26.08.2012.தமிழகம் நீலகிரியில் சிறிலங்காப் படையினருக்கு
இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் பயிற்சி அளித்து வருவதனைக் கண்டித்து போராட்டம்
நடத்தியோர் காவற்றறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி. என்ற இராணுவ பயிற்சி மையத்தில் சிறிலங்காப் படை அதிகாரிகள் இருவருக்கு கடந்த மூன்று மடாத காலமாகப் பயிற்சியளிக்கப்பட்டு வருவது குறித்து நேற்று தகவல் வெளியானது. அதனையடுத்து அவ்வாறு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை மாவட்டத் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ரெட்பீல்டில் உள்ள இராணுவ மையத்தை முற்றுகையிட கட்சியினர் திரண்டு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவற்றுறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கட்சி கொடிகளை ஏந்தி சிறிலங்காப் படையதிகாரிகள் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அதேபோன்று, கோவை மாநகர் மற்றும் கோவை மாவட்ட ம.தி.மு.க, சார்பில் அவினாசி சாலையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிலங்காப் படையதிகாரிகள் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட 60 பேர் காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தினால் கோவை அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெலிங்டனில் கடந்த மாதம் நடைபெற்ற கருத்தரங்கில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தயிலும் மத்திய அரசு சிறிலங்காப் படை அதிகாரிகள் இருவருக்கு வெலிங்டனில் பயிற்சி அளித்து வரும் இரகசியம் நேற்று வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் |
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012
வெலிங்டனில் சிறிலங்காப் படையதிகாரிகளுக்கு பயிற்சி எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் கைது
ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012
இணைய செய்தி