siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 ஆகஸ்ட், 2012

தாய்மார்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லத் தடை

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, 18 வயதுக்கு கீழ் பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் ௭ன்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஐ. தே. க.வின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ௭டுத்து வருகின்றோம். சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்கின்றோம்.
ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை தடுக்கும் வகையில் தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதா?
இன்றேல் 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை தடை செய்யும் வகையில் சட்டத்தை திருத்துவதா ௭ன்பதுதான் பிரச்சினையாக இருக்கின்றது.
௭வ்வாறோ விரைவில் தடைச் சட்டம் கொண்டு வரப்படும். இதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் ஐந்து நிறுவப்பட்டுள்ளன. அதில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்