26.08.2012.
இதே வேளை தெல்லிப்பழையில் வீடு உடைத்து உள்நுழைந்த
திருடர்கள் சுமார் 22 ஆயிரம் ரூபா பெறுமதியான ரீ.வி, பிளேயர் என்பவற்றைத் திருடிச்
சென்றுள்ளனர்.
உடுவில் மத்தியிலுள்ள வீட்டில் இரவு நேரம்
அங்கிருந்த 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இடைக்குறிச்சி மேற்கு, வரணியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா
பெறுமதியான தங்கச் சங்கிலியை ஒருவர் திருடிச்சென்றுள்ளார்.
அது பற்றிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட
தையடுத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்ப்பட்டார்.
உடுவில் உதய சூரின் வீதியால் தனியால் சென்ற பெண்ணிடமிருந்து 63 ஆயிரம் ரூபா
பெறுமதியான தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அபகரித்துச்
சென்றுள்ளனர்.
நல்லூர் நாயன்மார்கட்டு இருகுக்களிடையே சில
நாள்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதலில் வீடு ஒன்றிலிருந்து 80 ஆயிரம் ரூபா
பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் எவரும் கைது
செய்யப்படவில்லை.
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த
திங்கட்கிழமை 87 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான சங்கிலியைக் களவாடியமை தொடர்பில்
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணையின் மூலமாக இரண்டு சந்தேக நபர்களை
பொலிஸார் கைது செய்ததோடு களவுபோன சங்கிலி சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும்
தெரிவித்தார்.
பொலிஸார் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று
இடம்பெற்ற போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
|
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012
பாடசாலைகளிலும் திருட்டு ஆரம்பம்; யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தகவல்
ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012
இணைய செய்தி