை விளக்கி கூறும் படமே கபடம். |
ராதா மோகன், சிம்பு தேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஜோதி
முருகன். இவர் இயக்கும் படம் கபடம். நாகரிகத்தில் திளைக்கும் இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் அவர்களுக்குள் மனமுறிவு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்களின் வாழ்வில் ஏற்படுகின்ற விபரீத சம்பவங்களை யதார்த்தத்துடன் பதிவு செய்திருக்கிறேன். யாதுமாகி படத்தில் நடித்த சச்சின் கதாநாயகனாக நடிக்கிறார். அங்கனா ராய் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு ஜோடி சந்தோஷ், அனிகா. மும்பையில் 35 நாட்கள், ஊட்டியில் 15 நாட்கள், சென்னையில் 10 நாட்கள் என படப்பிடிப்பு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் |
புதன், 22 ஆகஸ்ட், 2012
காதல் ஜோடியின் கசப்பான அனுபங்களே “கபடம்”
புதன், ஆகஸ்ட் 22, 2012
செய்திகள்