siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கண்களில் ஏற்படும் சிவப்புக்களை போக்கும் ஆமணக்கு


  201208-06 ஆமணக்கு விதைகள் மிகுந்த நச்சுத்தன்மைகளைக் கொண்டவை. இரண்டு ஆமணக்கு விதைகள் மரணத்தைக் கொண்டுவரப் போதுமானவை. ஆனால், இவற்றைக் கொதிக்க வைத்து எண்ணெய் வடித்தெடுக்கும்போது அதில் நச்சுக்கள் இருப்பதில்லை. ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எண்ணெய் வடித்து எடுக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் குடல் ஏற்றம், வயிற்று வலி, அல்சர் புண்கள், கண், மூக்கு, காது, வாய்ப் பகுதிகளில் உருவாகின்ற எரிச்சல்களைப் போக்கி குணப்படுத்த உதவுகின்றது. இவை நமது உடலைப் பொன்னிறமாக்குகின்றது. குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கும் வயிறு கழியவும், பேதியைக் கொண்டு வரவும் இந்த எண்ணெயைக் கொடுப்பார்கள். பசியின்மையைப் போக்குகிறது. அதிகமான சளித்தொல்லை இருந்தாலோ அல்லது இரைப்பு, இருமல் இவைகளால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ சிற்றாமணக்கு இரண்டு பங்கும், தேன் அரைப்பங்கும் சேர்த்து கலந்து கொடுக்கலாம். மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு அரைத்தேக்கரண்டி அளவு கொடுப்பார்கள். தேன் கலந்தும் கொடுக்கலாம். ஆமணக்கு எண்ணெயை தேன் அல்லது உப்பு கலந்த தண்ணீரில் சுக்கு நீர், சோம்புத் தீநீர், ஓமத்தீநீர், எலுமிச்சம் பழரசம் மற்றும் சர்க்கரை கலந்த நீர், பால், தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கலாம். தாய்மார்களின் மார்பக காம்புப் பகுதியில் புண், வீக்கம் அல்லது வெடிப்பு இருந்தால் இந்த எண்ணெயை துணியில் நனைத்துப் போடலாம். பலவிதமான தைலத் தயாரிப்புகளிலும் ஆமணக்கு எண்ணெய் கலக்கப்படுகின்றது. தொடர்ந்து மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவதால் அவர்களின் கண்கள் சிவப்பாகக் காட்சியளிக்கும். சிற்றாமணக்கு எண்ணெயையும், தாயப்பாலையும் கூட்டி, குழைத்து கண்களில் விடுவதால் கண்களில் காணப்படும் சிவப்பு நிறம் போய்விடுகிறது. தூசுக்கள், கற்கள் விழுந்து விடுவதால் கண்கள் சிவந்து போனாலும் இந்த எண்ணெயை விடலாம். நமது உடலின் மேல் தோல் உராய்ந்து இரத்தம் கிளம்பத் தொடங்கினால் இந்த எண்ணெயைத் தடவி, எரிச்சலைப் போக்கி குணப்படுத்தலாம். இதனால் அந்த இடம் முன்பிருந்த நிலையை அடையும். ஆமணக்கு நெய் மூன்று பங்கு, எண்ணெய் இரண்டு பங்கு, பசுவின் நெய் ஒரு பங்கு கலந்து கொடுப்பதன் மூலம் வலிப்பு நோய் தீரும். ஆமணக்கு நெய் இரண்டு பங்கு, எண்ணெய் மூன்று பங்கு அளவிற்குக் கலந்து கொடுத்து வந்தால் சளித் தொல்லையால் உண்டாகும் நோய்கள் நீங்கி குணம்பெறும். 30 மில்லி ஆமணக்கு எண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ, இஞ்சிச் சாறு கலந்தோ கொடுத்து வந்தால், நான்கைந்து முறை பேதி உண்டாகும். பசியின்மை வயிற்று வலி ஆகியவையும் தீரும்.

0 comments:

கருத்துரையிடுக