05.08.2012.
இலங்கைக் கடற்படை யினர் வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள் ளனர். வடக்குக் கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் இந்தத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தக் கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் திகதி இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும், சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய தளங்கள் அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.அதேவேளை மாதகல் சம்பில்துறையில் இலங்கைக் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கும் கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு கடற்படையினரால் தென்பகுதியில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு நிலையத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார் எனத் தெரியவருகிறது
|
0 comments:
கருத்துரையிடுக