siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

துளசிதரன் சாந்திராஜாவை நாடுகடத்த அவுஸ்ரேலியா முடிவு _

_
05.08.2012.28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதே சபாடசாலையின் முன்னாள் தலைவரான துளசிதரன் சாந்திராஜா என்பவரை இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம், கடந்த முதலாம் திகதி தீர்மானித்துள்ளது.

இவரை நாடு கடத்தும் உத்தரவை அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கலோ ரொக்ஷன் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக விசா அனுமதியில் அவுஸ்திரேலியா சென்றிருந்த இந்த நபர், மெல்பேர்ன் சர்வதேச பாடசாலையில் பணியாற்றி வந்ததுடன், விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

சந்திராஜா நாடு கடத்தப்படுவதை தடுக்க புலிகளின் ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்ட, மகஜர் ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கையளித்துள்ளதாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 comments:

கருத்துரையிடுக